Asia Cup Finals: 1984 முதல் 2023 வரை.. ஆசியக் கோப்பை பைனலில் ஆட்ட நாயகன் விருதை வென்றவர்கள்..!
Asia Cup Final Man of the Match: 1984 ஆம் ஆண்டு முதல் 2023 வரை நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்ற வீரர்களின் முழுமையான பட்டியல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. சுரிந்தர் கன்னா முதல் முகமது சிராஜ் வரை பல பிரபல வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2025 ஆசியக் கோப்பை (2025 Asia Cup) 17வது சீசன் வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்தபோட்டியில் இந்தியா (Indian Cricket Team), பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் ஆகிய 8 அணிகள் மோத இருக்கின்றன. எனவே, இந்த 8 அணிகளில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என ஆர்வம் எழுந்துள்ளது. இந்தநிலையில், ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை நடந்த 16 சீசன்களில் எந்த வீரர் இறுதிப்போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஆசியக் கோப்பை வரலாற்றில் இதுவரை நடந்த இறுதிப்போட்டியில் 2 முறை ஆட்ட நாயகனாக 2 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில், தொடர்ச்சியாக இரண்டு சீசன்களின் இறுதிப் போட்டியில் இந்த விருதை வென்ற வீரர் ஒருவர் உள்ளார்.
இதுவரை ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் சுமார் 14 வீரர்கள் ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளனர். இதில், 12 பேர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். அதே நேரத்தில் இறுதிப் போட்டியில் வென்ற பிறகு அணியிலிருந்து வெளியேறிய 2 வீரர்களும் உள்ளனர். முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்வோம்.




ALSO READ: ஆசியக் கோப்பையில் அதிக சிக்ஸர்கள்.. கெத்து காட்டப்போகும் சூர்யகுமார் யாதவ்!
ஆசிய கோப்பை (ஒருநாள் போட்டி வடிவம்)
Here are the Man of the Match winners in every Asia Cup final so far 🏆
Who will step up and shine in Asia Cup 2025? 🤔#AsiaCup2025 #ShikharDhawan #DineshKarthik #MohammedSiraj #AsiaCup #CricketTwitter pic.twitter.com/JS28r3HBU6
— InsideSport (@InsideSportIND) September 5, 2025
- ஆசிய கோப்பை போட்டி கடந்த 1984ம் ஆண்டு முதல் முறையாக ஒருநாள் ஆசியக் கோப்பை வடிவத்தில் நடத்தப்பட்டது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் ஆனது. இந்த போட்டியில் இந்திய வீரர் சுரிந்தர் கன்னா ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். சுரிந்தர் கன்னா 56 ரன்கள் எடுத்ததோடு மட்டுமல்லாமல், விக்கெட் கீப்பிங்கில் 2 ஸ்டம்பிங்குகளையும் செய்தார்.
- 1986ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய கோப்பையை இலங்கை அணி வென்றது. இருப்பினும், இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில் 67 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் வீரர் ஜாவேத் மியாண்டட், ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
- 1988ம் ஆண்டு இந்திய வீரர் நவ்ஜோத் சிங் சித்து இறுதிப் போட்டியில் 76 ரன்கள் எடுத்து டீம் இந்திய அணியை சாம்பியனாக்கினார். இதன் காரணமாக, நவ்ஜோத் சிங்குக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
- 1990-91 மற்றும் 1995 ம் ஆண்டுகளில், முகமது அசாருதீன் ஆட்டமிழக்காமல் 54 ரன்களும், ஆட்டமிழக்காமல் 90 ரன்களும் எடுத்து இந்தியாவை சாம்பியனாக்கினார். இதையடுத்து, இந்த 2 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியிலும் அசாருதீனுக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது.
- 1997ம் ஆண்டு இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றது, இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் 84 ரன்கள் எடுத்த மார்வன் அட்டப்பட்டு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
- 2000 ம் ஆண்டு பாகிஸ்தான் அணி ஆசியக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் மொயீன் கான் ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
- 2004ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் இலங்கை அணி மார்வன் அட்டப்பட்டு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். இந்த போட்டியில், அட்டப்பட்டு 65 ரன்கள் எடுத்திருந்தார்.
- 2008ம் ஆண்டு ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. அஜந்தா மெண்டிஸ் 13 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
- 2010ம் ஆண்டு இந்தியா ஆசியக் கோப்பையை வென்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் 66 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
- 2012ம் ஆண்டு பாகிஸ்தான் ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அப்ரிடி 32 ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2014ம் ஆண்டு, லசித் மலிங்கா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கையை சாம்பியனாக்கினார்.
- 2018ம் ஆண்டில் லிட்டன் தாஸ் ஆட்ட நாயகன் 121 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், இந்த போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.
- 2023ம் ஆண்டில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மீண்டும் சாம்பியனானது. இந்த முறை முகமது சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ALSO READ: கோடியில் கொட்டப்போக்கும் பணம்.. ஆசியக் கோப்பை வெற்றியாளருக்கு இவ்வளவு பரிசுத்தொகையா?
ஆசிய கோப்பை டி20 வடிவம்:
- 2016 ஆசிய கோப்பை டி20 தொடரின் முதல் சீசனை இந்திய அணி வென்றது. இறுதிப் போட்டியில் ஷிகர் தவான் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2022ம் ஆண்டு நடைபெற்ற டி20 ஆசிய கோப்பையை இலங்கை அணி வென்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக நாயகன் பானுக ராஜபக்ஷ ஆவார்.