2026 U19 World Cup: ஜனவரி 15 முதல் U19 உலகக்கோப்பை.. இந்திய அணி எப்போது, யாருடன் மோதுகிறது?

2026 U19 World Cup Team India Schedule: 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் முதல் நாளான 2026 ஜனவரி 15 ம் தேதி, இந்தியா அமெரிக்காவை எதிர்கொள்ளும். இந்தப் போட்டி ஜிம்பாப்வேயின் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்குத் தொடங்கும். இந்தியாவின் இரண்டாவது போட்டி 2026 ஜனவரி 17 ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும்.

2026 U19 World Cup: ஜனவரி 15 முதல் U19 உலகக்கோப்பை.. இந்திய அணி எப்போது, யாருடன் மோதுகிறது?

இந்திய அண்டர் 19 அணி

Published: 

14 Jan 2026 08:15 AM

 IST

2026ம் ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். இந்த 2026ம் ஆண்டு 3 உலகக் கோப்பைகள் (World Cup) நடைபெறவுள்ளது. அதில், முதலாவது 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை ஆகும். 2026ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை  வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்காக ஐ.சி.சி (ICC) இந்தியாவையும் பாகிஸ்தானையும் தனித்தனி குழுக்களில் இடத்தில் வைத்துள்ளது.  இதன் காரணமாக, லீக் போட்டிகளில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோத போவது கிடையாது.

19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை எப்போது முடிவடைகிறது..?

2026 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை ஜனவரி 15 முதல் பிப்ரவரி 6 வரை ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் கூட்டாக நடத்துகிறது. இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் நிலையில், 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. போட்டியின் லீக் ஸ்டேஜ்போட்டியில் இந்திய அணி அமெரிக்கா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக விளையாடும்.

ALSO READ: தேர்தல் காரணமாக சிக்கலில் மகளிர் பிரீமியர் லீக்.. குழப்பத்தில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா!

இந்திய அணியின் போட்டிகள் எப்போது, ​​எங்கு நடைபெறும்..?

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையின் முதல் நாளான 2026 ஜனவரி 15 ம் தேதி, இந்தியா அமெரிக்காவை எதிர்கொள்ளும். இந்தப் போட்டி ஜிம்பாப்வேயின் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்குத் தொடங்கும். இந்தியாவின் இரண்டாவது போட்டி 2026 ஜனவரி 17 ம் தேதி வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும். இந்தப் போட்டியும் ஜிம்பாப்வேயின் புலவாயோவில் உள்ள குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்குத் தொடங்கும். இந்தியாவிற்கும் வங்கதேசத்திற்கும் இடையிலான தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்தப் போட்டி உற்சாகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மூன்றாவது லீக் ஸ்டேஜ் போட்டி 2026 ஜனவரி 24 ஆம் தேதி புலவாயோவில் இந்திய நேரப்படி பிற்பகல் 1:00 மணிக்குத் தொடங்கும்.

ALSO READ: இடமாற்ற சர்ச்சைக்கு ஐசிசி முற்றுப்புள்ளி.. இந்தியாவில் விளையாடும் வங்கதேச அணி..!

19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை ஒரு பார்வை:

2026 ஆம் ஆண்டு நடைபெறும் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பை 16வது உலகக் கோப்பையாகும். கடந்த 15 சீசன்களில் இந்தியா மிகவும் வெற்றிகரமான அணியாக உருவெடுத்துள்ளது. இதுவரை இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அதேநேரத்தில், ஆஸ்திரேலியா 4 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன்களாக உள்ளது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளும் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. ஆஸ்திரேலியா அணி நடப்பு சாம்பியனாக உள்ளது. 2024ம் ஆண்டு இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா இந்தியாவை 79 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து பட்டத்தை வென்றது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை 2026க்கான இந்திய அணி:

ஆயுஷ் மத்ரே (கேப்டன்), ஆர்.எஸ். அம்பரீஷ், கனிஷ்க் சௌஹான், டி. திபேஷ், முகமது அனன், ஆரோன் ஜார்ஜ், அபிக்யான் குண்டு, கிஷன் குமார் சிங், விஹான் மல்ஹோத்ரா, உத்தவ் மோகன், ஹெனில் படேல், கிலன் ஏ. படேல், ஹர்வன்ஷ் சிங், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் வேதாந்த் திரிவேதி.

உலகின் முதல் குளோன் ஹைபிரிட் அரிசி வகையை உருவாக்கிய சீனா
மக்களின் துயரத்தை துடைக்கும் போன் பூத்
வெனிசுலா அதிபரை பிடிக்க அமெரிக்க வீரர்கள் சென்ற காட்சி.. AI வீடியோ..
ரஷ்யக் கொடியுடன் கூடிய எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்த அமெரிக்கா.. ரஷ்யா கடும் எதிர்ப்பு!