GT vs KKR : பிட்ச் நிலவரம் எப்படி? போட்டி யாருக்கு சாதகம்?

IPL 2026 : ஐபிஎல் 2026 தொடரின் 25வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.  இந்த போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் பிட்ச் நிலவரம் மற்றும் போட்டி யாருக்கு சாதகமாக உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.

GT vs KKR : பிட்ச் நிலவரம் எப்படி? போட்டி யாருக்கு சாதகம்?

சுப்மன் கில் - ரஹானே

Updated On: 

17 Apr 2026 18:17 PM

 IST

ஐபிஎல் 2026 தொடரின் 25வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.  இந்த போட்டி  ஏப்ரல் 17, 2026 அன்று  அகமதாபாத்தில் உள்ள பிரபலமான நரேந்திர மோடி ஸ்டேடியம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 2ல் வெற்றி பெற்று 6வது இடத்திலும், 5 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஒரு போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில்,  4 தோல்வி அடைந்து கடைசி இடத்திலும் உள்ளது.

கொல்கத்தா அணி முதல் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்திலும், குஜராத் அணி பிளே ஆப் சுற்றில் இடம் பிடிக்க முதல் 4 இடங்களில் வர வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதால் இந்த போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்  நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிட்ச் நிலவரம் எப்படி இறுக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.

இதையும் படிக்க : என்னதான் ஆச்சு பும்ராவுக்கு? ஐபிஎல் தொடர் சொதப்பல்.. தடுமாற்றம் ஏன்?

பிட்ச் நிலவரம் எப்படி?

நரேந்திர மோடி ஸ்டேடியத்தின் பிட்ச் சமீப காலமாக பேட்ஸ்மென்களுக்கு சாதகமாக இருந்து வருகிறது. குறிப்பாக தொடக்க ஓவர்களில் பந்து நல்ல பவுன்ஸ் ஆகி வருகிறது. இதனால் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட்ஸ்களை அடிக்க முடியும் என கூறப்படுகிறது. குறிப்பாக புது பந்துகள் பவுன்ஸாகி நன்றாக பேட்டிற்கு வரும் என்பதால் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இந்த பிட்சில் முதலில் பேட்டிங் அணி 180 ரன்களுக்கு மேல் எடுத்தால் நல்ல இலக்காக கருதப்படும். அதே நேரம் இரண்டாவது இன்னிங்ஸில் பனி அதிகம் இருந்தால் சேசிங் செய்யும் அணிக்கு அது சாதகமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த போட்டியில் குஜராத் அணி பவர் பிளே வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் களமிறங்கவிருக்கிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் உள்ளது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான அணி வெற்றி பெற்றாகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இதையும் படிக்க : தட்டித்தூக்கிய பஞ்சாப் அணி.. திணறும் முன்னாள் சாம்பியன்ஸ்.. ஐபிஎல் புள்ளி அட்டவணை!

மற்றொரு பக்கம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் ஆரம்பம் முதலே தடுமாறி வருகிறது.  தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து வருவதால் இந்த போட்டியில் கட்டாம் வென்றாக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த கேப்டன் ரஹானே தலைமையில் அந்த அணி வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது.  கொல்கத்தா அணியை பொறுத்தவரை பந்து வீச்சு பலமாக கருதப்படுகிறது. மற்றொரு பக்கம் குஜராத் அணியின் பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது.  குறிப்பாக ரஷீத் கான், சுனில் நரேன் போன்ற ஸ்பின்னர்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

மேலும் பிட்சை பொறுத்தவரை இன்று அதிக ரன்கள் குவியும் என பார்க்கப்படுவதால்,  டாஸ் வெல்லும் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்யலாம் என கூறப்படுகிறது. இந்த போட்டி கொல்கத்தாவுக்கு வாழ்வா சாவா போட்டி என்பதால் ஸ்டேடியத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.

Follow Us
பாடகி கேஎஸ் சித்ரா தனது மகளை பற்றி பகிர்ந்த பதிவு.. உடன் அன்பை பகிர்ந்த பாடகர்கள்..
கிணற்றுக்குள் விழுந்த சிங்கம் - 30 நிமிடங்களில் வனத்துறையினரால் பாதுகாப்பாக மீட்பு
பெட்ரோலுக்கு ரூ.18 இழப்பு, டீசலுக்கு ரூ. 35 இழப்பு - நஷ்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள்
ஈரானுக்குள் நுழையும் அனைத்து கப்பல்களையும் நிறுத்தம் - அமெரிக்கா கடும் நடவடிக்கை