டி20 உலகக்கோப்பை வெற்றி.. இந்திய அணிக்கு அடித்தது ஜாக்பாட்.. ரூ.131 கோடி பரிசுத் தொகை அறிவித்த பிசிசிஐ..

Reward For T20 World Cup Winners: அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக்கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட முதல் அணி என்ற பெருமையையும், மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்றுச் சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

டி20 உலகக்கோப்பை வெற்றி.. இந்திய அணிக்கு அடித்தது ஜாக்பாட்.. ரூ.131 கோடி பரிசுத் தொகை அறிவித்த பிசிசிஐ..

டி20 உலகக்கோப்பை வெற்றி

Updated On: 

10 Mar 2026 13:02 PM

 IST

2026ஆம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பைத் (2026 T20 World Cup) தொடரில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணிக்கு, பிசிசிஐ (BCCI) ரூ.131 கோடி பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2024ஆம் ஆண்டு பார்படாஸில் டி20 உலகக்கோப்பையை வென்றபோது, வாரியம் ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவித்திருந்தது. தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, அகமதாபாத்தில் வரலாற்று சாதனை படைத்து, டி20 உலகக்கோப்பை பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்ட முதல் அணி என்ற பெருமையைப் பெற்றதையடுத்து, பிசிசிஐ முந்தைய சாதனைக்கான பரிசுத் தொகையை விட கூடுதல் தொகையை அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: India vs New Zealand Final: தொடர்ச்சியாக 2வது முறை.. டி20 உலகக் கோப்பை சொல்லி அடித்த இந்திய அணி!

பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு:

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 2026-ல் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு ரூ. 131 கோடி ரொக்கப் பரிசை பிசிசிஐ அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையைக் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், டி20 உலகக்கோப்பையைத் தக்கவைத்துக்கொண்ட முதல் அணி என்ற பெருமையையும், மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற அணி என்ற வரலாற்றுச் சாதனையையும் இந்தியா படைத்துள்ளது.

இதைத்தொடர்ந்து, பிசிசிஐ மீண்டும் ஒருமுறை இந்திய அணி வீரர்கள், துணைக் குழுவினர் மற்றும் தேர்வாளர்களுக்கு இந்த வரலாற்றுச் சாதனைக்காக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்காலத்திலும் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐசிசி வழங்கும் பரிசுத் தொகை:

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலாலும் (ICC) கணிசமான ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. 2026 உலகக்கோப்பை வெற்றிக்காக ஐசிசி வழங்கும் சுமார் 3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.27.48 கோடி) இந்திய அணிக்குக் கிடைத்துள்ளது. இந்தத் தொகை, முந்தைய தொடரை விட 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, மொத்தம் 13.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற சாதனை பரிசுத் தொகையில் ஒரு பகுதியாகும்.

இதையும் படிக்க: கோப்பையுடன் வந்த தோனி, ரோஹித்.. அதிர்ந்த ஸ்டேடியம்! ஐசிசி சிறப்பு கௌரவம்..!

இறுதிப்போட்டியில் வென்றதற்கான இந்த மொத்தத் தொகையுடன், லீக் மற்றும் ‘சூப்பர் 8’ சுற்றுகளில் வென்ற ஒவ்வொரு போட்டிக்கும் சுமார் 31,154 அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.28.6 லட்சம்) என செயல்திறன் அடிப்படையிலான போனஸாகவும் இந்திய அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..