AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கல்யாணத்துக்கு அப்புறம் உங்கள தேடி வரப்போகுது ஜாக்பாட்… இந்த 6 ராசியில நீங்களும் இருக்கீங்களா?

Marriage Luck: ஜோதிட சாஸ்திரத்தின்படி, திருமணம் என்பது இரண்டு நபர்களை இணைக்கும் ஒரு பந்தம் மட்டுமல்ல, அது ஒருவரது வாழ்வின் திருப்புமுனையாகவும் அமைகிறது. வாழ்க்கைத்துணையின் வரவு, குடும்பச் சூழல் மற்றும் புதிய பொறுப்புகள் ஆகியவை சில ராசியினருக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

கல்யாணத்துக்கு அப்புறம் உங்கள தேடி வரப்போகுது ஜாக்பாட்… இந்த 6 ராசியில நீங்களும் இருக்கீங்களா?
திருமண அதிர்ஷ்டம்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 22 Sep 2026 16:00 PM IST

ஜோதிட சாஸ்திரத்தின்படி திருமணம் என்பது சில ராசியினரின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி, திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையின் ஆதரவால் தொழில் வளர்ச்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் புதிய வாய்ப்புகளைக் கொண்டுவருகிறது. ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், மகரம் மற்றும் மீனம் ஆகிய ஆறு ராசியினரும் திருமண பந்தத்திற்குப் பிறகு மன அமைதியையும் உழைப்பிற்கேற்ற அங்கீகாரத்தையும் பெற்றுப் பொருளாதார ரீதியாகப் பெரிய முன்னேற்றத்தைக் காண்கிறார்கள். துணையின் வழிகாட்டுதலும் ஊக்கமும் இவர்களது திறமையை வெளிக்கொணர்ந்து, சொத்து சேர்க்கை, வருமான உயர்வு மற்றும் குடும்பத்தில் செல்வச் செழிப்பை அள்ளிக் கொடுக்கிறது.

ரிஷப ராசி

விடாமுயற்சியும் திட்டமிட்டுச் செயல்படும் குணமும் கொண்ட ரிஷப ராசியினருக்கு, திருமணத்திற்கு முன்பு வரை சில கனவுகள் நிறைவேறாமல் தள்ளிப்போகலாம். ஆனால், திருமணத்திற்குப் பிறகு வாழ்க்கைத்துணையிடமிருந்து கிடைக்கும் ஆதரவு இவர்களது உழைப்பைச் சரியான பாதையில் செலுத்தி, வெற்றியைத் தரும். தொழில் மற்றும் பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவந்து, நிதிநிலையில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

கடக ராசி

குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் உணர்வுப்பூர்வமான கடக ராசியினருக்கு, திருமணத்திற்கு முன்பு வரை அவர்களது திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைப்பது அரிதாக இருக்கலாம். திருமணத்திற்குப் பின் கிடைக்கும் மனவமைதியும், துணையின் தூண்டுதலும் இவர்களது திறமைகளை வெளியே கொண்டுவரும். இதன் மூலம் வேலையில் உயர்வும், சமூகத்தில் மதிப்பும், பொருளாதாரப் புழக்கமும் கணிசமாக அதிகரிக்கும்.

சிம்ம ராசி

இயற்கையிலேயே ஆளுமைத் திறனும் தன்னம்பிக்கையும் கொண்ட சிம்ம ராசியினருக்கு, திருமண பந்தம் கூடுதல் பலத்தைச் சேர்க்கிறது. குறிப்பாக, இந்த ராசியைச் சேர்ந்த பெண்கள் புகுந்த வீட்டிற்குச் சென்ற பிறகு, கணவரின் வாழ்வியலில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும். வாழ்க்கைத்துணையின் ஊக்கத்தால் தொழில் வாய்ப்புகள் பெருகி, திடீர் பணவரவும் தனித்துவமான அடையாளமும் இவர்களைத் தேடி வரும்.

துலா ராசி

சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த துலா ராசியினர் எப்போதும் சமநிலையான பார்வையைக் கொண்டிருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு இவர்களது வாழ்க்கையில் தெளிவும் நிலைத்தன்மையும் மேலும் கூடும். துணையின் உணர்வுப்பூர்வமான ஆதரவால், தொழில் மற்றும் பணியில் தெளிவான முடிவுகளை எடுத்து அதிக வருமானம் ஈட்டுவார்கள். திருமணத்திற்குப் பின் இவர்களது சொத்து மதிப்பு இரட்டிப்பாகும் வாய்ப்புள்ளது.

மகர ராசி

கடின உழைப்பிற்கும் பொறுப்புணர்விற்கும் பெயர்பெற்ற மகர ராசியினருக்கு, திருமணத்திற்குப் பிறகே உண்மையான யோக காலம் தொடங்குகிறது. இவர்களது உழைப்பைப் புரிந்துகொண்டு தோள் கொடுக்கும் வாழ்க்கைத்துணை அமைவதால், தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிக்கும். நீண்டநாளாக இருந்த நிதி நெருக்கடிகள் நீங்கி, குடும்பத்தில் செல்வமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

மீன ராசி

படைப்பாற்றலும் கற்பனைத் திறனும் கொண்ட மீன ராசியினரின் எண்ணங்களுக்குத் திருமணத்திற்குப் பிறகே சரியான வடிவம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் இணைந்து எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றியில் முடியும். படைப்புத் திறன்களுக்குத் துணையின் ஆதரவு கிடைப்பதால், பல வழிகளில் வருமானம் பெருகி, நிதிநிலையில் மிகச் சிறந்த நிலையை அடைவார்கள்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us