சுக்கிர பெயர்ச்சி 2025 : நீங்கள் இந்த ராசியா? திருமண வாழ்க்கையில் கவனம் தேவை
Shukra Gochar: வருகிற நவம்பர் 3 முதல் 26, 2025 ஆகிய காலகட்டத்தில் சுக்ரன் தனது சொந்த ராசியான துலாமிற்கு இடம் பெயர்கிறது. இந்த நிலையில் குறிப்பிட்ட 4 ராசிகளுக்கு திருமண உறவில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஜோதிட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சுக்கிரன் நவம்பர் 3 முதல் 26, 2025 காலக்கட்டத்தில், தனது சொந்த ராசியான துலாம் ராசியில் இடம் பெயர்கிறது. காதல், திருமணம் மற்றும் செல்வத்திற்கு காரணமான சுக்கிரனின் இடம் பெயர்வு சில ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தந்தாலும், ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கு கணவன் – மனைவி உறவு, நிதி மற்றும் உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். தேவையற்ற தொடர்புகள் மற்றும் செலவுகளைக் குறைத்து, உங்கள் துணையுடன் வெளிப்படையாக இருப்பது நல்லது. சுக்கிரன் மோசமான வீடுகளில், அதாவது 3, 6, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கும்போது, குறைவான மகிழ்ச்சியையும் அதிக கஷ்டத்தையும் தரும் வாய்ப்பு உள்ளது. ரிஷபம், சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம் சில விஷயங்களில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டுமோ அவ்வளவு இருப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசியின் ஆறாவது வீட்டில் அதிபதியான சுக்கிரன் சஞ்சரிப்பது மகிழ்ச்சிக்கு நல்லதல்ல. துலாம் ராசிக்கு அதிபதியான சுக்கிரன் என்றாலும், திருமண வாழ்க்கையில் சில பிரச்னைகளை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. இந்த ராசிக்காரர்களுக்கோ அல்லது அவர்களின் துணைவிக்கோ உடல் நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருவருக்கும் இடையில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பும் உள்ளது. புதிய நபர்களுடன் பழக்கம், போதை பழக்கம் மற்றும் தேவையற்ற செலவுகளில் இருந்து விலகி இருப்பது நல்லது.
இதையும் படிக்க : அள்ளிக்கொடுக்கும் மாளவ்ய யோகம்: 4 ராசிக்கு தேடி வரும் அதிர்ஷ்ட மழை!
சிம்மம்
சிம்ம ராசியின் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், புதிய நபர்களின் அறிமுகம் காரணமாக பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்களுக்கு வாழ்க்கைத் துணையை விட முன்னுரிமை அளிக்கப்படுவது பிரச்னைக்கு காரணமாக இருக்கலாம். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு தடைகள் உள்ளன. நீங்கள் அடிக்கடி பயணம் செய்ய வேண்டியிருக்கும். அடிக்கடி வாக்குவாதங்கள், சண்டைகள் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் துணைவியுடன் வெளிப்படையாக நடந்து கொள்வது நல்லது. பேசும்போது கவனமாக இருப்பது மிகவும் முக்கியம்.
விருச்சிகம்
இந்த ராசிக்கு, தம்பதியினரிடையே சிறிது பிரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அடிக்கடி பயணம், இடமாற்றம், பணிச்சுமை மற்றும் நோய்கள் காரணமாக, இருவருக்கும் இடையே கணவன் மனைவி இடையே பிரச்னை ஏற்படலாம். காதல் விவகாரங்களில் சிறிய சந்தேகங்கள் மற்றும் தவறான புரிதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் துணையின் உடல்நலம் மற்றும் தேவைகளில் போதுமான கவனம் செலுத்துவது நல்லது.
இதையும் படிக்க : கஜகேசரி யோகம்.. ராஜயோகம் தேடி வரும் 6 ராசிகள்
மீனம்
இந்த ராசிக்கு, எட்டாவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், நிதி விவகாரங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் காரணமாக தம்பதியினரிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் உங்கள் துணையை அணுகுவது நல்லது. குடும்ப விவகாரங்களில் உறவினர்களின் தலையீடும் பிரச்னைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. ஒவ்வொரு விஷயத்திலும் உங்கள் துணையை நம்பிக்கையுடன் அணுகுவது அவசியம்.



