Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அள்ளிக்கொடுக்கும் புதன் பகவான்.. இன்று தவறாமல் இதை செய்யுங்க..

budan bagavan: புதன் கிழமையான இன்று ரேவதி, ஆயில்யம், கோட்டை ஆகிய 3 நட்சத்திரங்களை கொண்டவர்களுக்கு புதன் பகவான் வழிபாடு பலன் அளிக்கும். அதோடு, இன்று விநாயகரை அருள் புரியலாம், புதன் கிரகமானது உங்களுக்கு கல்வியையும், செல்வத்தையும், நன்மையையும் அள்ளித்தரும் என்பது நம்பிக்கை.

அள்ளிக்கொடுக்கும் புதன் பகவான்.. இன்று தவறாமல் இதை செய்யுங்க..
புதன் பகவான்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 29 Oct 2025 15:21 PM IST

நவக்கிரகங்களில் நான்காவதாக இடம் பெற்றிருப்பவர், புதன் பகவான். பொன் அகப்பட்டாலும், புதன் அகப்படாது என்ற பெருமைக்குரியவர். மற்ற கிரகங்களின் சஞ்சாரம் சரியில்லாத போதுகூட, புதன் அதைச் சரிசெய்து நமக்கு அருள் செய்வார். அவ்வாறு, புதன் பகவானுக்கு உரிய நாளான இன்று பொருள் ஈட்டுதல், அசாத்திய பேச்சு திறன், விவேகமான செயல்பாடு போன்றவற்றை பெற விரும்புபவர்கள் இந்த நாளை தவறவிடக் கூடாது. இந்நாளில் விநாயகரை வழிபடலாம், இருப்பினும் புதன் பகவானை தவறாது வழிபட வேண்டும். அதற்கான முன்னேற்பாடாக, உங்கள் வீட்டின் பூஜை அறையை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். புதன் பகவான் படத்திற்கு முன் நல்ல தாமரைக் கோலம் இடவேண்டும். ஒரு கலசத்தில் நீர் நிரப்பு அதன் மேல் மாவிலைகள் வைக்க வேண்டும். அக்கலசத்தை புதன் பகவானாக பாவித்து பச்சை நிற துணியினை அணிவிக்க வேண்டும்.

Also read: Soorasamharam 2025: விண்ணை பிளந்த அரோகரோ முழக்கம்.. சூரபத்மனை சூரசம்ஹாரம் செய்த முருகன்..!

அகல் விளக்கு தீபம்:

பச்சை காய்கறிகள், இனிப்பு பண்டங்கள் நைவேத்தியமாக படைக்க வேண்டும். இரண்டு அகல் விளக்குகளில் நெய் ஊற்றி தீபம் ஏற்ற வேண்டும். விரதம் இருக்க முடிந்தால், முழுநாளும் இருக்கலாம். இல்லையென்றால், பால் பழம் மட்டும் எளிதான உணவினை சாப்பிட்டு வழிபாட்டில் ஈடுபடலாம். காலை, மாலை இருவேளையும் வழிபட வேண்டும். பசு மாட்டிற்கு வேகவைத்த பச்சை பயிறினை உணவாக கொடுத்தால் வருண பகவானின் அருள் கிடைக்கும்.

புதன் காயத்ரி மந்திரம்:

ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுகஹஸ்தாய தீமஹி

தந்நோ புத ப்ரசோதயாத்; எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபட்டால் அனைத்து விதமான நன்மைகளும் வந்து சேரும் என்பது நம்பிக்கை.

கிரகங்களில் மிகச் சிறியதாக இருப்பதால், சந்திரனுக்கு அடுத்து வேகமாக சுற்றக்கூடிய கிரகமாக புதன் இருக்கிறது. சூரியனுக்கு மிக அருகில் உள்ள கிரகம் புதன் என்பதால், புதனுக்கு சூரிய வெளிச்சம் அதிகமாகக் கிடைக்கும். அதனால் புதன், புத்தி, அறிவு, ஞானம் பெற்றவராக இருக்கிறார். எனவேதான் புதனை ‘புத்தி காரகன்’ என்று ஜோதிட உலகம் அழைக்கிறது. புதனின் நிறம் பச்சை. நாம் பசுமையான இடங்களை காணும்போது, மனம் மிகவும் இதமாக இருக்கும். மனம் குதூகலம் அடையும். எனவே புதன், உணர்வுகளை தூண்டும் கிரகம் என்பதை உணர முடியும். புதனுக்கு, அருகன், பண்டிதன், நற்கோள் என்ற பெயர்களும் உண்டு.

சிறப்புகளை கொண்ட புதன் கிழமை:

மேலும், இஷ்ட தெய்வத்தை வழிபடுவதற்கும் சிறந்த நாள் புதன் ஆகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் புதன் கிழமையில் பூஜை செய்தால், குழந்தை பாக்கியம் உண்டாகும். புதன் கிழமையில் விநாயகரை வழிபட்டால், தடைகள் நீங்கும். ரேவதி, ஆயில்யம், கோட்டை, நட்சத்திரங்களை கொண்டவர்களுக்கு புதன் பகவான் வழிபாடு பலன் அளிக்கும். குறிப்பாக புதன் கிழமையில் அசைவ சாப்பாட்டினை தவிர்த்தல் நல்லது.

Also Read: காஞ்சிபுரத்தின் ஆளுமை.. இந்த ராஜகோபாலசுவாமி திருக்கோயில் தெரியுமா?

இப்படி பல்வேறு சிறப்புகளை கொண்ட புதன் கிழமையில், நெல்லிக்காயை பெருமாள் பாதத்தில் வைத்து பூஜை செய்து அதனை சாப்பிட்டால், மகாலட்சுமி உங்கள் வீட்டில் நிரந்தரமாக குடிபுகுந்து விடுவாள். புதன் கிழமையில் உங்கள் வீட்டிலோ அல்லது பக்கத்திலோ நெல்லி மரம் இருந்தால், அதன் மூன்று முறை சுற்றி வந்து வேண்டினால், பெருமாள் நீங்கள் நினைப்பதை நடத்தி தருவார். இன்று வீட்டில் 5 மண் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது மிகவும் நன்மையை கொண்டு வரும்.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரை தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)