இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இங்கிலாந்து அணி அறிவிப்பு
England Test Cricket Team : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், ஒலி போப் மற்றும் பென் டக்கெட் போன்ற மூத்த வீரர்கள் களமிறங்குகின்றனர்.

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணி அறிவிப்பு
கிட்டத்தட்ட 3 மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் கடந்த ஜூன் 3, 2025 அன்றுடன் முடிவடைந்தன. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. இதனையடுத்து வருகிற 2025 – 27 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இந்தியாவும் இங்கிலாந்தும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவிருக்கின்றன. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 20, 2025 அன்று இங்கிலாந்தில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் மொத்தம் 14 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியில் இங்கிலாந்து அணியில் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் ஜோ ரூட், ஒலி போப் மற்றும் பென் டக்கெட் போன்ற மூத்த வீரர்கள் களமிறங்குகின்றனர். அதே நேரத்தில், சில இளம் வீரர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் கிராலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ்.
வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்குத் திரும்பியுள்ளார், அதே நேரத்தில் அந்த அணியின் முக்கிய வீரர் அட்கின்சன் காயம் காரணமாக இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஜாக் க்ரௌலி, ஹாரி புரூக், சாம் குக் மற்றும் ஜேக்கப் பெதெல் போன்ற நட்சத்திர வீரர்களும் இந்த அணியில் உள்ளனர். மேலும், சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர், வேகப்பந்து வீச்சாளர் வரிசையில் ஜேமி ஓவர்டன், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ் மற்றும் பிரைடன் கார்ஸ் ஆகியோர் அடங்குவர். இந்த அணியில் ஜானி ஸ்மித் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியின் வீரர்கள் தொடர்பான எக்ஸ் தள பதிவு
Series Loading : ◼◼◼◻
Who is the first name in your XI?
🏴 #ENGvIND 🇮🇳 pic.twitter.com/YxUeU4Vv3z
— England Cricket (@englandcricket) June 5, 2025
அதே போல கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஜேமி ஓவர்டன் டெஸ்ட் அணிக்குத் திரும்பியுள்ளார். அதே நேரம் கஸ் அட்கின்சன் இல்லாதது அணிக்கு ஒரு பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியின் போது அட்கின்சனுக்கு கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் அவர் முழுமையாக குணமடையாததால் அவர் இந்தப் போட்டியில் பங்கேற்பது சிரமம்.
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி படுதோல்வியடைந்ததால் இந்தத் தொடர் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும், பென் ஸ்டோக்ஸின் தலைமையில், இந்த முறை அந்த அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
வலுவான நிலையில் இந்திய அணி
மறுபுறம், இந்திய அணியும் இந்தத் தொடருக்குத் தயாராக உள்ளது. சமீபத்தில் இந்தியா ‘ஏ’ அணி லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடியது. அதில் கருண் நாயர் அற்புதமான இரட்டை சதம் அடித்தார். பந்து வீச்சிலும் இந்திய அணி வீரர்கள் மிரட்டினர். இதனால் இங்கிலாந்து அணி இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களிடம் கடுமையாக போராட வேண்டியிருக்கும்.