Sourav Ganguly: இந்திய அணியின் பயிற்சியாளராக வருவீர்களா..? மௌனம் கலைத்த சவுரவ் கங்குலி!

Indian Cricket Team Head Coach: சவுரவ் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் ஆர்வம் கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். 2013 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பிசிசிஐ தலைவராகப் பணியாற்றிய அவர், பயிற்சியாளர் பதவி குறித்து இதுவரை யோசிக்கவில்லை என்றாலும், தற்போது அதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்துள்ளார். அரசியல் பதவிகளில் ஈடுபடவும் அவர் விருப்பம் தெரிவிக்கவில்லை.

Sourav Ganguly: இந்திய அணியின் பயிற்சியாளராக வருவீர்களா..? மௌனம் கலைத்த சவுரவ் கங்குலி!

சவுரவ் கங்குலி

Published: 

23 Jun 2025 08:40 AM

 IST

2025 சாம்பியன்ஸ் டிராபி (2025 Champions Trophy) வெற்றிக்கு பிறகு, சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணி தொடர்பாகவும், இந்திய தலைமை பயிற்சியாளர் தொடர்பாகவும் ஒரு ஆச்சரியமான செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் (Indian Cricket Team Head Coach) பதவிக்கு இப்போது ஒரு பெரிய போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. அதாவது, முன்னாள் இந்திய அணியின் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி (Sourav Ganguly) இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக விருப்பம் தெரிவித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், அரசியல் பற்றியும் பேசியுள்ளார்.

சவுரவ் கங்குலி சொன்னது என்ன..?

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணியின் பயிற்சியாளராக வருவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். வருகின்ற 2025 ஜூலை 8ம் தேதியுடன் 53 வயதை எட்டவுள்ள சவுரவ் கங்குலி, 2018-19 மற்றும் 2022-24 க்கு இடையில் டெல்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணியின் பயிற்சியாளராக விரும்புகிறீர்களா என்று ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில் சவுரவ் கங்குலியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கங்குலி,”நான் அதைப் பற்றி இதுவரை யோசிக்கவில்லை, ஏனென்றால் நான் வெவ்வேறு முக்கிய பதவிகளில் இருந்துள்ளேன். நான் கடந்த 2013ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் மற்றும் அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபிறகு, பிசிசிஐ தலைவரானேன்” என்று பதிலளித்தார்.

பயிற்சியாளர் பதவி:

இந்தியாவின் பயிற்சியாளராக சவுரவ் கங்குலி இன்னும் அதிக பங்களிப்பை அளித்திருக்கலாம் என்று கேள்வி எழுப்பியபோது, ​​கங்குலி, “அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம். எனக்கு இப்போது 52 வயதுதான் ஆகிறது. அதனால், பயிற்சியாளராக வருவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பார்ப்போம்” என்றார்.

தொடர்ந்து, வருகின்ற 2026ம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு  முன்பு ஏதேனும் அரசியல் கட்சியில் சேருவீர்களா என்று கேட்டபோது, ​​கங்குலி சிரித்துக் கொண்டே, “எனக்கு எந்த ஆர்வமும் இல்லை” என்றார். அடுத்ததாக, கங்குலி மேற்கு வங்காளத்தில் முதலமைச்சராக வாய்ப்பு வழங்கப்பட்டால் என்ன செய்வது என்று கேட்கப்பட்டது? இதற்கும் அவர், “எனக்கு இதில் ஆர்வமும் இல்லை” என்று தெரிவித்தார்.

ஆம்புலன்ஸ் தர மறுத்த மருத்துமனை... தாயின் உடலை ஸ்ட்ரெச்சரில் சுமந்து சென்ற மகன்கள்
உத்திரப்பிரதேசத்தில் தொடரும் ஓநாய் தாக்குதல்.. பீதியில் பொதுமக்கள்..
திருப்பதி வைகுண்ட ஏகாதசி.. சிறப்பு டிக்கெட்டுகளை அறிவித்த தேவஸ்தானம்..
25 மணி நேரம்... உலகின் நீண்ட நேரம் பயணிக்கும் விமானத்தை அறிமுகப்படுத்திய சீனா