Asia Cup 2025: ஆசிய கோப்பையில் ஆதிக்கம் செலுத்துவாரா சுப்மன் கில்..? இதுவரை கில்லின் செயல்திறன் எப்படி..?
Shubman Gill Performance: 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது அவரது இரண்டாவது ஆசியக் கோப்பை, ஆனால் முதல் டி20 ஆசியக் கோப்பை. 2023 ஒருநாள் ஆசியக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட கில், டி20யிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025 ஆசிய கோப்பை (2025 Asia Cup) வருகின்ற 2025 செப்டம்பர் 9ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பிரமாண்டமாக தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadav) தலைமையிலான 15 பேர் கொண்டு இந்திய அணி ஏற்கனசே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்திய அணியின் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது விவாதத்தை கிளப்பியது. சுப்மன் கில் முன்பு, கடந்த 2023 ஒருநாள் ஆசிய கோப்பையில் பங்கேற்றுள்ளார். அதன்படி, சுப்மன் கிலி ஆசிய கோப்பையில் விளையாடுவது இது இரண்டாவது முறையாகும். அதே நேரத்தில், கில் ஆசிய கோப்பையின் டி20 வடிவத்தில் விளையாடுவது இதுவே முதல் முறை.
2023ம் ஆண்டு ஆசிய கோப்பையில் விளையாடிய சுப்மன் கில், அந்த ஆசியக் கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருந்தார். போட்டி முழுவதும் கில் அற்புதமாக பேட்டிங் செய்தது மட்டுமின்றி, இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லவும் முக்கிய காரணமாக இருந்தார். கடந்த 2023ம் ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை ஒருநாள் வடிவத்தில் நடைபெற்றது. இதில், சுப்மன் கில் 6 போட்டிகளில் 302 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் சுப்மன் கில் 2 அரைசதம் மற்றும் ஒரு அற்புதமான சதமும் அடித்திருந்தார். இருப்பினும், 2025 ஆசிய கோப்பை டி20 வடிவத்தில் விளையாடப்படும். இதனுடன், கில் ஆசிய கோப்பையின் டி20 வடிவத்தில் விளையாடுவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.




ALSO READ: சூர்யகுமார் யாதவ் கேப்டன்..! கில்லுக்கு வாய்ப்பு.. 2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
டி20யில் சுப்மன் கில்லின் சாதனை:
T20I Vice-Captain ✅
ODI Vice-Captain ✅
Test Captain ✅Shubman Gill — a class apart, carrying an aura like no other.
— JassPreet (@JassPreet96) August 20, 2025
சுப்மன் கில் இதுவரை இந்தியாவுக்காக 21 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த காலகட்டத்தில் கில் 30.42 சராசரியுடன் 3 அரைசதங்கள் மற்றும் 1 சதம் உள்பட 578 ரன்கள் எடுத்துள்ளார். கில்லின் ஸ்ட்ரைக் ரேட் 139.28 ஆக உள்ளது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி அட்டவணை
இந்திய அணி வருகின்ற 2025 செப்டம்பர் 10 ம் தேதி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸை எதிர்கொள்கிறது. இதன் பிறகு, இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ளும். இந்த போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 14ம் தேதி நடைபெறுகிறது. லீக் ஸ்டேஜ்களில் கடைசிப் போட்டியில் இந்திய அணி ஓமனுக்கு எதிராக விளையாடுகிறது. இந்தப் போட்டியானது வருகின்ற 2025 செப்டம்பர் 19ம் தேதி நடைபெறுகிறது.
ALSO READ: ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆதிக்கம்.. இத்தனை வெற்றி கண்டதா இந்திய அணி..?
2025 ஆசிய கோப்பை இந்திய அணி
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா , ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் , வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்சித் ராணா.