MS Dhoni Madurai Visit: புதிய சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் திறப்பு விழா.. மதுரை மகனாக வரும் எம்.எஸ்.தோனி..!
MS Dhoni Inaugurate Cricket Stadium in Madurai: மகேந்திர சிங் தோனி மதியம் 1.25 மணிக்கு வேலம்மாள் மருத்துவ கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து 2 மணி முதல் 4 மணிக்குள் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட்டு, தோனி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எம்.எஸ்.தோனி
இந்திய அணியின் (Indian Cricket Team) முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி (M.S.Dhoni) ரூ.325 கோடி செலவில் கட்டப்பட்ட வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தை திறந்து வைப்பதற்காக இன்று அதாவது 2025 அக்டோபர் 9ம் தேதி பிற்பகல் 1 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் மதுரை விமான நிலையத்தை சென்றடைந்தார். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் வேலம்மாள் கல்வி அறக்கட்டளையால் உருவாக்கப்பட்ட இந்த மைதானம், சிந்தாமணி ரிங் ரோட்டில் வேலம்மாள் மருத்துவமனைக்கு அருகில் 11.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா எப்போது..?
VELAMMAL CRICKET STADIUM IS READY TO WELCOME OUR THALA MS DHONI 💛💪
– Around 4 PM today pic.twitter.com/6B779YLN35
— Prakash (@definitelynot05) October 9, 2025
மகேந்திர சிங் தோனி மதியம் 1.25 மணிக்கு வேலம்மாள் மருத்துவ கல்லூரிக்கு சென்றார். அங்கு அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 2 மணி முதல் 4 மணிக்குள் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட்டு, தோனி உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வேலம்மாள் கல்வி அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், “ தோனி சாரின் உரை மற்றும் மாணவர்களுடனான உரையாடல் 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கும். இன்றைய தொடக்க விழா வேலம்மாள் கல்வி நிறுவனங்களின் மாணவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். இவரது உரைக்கு பிறகு, அவர் கிரிக்கெட் கிரிக்கெட் ஸ்டேடியம் திறக்கப்பட்டு, தோனி மதுரை விமான நிலையத்திற்கு புறப்படுவார். மதுரையில் அவரது மொத்த நிகழ்ச்சி அட்டவணை ஒரு மணிநேரம் 20 நிமிடங்கள் மட்டுமே இருக்கும்” என்று தெரிவித்திருந்தது.
ALSO READ: இந்திய அணி எப்போது ஆஸ்திரேலியா செல்லும்? ரோஹித் – கோலி பயணம் எப்போது..?
கிரிக்கெட் ஸ்டேடியத்தின் சிறப்பம்சங்கள் என்ன..?
🚨 MS Dhoni to inaugurate Tamil Nadu’s second international stadium in Madurai today. pic.twitter.com/2fpYszYnmB
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 9, 2025
ரூ. 325 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பல பயிற்சி இடங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ், மருத்துவ வசதிகள் மற்றும் போதுமான கார் பார்க்கிங் இடம் ஆகியவை உள்ளன. நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால் அமைப்பு மழைக்காலங்களில் தண்ணீரை விரைவாக உறிஞ்சும்.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த கிரிக்கெட் மைதான நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பிறகு விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கேலரி 20,000 பார்வையாளர்கள் அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது, முதல் கட்டமாக ஏற்கனவே 7,300 இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. மைதானத்தையும் அதன் சுற்றுப்புறங்களையும் கண்காணிக்க சுமார் 197 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
சென்னை சேப்பாக்கத்திற்குப் பிறகு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கிரிக்கெட் மைதானமாக இது இருக்கும். எதிர்காலத்தில் TNPL மற்றும் ரஞ்சி டிராபி போட்டிகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஐபிஎல் போட்டிகளை நடத்த முயற்சிகளும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.