AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இமயமலையின் மறைந்துபோகும் முகங்கள்… சத்குருவின் புதிய புகைப்பட நூல்..

இந்த நூல் குறித்து பேசிய சத்குரு, இமயமலை மக்களின் முகங்கள் விரைவில் மறைந்துபோகும் ஒரு காலகட்டத்தைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார். வெளிச்சம் மற்றும் இருள், வெப்பம் மற்றும் குளிர், வசந்த காலம் மற்றும் குளிர்காலம் போன்ற இயற்கையின் நேரடி அனுபவங்களால் உருவான அந்த முகங்கள், நவீன தகவல் உலகத்தின் தாக்கம் அதிகம் இல்லாத வாழ்க்கை முறையை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

இமயமலையின் மறைந்துபோகும் முகங்கள்… சத்குருவின் புதிய புகைப்பட நூல்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 11 Aug 2026 18:04 PM IST

ஆகஸ்ட் 11, 2026: புதுடெல்லியில் சத்குருவின் புதிய புகைப்பட நூலான ‘டிஸப்பியரிங் ஃபேசஸ்” வெளியிடப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நேபாளம் மற்றும் திபெத் உள்ளிட்ட இமயமலையின் தொலைதூரப் பகுதிகளில் சத்குரு மேற்கொண்ட பயணங்களின்போது சந்தித்த மக்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் வகையில் இந்தப் புகைப்பட நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

டிஸப்பியரிங் ஃபேசஸ் நூலின் சிறப்புகள்:

பெங்குயின் இந்தியா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள ‘டிஸப்பியரிங் ஃபேசஸ்’ நூல், நவீன வாழ்க்கை முறையிலிருந்து விலகி, இயற்கையுடன் நெருக்கமாக வாழும் இமயமலை மக்களின் முகங்களையும், அவர்களின் வாழ்வியல் அனுபவங்களையும் காட்சிப்படுத்துகிறது. இமயமலைப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டபோது கேமராவை உடன் எடுத்துச் சென்ற சத்குரு, அங்கு தான் சந்தித்த மக்களின் முகங்களையும் வாழ்க்கைச் சூழல்களையும் தொடர்ந்து புகைப்படங்களாக பதிவு செய்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள இந்தியா இன்டர்நேஷனல் சென்டரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நூல் அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா முன்னிலையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, சத்குருவுக்கும் எழுத்தாளரும் வர்ணனையாளருமான ஆனந்த் ரங்கநாதனுக்கும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், நூலில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களுக்குப் பின்னால் உள்ள அனுபவங்கள் மற்றும் இமயமலைப் பயணங்கள் குறித்து சத்குரு பகிர்ந்து கொண்டார்.

இயற்கையின் நேரடி அனுபவங்களால் உருவான அந்த முகங்கள்:

 

View this post on Instagram

 

A post shared by Sadhguru (@sadhguru)


இந்த நூல் குறித்து பேசிய சத்குரு, இமயமலை மக்களின் முகங்கள் விரைவில் மறைந்துபோகும் ஒரு காலகட்டத்தைப் பிரதிபலிப்பதாகக் குறிப்பிட்டார். வெளிச்சம் மற்றும் இருள், வெப்பம் மற்றும் குளிர், வசந்த காலம் மற்றும் குளிர்காலம் போன்ற இயற்கையின் நேரடி அனுபவங்களால் உருவான அந்த முகங்கள், நவீன தகவல் உலகத்தின் தாக்கம் அதிகம் இல்லாத வாழ்க்கை முறையை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த ஐந்து தசாப்தங்களாக இமயமலைப் பகுதிகளுக்கு மேற்கொண்ட பயணங்களில், அங்குள்ள இயற்கை அழகைத் தாண்டி அங்கு வாழும் மக்களின் முகங்களும் வாழ்க்கை முறையும் தன்னை இமயமலையின் ஆழமான பகுதிகளுக்குள் அழைத்துச் சென்றதாக சத்குரு தெரிவித்துள்ளார்.’

சத்குருவின் பயணம்:

சத்குரு முதன்முறையாக 2006ஆம் ஆண்டு மானசரோவர் மற்றும் கைலாஷ் மலைப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அதன் பின்னர் தொடர்ந்து இமயமலைக்கு பயணம் மேற்கொண்டு வருவதுடன், ஆன்மிகத் தேடலில் ஈடுபடுபவர்களையும் இமயமலை யாத்திரைக்கு அழைத்துச் சென்று வருகிறார்.

2025ஆம் ஆண்டு சத்குரு முதன்முறையாக மோட்டார் சைக்கிளில் கைலாஷ் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்த ஆண்டும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் இமயமலைப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மனித நலன், மனித உணர்வுநிலையை மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சூழல் மீளுருவாக்கம் ஆகிய முயற்சிகளுடன் இணைந்து, இமயமலை சத்குருவின் வாழ்க்கையில் தொடர்ந்து முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

Follow Us