Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

2026 எண் கணித பலன்கள்: புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? நியூமராலஜி சொல்வது இதுதான்!

Numerology Forecast 2026: எல்லா வருடங்களுக்கும் ஒரு தனித்த அதிர்வு, ஒரு சக்தி, ஒரு சூழல் இருக்கும் என எண் கணிதம் கூறுகிறது. இது, ஒரு வருடத்தின் மொத்தப் போக்கு, மனோபாவம், உலகில் உருவாகக்கூடிய தன்மை போன்றவற்றை புரிந்து கொள்ள உதவும் ஒரு கருவி ஆகும்.

2026 எண் கணித பலன்கள்: புத்தாண்டு உங்களுக்கு எப்படி இருக்கும்? நியூமராலஜி சொல்வது இதுதான்!
2026 எண் கணி பலன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 06 Dec 2025 16:12 PM IST

2026ம் ஆண்டு நெருங்கி வருவதால், புதிய தொடக்கங்களும் புதிய மாற்றங்களும் அனைவரின் வாழ்க்கையிலும் வெளிப்படும். எண் கணிதத்தின் படி, ஒருவரின் பிறந்த தேதியே அவருடைய வாழ்க்கைப் பாதையையும், வரப்போகும் அனுபவங்களையும் தீர்மானிக்கிறது. அவ்வாறு, உங்கள் பிறந்த தேதியில் உள்ள எண்கள் உங்கள் ஆளுமை, எதிர்கால வளர்ச்சி, சவால்கள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் சக்தி கொண்டவை ஆகும். இங்கு ஒவ்வொரு தேதியில் பிறந்தவர்களுக்கும் திருமணம், கல்வி, தொழில், ஆரோக்கியம், பணவரவு போன்றவற்றில் வரவுள்ள 2026ம் ஆண்டு எப்படியாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.

பிறந்த தேதிகள்: 1, 10, 19, 28

இவர்களுக்கு புதிய ஆண்டு மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் தரும். தொழிலில் பெரிய மாற்றம் ஏற்பட்டு நல்ல லாபம் கிடைக்கும். ஆண்டின் இடைப்பகுதியில் கல்வி, ஆரோக்கியம், வியாபாரம் போன்றவற்றில் சிரமங்கள் இருந்தாலும் ஆண்டு இறுதியில் அனைத்தும் சரியாகும்.

பிறந்த தேதிகள்: 2, 11, 20, 29

உணர்ச்சி வசப்படும் இவர்களுக்கு குடும்ப, திருமண உறவுகளில் சிக்கல்கள் வரலாம். ஆனால் கல்வி, தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம். செல்வம் சேர்க்கும் வாய்ப்புகள் அதிகம்; கடன் பெற எளிதாகும்.

மேலும் படிக்க : உங்கள் காரில் விநாயகர் சிலை வைத்துள்ளீர்களா?.. அப்போ கண்டிப்பா இதை செய்யுங்கள்!!

பிறந்த தேதிகள்: 3, 12, 21, 30

இந்த ஆண்டு லாபகரமானதாக இருக்கும். திருமண மற்றும் குடும்ப உறவுகள் மேம்படும். ஆனால் தங்கள் விருப்பப்படி நடப்பது கல்வி மற்றும் தொழிலில் சிரமம் தரலாம். சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் செயல்பட்டால் முன்னேற்றம் உறுதி.

பிறந்த தேதிகள்: 4, 13, 22, 31

ஆண்டு முழுவதும் ஏற்றத் தாழ்வுகள் இருக்கும். தொடக்கத்தில் திருமண வாழ்க்கையில் சிக்கல்கள் வந்தாலும் நடுவில் சரியாகும். இயல்பு காரணமாக தொழில், வியாபாரம், பண விவகாரங்களில் மாற்றங்கள் அதிகம். முக்கிய முடிவுகளில் கவனம் அவசியம்.

பிறந்த தேதிகள்: 5, 14, 23

நண்பர்களுக்கு விசுவாசமான இவர்களுக்கு இந்த ஆண்டு உறவுகளில் சிக்கல்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் கவனம் தேவை. தொழிலில் அனைத்தும் சாதகமாக இருக்கும்.

பிறந்த தேதிகள்: 6, 15, 24

அவர்களின் கவர்ச்சி, படைப்பாற்றல் இவ்வாண்டில் நல்ல வாய்ப்புகளை தரும். கல்வி, ஆரோக்கியம், தொழில், பணவரவு போன்ற துறைகளில் வளர்ச்சி. ஆனால் சில நேரங்களில் முக்கியத்துவம் குறையலாம்.

பிறந்த தேதிகள்: 7, 16, 25

இந்த ஆண்டு அதிர்ஷ்டம் நிறைந்தது. தொழிலில் பதவி உயர்வு அல்லது வியாபார வெற்றி. நடுவில் கல்வி மற்றும் உடல் நலத்தில் கவனம் வேண்டும். திருமண வாழ்க்கையில் சிறிய சிக்கல்கள் வந்தாலும் எளிதில் சரியாகும்.

பிறந்த தேதிகள்: 8, 17, 26

புதிய வாய்ப்புகள், புதிய பாதைகள். குடும்பத்துடன் மகிழ்ச்சியான காலம். திருமண வாழ்க்கை நிலைத்தன்மையுடன் இருக்கும். மாணவர்களுக்கு நிறைந்த வாய்ப்புகள். பெரிய பிரச்சினைகள் இல்லை.

மேலும் படிக்க: குழந்தைகளை பெயர் சுருக்கி கூப்பிடுவதா நல்லதா? நியூமராலஜி சொல்வது இதுதான்!

பிறந்த தேதிகள்: 9, 18, 28

இந்த ஆண்டு கலவையான பலன். காதல், திருமண உறவுகளில் சிக்கல்கள். ஆனால் ஆரோக்கியம், தொழில், வியாபாரம், பணவரவு ஆகியவை சிறப்பாக இருக்கும்.