T20 World Cup 2026: டி20 உலகக் கோப்பையில் விலகும் பாகிஸ்தான்.. நிலைப்பாட்டை முன்வைத்த பிசிசிஐ!
India vs Pakistan: இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால், அது பொருளாதார ரீதியாகவும் விளையாட்டு ரீதியாகவும் பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். ஐசிசி நிகழ்வுகளிலிருந்து அது பெறும் குறிப்பிடத்தக்க வருவாய் பாதிக்கப்படும். மேலும், எதிர்கால போட்டிகள், வருவாய் பகிர்வு மற்றும் பிற கிரிக்கெட் நிகழ்வுகளை நடத்துவதில் பாகிஸ்தானின் நிலை பலவீனமடையக்கூடும்.

இந்தியா - பாகிஸ்தான் டி20 போட்டி
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) வருகின்ற 2026 பிப்ரவரி 15ம் தேதி கொழும்பில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடப்போவது இல்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி, டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து பாகிஸ்தான் விலகினால் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) எச்சரித்தது. இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எச்சரித்தது சரிதான் என்று பிசிசிஐ துணை தலைவர் ராஜூவ் சுக்லா தெரிவித்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவிலிருந்து போட்டிகளை இலங்கைக்கு மாற்றுவதற்கான கோரிக்கையை ஐசிசி ஏற்றுகொண்டபோதும், பாகிஸ்தானின் இந்த முடிவு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக பிசிசிஐ தனது முதல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ALSO READ: பாகிஸ்தான் மீது கோபத்தில் ஐசிசி.. காத்திருக்கும் 5 நடவடிக்கைகள்!
ராஜூவ் சுக்லா விளக்கம்:
இதுகுறித்து பிசிசிஐ துணை தலைவர் ராஜூவ் சுக்லா தெரிவிக்கையில், “பாகிஸ்தான் விலகுவது குறித்து ஐசிசி ஒரு முக்கிய முடிவை வெளியிட்டுள்ளது. இது விளையாட்டு திறனை எடுத்துக்காட்டுகிறது. ஐ.சி.சி-யுடன் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம். ஐ.சி.சி-யிடம் பேசும் வரை பிசிசிஐ எந்தக் கருத்தையும் தெரிவிக்காது” என்று தெரிவித்தார்.
குறிப்பிடப்படாத காரணங்களுக்காக பிசிசிஐயின் அறிவுறுத்தலின் பேரில் வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஐபிஎல்லில் இருந்து நீக்கப்பட்டதால் இந்த சர்ச்சை வெடித்தது . அதன் பிறகு பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி வங்கதேசம் இந்தியாவுக்கு பயணம் செய்ய மறுத்துவிட்டது. இதற்கு தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது ஆதரவை தெரிவித்து வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவுகளுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர். பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வியின் முடிவு உள்நாட்டு அரசியலுடன் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஐசிசியின் மிகவும் கடுமையானதாக இருந்தால், வாரியம் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
இந்தியாவுடன் விளையாடாததால் பெரும் இழப்பு:
இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியை பாகிஸ்தான் புறக்கணித்தால், அது பொருளாதார ரீதியாகவும் விளையாட்டு ரீதியாகவும் பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடும். ஐசிசி நிகழ்வுகளிலிருந்து அது பெறும் குறிப்பிடத்தக்க வருவாய் பாதிக்கப்படும். மேலும், எதிர்கால போட்டிகள், வருவாய் பகிர்வு மற்றும் பிற கிரிக்கெட் நிகழ்வுகளை நடத்துவதில் பாகிஸ்தானின் நிலை பலவீனமடையக்கூடும். மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக்கையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
ALSO READ: இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறாவிட்டால் ரூ.4500 கோடி இழப்பு – என்ன காரணம்?
அடுத்த 24 மணிநேரத்தில் எடுக்கப்படவுள்ள முக்கிய முடிவு:
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து நிலைமை குறித்த தெளிவான தகவல் எதுவும் தெரியவில்லை. கிரிக்கெட் ரசிகர்கள், ஐ.சி.சி மற்றும் இரு நாடுகளின் வாரியங்களும் அடுத்த 24 மணிநேரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. பாகிஸ்தான் தனது முடிவை மாற்றினால், டி20 உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டி நடைபெறுவது உறுதி.