IND vs AUS: ரோஹித், கோலிக்கு இதுதான் கடைசி தொடரா..? பாட் கம்மின்ஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Rohit Sharma - Virat Kohli: பாட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் (IND vs AUS) இடம்பெறவில்லை. அதேநேரத்தில், வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி பெர்த்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றது குறித்து பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

IND vs AUS: ரோஹித், கோலிக்கு இதுதான் கடைசி தொடரா..? பாட் கம்மின்ஸ் சொன்ன அதிர்ச்சி தகவல்!

விராட் கோலி - ரோஹித் சர்மா

Published: 

15 Oct 2025 19:09 PM

 IST

இந்திய அணிக்கு எதிரான வரவிருக்கும் ஒருநாள் தொடர் சிறப்பு வாய்ந்தது என்றும், விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) ஆகியோர் ஆஸ்திரேலியாவில் விளையாடுவதை பார்க்க ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு என்று ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளது இந்திய ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, இதுவே ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு கடைசி ஒரு நாள் தொடராக இருக்குமோ என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வியை எழுப்பி வருகின்றனர். முதுகு வலி காயம் காரணமாக பாட் கம்மின்ஸ் இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் (IND vs AUS) இடம்பெறவில்லை. அதேநேரத்தில், வருகின்ற 2025 அக்டோபர் 19ம் தேதி பெர்த்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இடம்பெற்றது குறித்து பாட் கம்மின்ஸ் பேசியுள்ளார்.

ALSO READ: 2026 டி20 உலகக் கோப்பைக்கு முன்பு! இந்திய அணி எப்போது எந்த அணியுடன் மோதுகிறது?

பாட் கம்மின்ஸ் சொன்னது என்ன..?


இதுகுறித்து பாட் கம்மின்ஸ் கூறுகையில், “ கடந்த 15 ஆண்டுகளாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா கிட்டத்தட்ட ஒவ்வொரு இந்திய அணியிலும் அங்கம் வகித்து வருகின்றனர். எனவே., ஆஸ்திரேலிய ரசிகர்கள் இங்கு விளையாடுவதை பார்ப்பதற்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கலாம். அவர்கள் இந்தியாவுக்காக பல ஆண்டுகளாக ஜாம்பவான்களாக திகழ்ந்து வருகிறார்கள். மேலும், எந்த நாட்டு பார்வையாளர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளனர். நாங்கள் அவர்களுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம், கூட்டம் அலைமோதும்.” என்றார்.

தான் விளையாடாதது குறித்து பேசிய பாட் கம்மின்ஸ்:

தொடர்ந்து விளையாடாதது குறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “ இந்தியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை தவறவிடுவது ஏமாற்றமளிக்கிறது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே நிறைய உற்சாகம் உள்ளது. நீங்கள் எந்த நேரத்திலும் ஒரு போட்டியை தவறவிட்டால், அது ஏமாற்றமளிக்கிறது. ஆனால், இந்தியா போன்ற ஒரு பெரிய அணிக்கு எதிரான தொடரை தவறவிடுவது கொஞ்சம் கடினம்” என்றார்.

ALSO READ: ரோஹித் – கோலி எதிர்காலம் என்ன..? பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா பளீச் பதில்!

வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து பேசிய பாட் கம்மின்ஸ், “ மிட்செல் ஸ்டார்க் சிறிது காலமாக டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது குறித்து யோசித்து வந்தார் என்பது எனக்கு தெரியும். 3 வடிவங்களிலும் விளையாடுவது கடினம். அவர் என்னை விட சில ஆண்டுகள் மூத்தவர். மேலும், 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார், இது என்னை விட மிக அதிகம். எனவே, டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தவுள்ளார்” என்றார்.