சாணக்கிய நிதி : வாழ்வில் வெற்றியடைய வேண்டுமா? இந்த சூழ்நிலைகளில் அமைதியாக இருப்பது நல்லது
Chanakya Niti : நம் வாழ்க்கையில் வெற்றியடைய எந்தெந்த சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க வேண்டும் என சாணக்கியர் தெரிவிக்கிறார். இதனை கடைபிடிக்கும் போது நம்மால் பிரச்னைகளை எளிதாக சமாளிக்க முடியும். மேலும் மற்றவர்கள் மதிப்பில் நம் மதிப்பும் உயரும் என நம்பப்படுகிறது.

ஆச்சார்ய சாணக்கியர் உலகின் தலைசிறந்த அறிஞர்கள், தத்துவஞானிகள் மற்றும் இராஜதந்திரிகளில் ஒருவர். அவர் தனது சாணக்கிய நிதியில் வாழ்க்கையின் அனைத்து பகுதிகளையும் வெற்றியை அடைவதற்கான வழிகளையும் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் வெற்றியை அடைய, சில சூழ்நிலைகளில் ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். இது வீடுகளில், அலுவலகங்களில் ஏற்படும் பிரச்னைகள் தீவிரமடையாமல் தடுக்கும். மௌனத்தை வெற்றிக்கான சக்திவாய்ந்த ஆயுதமாக மாற்றுவது பற்றியும் அதனால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் சாணக்கியர் என்ன சொல்கிறார் என்பது குறித்து இ்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
வலி
சாணக்கிய நிதி, மௌனம் என்பது யாரிடமிருந்தாலும் ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் என்று குறிப்பிடுகிறது. இருப்பினும், துக்கத்திலும் வலியிலும் இருப்பவர்களை வார்த்தைகளால் ஆறுதல்படுத்துவதற்கு பதிலாக, ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும் என சாணக்கிய நிதி சொல்கிறது. இது அவர்கள் வலியில் இருந்து தானாக வெளியேற வாய்ப்பை வழங்குகிறது.
கோபம்
கோபம் பெரும்பாலும் நம் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் அடக்குகிறது. மிகவும் கோபமாக இருப்பவர்கள் தாங்கள் என்ன செய்கிறார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். எனவே, கோபத்தால் கட்டுப்பாட்டை இழந்தவர்கள் முன்னிலையில் அமைதியாக இருப்பது நல்லது. இதனால் ஏற்படும் விளைவுகளை குறைக்கும்.
வேலை
வேலையில் இருந்தாலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, ஒரு குழுவில் மக்கள் கிசுகிசுக்கும்போது ஒருவர் அமைதியாக இருக்க வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார். அதேபோல், நமக்குத் தெரியாத ஒன்றைப் பற்றிய விவாதங்களின் போது நாம் அமைதியாக இருப்பது பொருத்தமானது என்பதை சாணக்கியர் நமக்கு நினைவூட்டுகிறார். மாறாக நாம் விவாதிக்கும்போது நம்மை அறிவற்றவர்களாக காட்டவும் வாய்ப்பு இருக்கிறது.
பெரியவர்கள்
குடும்பத்தில் பெரியவர்கள் பேசும்போது குறுக்கிடுவது நல்ல பழக்கம் அல்ல. அவர்களைப் பேச அனுமதிக்க வேண்டும். அதேபோல், நண்பர்கள் பேசும்போது, அவர்கள் சொல்வதையெல்லாம் நாம் கேட்க வேண்டும். கருத்து வேறுபாடு இருந்தால், அவர்கள் பேசிய பிறகு உங்கள் கருத்துக்களை அமைதியாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சாணக்கியர் கூறுகிறார்.
இதுபோன்ற நாம் பேசுவதை விட அமைதியாக இருப்பது நம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு காரணமாகும். நம் மீது மதிப்பைக் கூட்டும். எதையும் உடனடியாக பதிலளிக்காமல், அமைதியாக யோசித்து நிதானமாக செயல்பட உதவும். இதுதான் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் கடைபிடிக்கும் ஒரு பழக்கம்.
(Disclaimer: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டவை. TV9 தமிழ் இதை உறுதிப்படுத்தவில்லை.)