IPL 2026: தீவிரமாகும் தோனியின் காயம்.. ஐபிஎல் 2026ல் விளையாடுவது சந்தேகமா? ஃபிளெமிங் கொடுத்த அப்டேட்!

MS Dhoni Injury Update: கால் தசை காயத்திலிருந்து மீண்டு வரும் ஜாம்பவான் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான எம்.எஸ்.தோனி, தனது காயத்திலிருந்து மீண்டு வரும் முயற்சியில் மற்றொரு பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஐபிஎல் 2026 சீசனில் முதல் இரண்டு வாரங்களைத் தவறவிட்ட தோனி மீண்டும் களத்திற்குத் திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

IPL 2026: தீவிரமாகும் தோனியின் காயம்.. ஐபிஎல் 2026ல் விளையாடுவது சந்தேகமா? ஃபிளெமிங் கொடுத்த அப்டேட்!

எம்.எஸ்.தோனி

Published: 

27 Apr 2026 14:55 PM

 IST

இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2026) 2026 சீசனில் மகேந்திர சிங் தோனி மீண்டும் களமிறங்குவது மேலும் தாமதமாகும் என சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் சூசகமாகத் தெரிவித்துள்ளார். கால் தசை காயத்திலிருந்து மீண்டு வரும் ஜாம்பவான் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான எம்.எஸ்.தோனி, தனது காயத்திலிருந்து மீண்டு வரும் முயற்சியில் மற்றொரு பின்னடைவைச் சந்தித்துள்ளார். ஐபிஎல் 2026 சீசனில் முதல் இரண்டு வாரங்களைத் தவறவிட்ட தோனி மீண்டும் களத்திற்குத் திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், தோனி கிட்டத்தட்ட ஒரு மாதமாக விளையாடாமல் இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2026 சீசனில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ளது. ஆனால், ஒரு போட்டியில் கூட தோனி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: ருதுராஜுக்கு பதிலாக கேப்டனாக களமிறங்கும் சஞ்சு சாம்சன்? உண்மை என்ன?

எம்.எஸ்.தோனி விளையாடுவாரா?

நேற்று அதாவது 2026 ஏப்ரல் 26ம் தேதி குஜராத் டைட்டன்ஸிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்த பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தோனி விளையாட மிகவும் ஆர்வமாக இருக்கிறார். இருப்பினும், அவரது கெண்டைக்கால் காயங்கள் மிகவும் தீவிரமானவையாக உள்ளது. தோனி மிகவும் கடினமாக ஓடி, மீண்டும் கெண்டைக்காலில் காயம் ஏற்பட்டால், அவர் இந்த சீசன் முழுவதிலிருந்தும் வெளியேற நேரிடும். அதனால்தான் நாங்கள் அவரை ஆரம்பத்திலேயே, பயிற்சிப் போட்டியின்போது விளையாட முயற்சித்தோம். எனக்குத் தெரிந்தவரை, அந்த நேரத்தில் அவரது காயம் மீண்டும் ஏற்பட்டது. அன்று முதல், தோனி தனது உடல்நிலையை மேம்படுத்த கடுமையாக உழைத்து வருகிறார். ஆனால், அவருக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தோனி திரும்புவதற்கு நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக காலம் ஆகிறது.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தோனி மீண்டும் திரும்புவது குறித்த இறுதி முடிவு அவரிடமே உள்ளது. சிஎஸ்கே அணியின் துணைப் பணியாளர்கள் அவரது முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் அவர்தான் எங்களுக்கு வழிகாட்டி. அவர் பிசியோதெரபிஸ்ட்டுடன் கடினமாகப் பணியாற்றி, அனைத்து மறுவாழ்வுப் பணிகளையும் செய்து வருகிறார். நாங்கள் அவரது அடுத்த தகவலுக்காகக் காத்திருக்கிறோம். ஆனால், இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாதீர்கள் என்றுதான் என்னால் கூற முடியும். ஏனென்றால், அவர் தொடர்ந்து தன்னை மேம்படுத்திக்கொண்டு, சாத்தியமான அனைத்தையும் செய்து வருகிறார்,” என்று கூறினார்.

ALSO READ: ‘அவரது தந்தைக்காக விளையாடினார்’.. ரிங்கு சிங்கின் வருங்கால மனைவி சொன்ன ரகசியம்!

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, கடந்த 2026 ஏப்ரல் 23ம் தேதி வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற அணியின் பயிற்சி அமர்வின்போது, ​​சிஎஸ்கே-வின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?