KCL 2025: சிக்ஸர்! சிக்ஸர்! கேரள லீக்கில் ரன் மழை பொழியும் சஞ்சு சாம்சன்.. ஆசியக் கோப்பையில் இடம் உறுதி!
Sanju Samson KCL: சஞ்சு சாம்சனின் ஆசியக் கோப்பை இடம் குறித்த சந்தேகங்களை, அவரது சமீபத்திய கேரள கிரிக்கெட் லீக் (KCL) பேட்டிங் அபாரமாக மாற்றியுள்ளது. கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் மூன்று அரைசதங்களை அடித்த சாம்சன், கொச்சி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

2025 ஆசியக் கோப்பைக்கான (2025 Asia Cup) இந்திய பிளேயிங் லெவன் அணியில் சஞ்சு சாம்சன் (Sanju Samson) இடம்பெறுவது கடினம் என்று கூறப்பட்டு வந்தது. ஆசிய கோப்பையில் சாம்சனால் டாப் ஆர்டரில் விளையாட முடியாது. ஆசிய கோப்பைக்கு முன்பே இதுபோன்ற சில வதந்திகள் வெளிவந்தன. இந்தநிலையில், இந்த வதந்திகள் அனைத்தும் தவறு என்றும், கவுதம் கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) ஆகியோருக்கு சஞ்சு சாம்சன் நினைவூட்டலை வழங்கியுள்ளார். 2025 கேரள கிரிக்கெட் லீக்கில் அவரது பேட்டிங் தீப்பிடித்து வருகிறது, கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் அவர் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்களை அடித்துள்ளார். மேலும், நேற்று அதாவது 2025 ஆகஸ்ட் 31ம் தேதி ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிக்கு எதிராக 41 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்.
என்ன நடந்தது..?
THE NO LOOK SIX OF SANJU SAMSON. 🥶pic.twitter.com/vM7es6QzAu
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 31, 2025
முதலில் விளையாடிய ஆலப்பி ரிப்பிள்ஸ் அணி 176 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு, கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணி 10 பந்துகள் மீதமுள்ள நிலையில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக 41 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடினார். இந்த அதிரடியான இன்னிங்ஸில், அவர் 2 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களை விளாசினார். மறுமுனையில் இருந்து விக்கெட்டுகள் தொடர்ந்து விழுந்தன, ஆனால் சாம்சனின் 83 ரன்கள் கொச்சி அணிக்கு 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது.




ALSO READ: ராஜஸ்தான் ராயல்ஸை விட்டு விலகிய டிராவிட்.. திடீர் முடிவுக்கு என்ன காரணம்..?
கடந்த 4 இன்னிங்ஸ்களில் 355 ரன்கள்:
Sanju Samson 💪💪#TeamIndia #IndianCricket #SanjuSamson #AsiaCup pic.twitter.com/nb3PnoWFcy
— CRICKETNMORE (@cricketnmore) August 31, 2025
கேரள கிரிக்கெட் லீக்கில் சஞ்சு சாம்சன் இதுவரை 6 இன்னிங்ஸ்களில் 368 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால், கடந்த 4 இன்னிங்ஸ்களில் மட்டும் ஒரு சதம் மற்றும் மூன்று அரை சதங்கள் உட்பட சுமார் 89 சராசரியுடன் 355 ரன்கள் எடுத்துள்ளார். ஆசிய கோப்பைக்கு முன்பு சாம்சனின் இந்த அபாரமான ஃபார்ம், இந்திய பிளேயிங் லெவன் அணியில் விளையாடும் பதினொன்றில் கிட்டத்தட்ட உறுதி செய்துவிட்டது என்றே சொல்லலாம்.
ALSO READ: ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 ஆக பிரிந்ததா..? யார் அடுத்த கேப்டன்..?
இது மட்டுமின்றி சஞ்சு சாம்சன் அசால்ட்டாக சிக்ஸர்களை மழையாக பொழிந்து வருகிறார். சாம்சன் இதுவரை கேரள கிரிக்கெட் லீக்கில் 190 என்ற புயல் ஸ்ட்ரைக் ரேட்டில் மொத்தம் 30 சிக்ஸர்களை அடித்துள்ளார். சஞ்சு சாம்சனின் அணியான கொச்சி ப்ளூ டைகர்ஸ் அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுக்குப் பிறகு புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.