India Women vs England Women: 3 அரைசதம் அடித்து தொட முடியாமல் போன இலக்கு.. இந்திய அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து!

India Womens Cricket Team: முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி (IND W vs ENG W) 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 300 ரன்களை எளிதாக கடக்கும் என்று தோன்றியபோது, இறுதி ஓவர்களில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் தன்மையை மாற்றினார். இருப்பினும் 289 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியால் வெற்றியை துரத்த முடியவில்லை. 

India Women vs England Women: 3 அரைசதம் அடித்து தொட முடியாமல் போன இலக்கு.. இந்திய அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து!

இந்திய மகளிர் அணி

Published: 

19 Oct 2025 22:18 PM

 IST

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டி (ICC Womens Cricket World Cup) இன்று அதாவது 2025 அக்டோபர் 19ம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணி (IND W vs ENG W) 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது. ஒரு கட்டத்தில் இங்கிலாந்து அணி 300 ரன்களை எளிதாக கடக்கும் என்று தோன்றியபோது, இறுதி ஓவர்களில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியின் தன்மையை மாற்றினார். இருப்பினும் 289 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய மகளிர் அணியால் வெற்றியை துரத்த முடியவில்லை.

இந்திய மகளிர் அணிக்கு 289 ரன்கள் இலக்கு:

289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனையாக பிரதிகா ராவல் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். அதிரடியாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பிரதிகா ராவல் வெறும் 6 ரன்களுக்கு விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து, ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்த ஹர்லீன் தியோல் இன்னிங்ஸை நிலைநிறுத்தினர். இவர்களின் கூட்டணியால் இந்திய அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்தது. அடுத்த ஓவரிலேயே ஹர்லீன் தியோல் 31 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி 11 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 48 ரன்களை தொட்டது.

ALSO READ: இந்திய மகளிர் அணி அரையிறுதிக்கு எப்படி செல்லும்..? சமன்பாடு என்ன..?

மந்தனாவுடன் கூட்டணி அமைத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இந்திய அணியின் எண்ணிக்கையை தூக்கி கொண்டு சென்றனர். இருவரும் நிதானத்துடன், அதேநேரத்தில் விவேகத்துடன் விளையாடி அரை சதங்களை கடந்தனர். இது 2025 ஆம் ஆண்டில் ஸ்மிருதி மந்தனாவின் ஒன்பதாவது அரைசதமாகும். ஸ்மிருதி மந்தனா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோரின் 83 ரன்கள் பார்ட்னர்ஷிப்பால், இந்தியா 25 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுக்கு 125 ரன்கள் எடுத்தது. அப்போது, இந்திய அணியின் வெற்றிக்கு 150 பந்துகளில் 164 ரன்கள் தேவையாக இருந்தது.

இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 70 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்தியா 167 ரன்களில் மூன்றாவது விக்கெட்டை இழந்தது. ஸ்மிருதி மந்தனா மறுமுனையை கெட்டியாக பிடித்து கொண்டு ரன்களை விரட்டி கொண்டிருந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வெற்றியை தேடி தருவார் என நினைத்த நிலையில், 88 ரன்களுடன் ஸ்மிருதி மந்தனா தனது விக்கெட்டை விட்டு கொடுத்தார்.

ALSO READ: தீபாவளி பரிசை தர தவறிய இந்திய அணி.. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி!

இதன்பிறகே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. தீப்தி சர்மாவுடன் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கூட்டணி அமைக்க முயற்சி செய்கையில், ரிச்சா கோஷ் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். அதனை தொடர்ந்து, தீப்தி சர்மாவும் தனது பங்கிற்கு 50 ரன்கள் அடித்த ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றிக்கு 12 பந்துகளில் 20 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. தொடர்ந்து, அமோன்ஜோத் மற்றும் ராணா போராடினாலும் இந்திய மகளிர் அணியால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை. இதனால் இங்கிலாந்து அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.