BCCI and Dream11 Deal: ஆசியக் கோப்பைக்கு முன்பு அதிர்ச்சி.. பிசிசிஐ – ட்ரீம் 11 ஒப்பந்தம் முறிவு.. டைட்டில் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடுமா இந்திய அணி?

Dream11 Ends BCCI Sponsorship: 2025 ஆசியக் கோப்பைக்கு முன்னர், ட்ரீம்11 நிறுவனம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உடனான ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டுள்ளது. புதிய ஆன்லைன் கேமிங் சட்டத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ, எதிர்காலத்தில் இதுபோன்ற நிறுவனங்களுடன் ஈடுபடாது என்று தெரிவித்துள்ளது.

BCCI and Dream11 Deal: ஆசியக் கோப்பைக்கு முன்பு அதிர்ச்சி.. பிசிசிஐ - ட்ரீம் 11 ஒப்பந்தம் முறிவு.. டைட்டில் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடுமா இந்திய அணி?

சூர்யகுமார் யாதவ் - சஞ்சு சாம்சன்

Published: 

25 Aug 2025 14:44 PM

 IST

2025ம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை (2025 Asia Cup) தொடங்குவதற்கு இன்னும் சரியாக 15 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சரான ட்ரீம் 11 (Dream 11) உடனான ஒப்பந்தம் பிரியப்போவதாக கூறப்படுகிறது. ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025ன்படி நாடாளுமன்றத்தின் இரு அவைகளாளும் கடந்த 2025 ஆகஸ்ட் 21ம் தேதி நிறைவேற்றப்பட்டத்தை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ட்ரீம் 11 பிரிந்து செல்ல உள்ளன. இதுகுறித்து பேசிய பிசிசிஐ (BCCI) செயலாளர் தேவஜித் சைகியா, எதிர்காலத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இதுபோன்ற எந்த அமைப்புகளுடன் ஈடுபடாது என்று தெரிவித்தார்.

ALSO READ: ரோஹித், கோலிக்கு விரைவில் பிரியாவிடையா..? பிசிசிஐ விளக்கம்..!

கடந்த 2025 ஆகஸ்ட் 21ம் தேதி நாடாளுமன்றத்தில் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டு ஆப்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் படி இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டுக்கு எதிரான மசோதா சட்டமானால், இந்த விதிகளை மீறுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். இதனை தொடர்ந்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறியதாவது, “ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025 அமல்படுத்தப்பட்ட பிறகு, பிசிசிஐ மற்றும் ட்ரீம்11 நிறுவனங்கள் தங்கள் ஒப்பந்தத்தை முடித்துக் கொள்கின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு நிறுவனத்துடனும் எந்த உறவும் இல்லை என்பதை பிசிசிஐ உறுதி செய்யும்” என்று தெரிவித்தார்.

ஒப்பந்தம் என்ன ஆனது..?

கடந்த 2023ம் ஆண்டு பிசிசிஐ மற்றும் ட்ரீம் 11 இடையே ரூ. 358 கோடிக்கு 3 வருட ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய சீனியர் ஆண்கள் அணி, பெண்கள் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணியின் ஜெர்சியில் இந்த நிறுவனத்தின் பிராண்ட் பெயர் இடம் பெற்றிருக்கும். இந்த ஒப்பந்தமானது வருகின்ற 2026ம் ஆண்டு வரை இருந்தது. தற்போது ஆன்லைன் கேமிங் தொடர்பாக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த ஒப்பந்தம் முன்கூட்டியே நிறுத்தப்படுகிறது.

டைட்டில் ஸ்பான்சர் இல்லாமல் இந்திய அணி விளையாடுமா…?


ட்ரீம் 11 தற்போது பிசிசிஐ உடனான ஒப்பந்தத்தை முறித்துகொள்ளும் என்றால், இந்திய கிரிக்கெட் அணி ஆசிய கோப்பையில் டைட்டில் ஸ்பான்சர் இல்லாமல் விளையாடுமா என்ற கேள்வி எழுகிறது. அதன்படி, குறுகிய கால ஒப்பந்தத்தில் பல்வேறு நிறுவனங்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ALSO READ: ரோஹித் முதல் புஜாரா வரை.. 2025ல் ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள்..!

2025 ஆசியக் கோப்பை எப்போது..?

2025 ஆசிய கோப்பை வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி தொடங்குகிறது. இந்தியாவின் முதல் போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 10ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் நடைபெறுகிறது. இதன் பிறகு, இந்தியா தனது அடுத்த போட்டியில் வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராகவும், குரூப் நிலையில் இந்தியாவின் கடைசி போட்டி வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி ஓமனுக்கு எதிராகவும் விளையாடுகிறது.