போகி அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் – ஆன்மிக பெரியவர்கள் சொல்வது என்ன?

Bhogi Celebrations: பொங்கலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தமிழக அதற்கான கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். குறிப்பாக பொங்கலுக்கு முந்தைய தினமான போகி பண்டிகை அன்று செய்ய வேண்டிய விஷயங்கள் மற்றும் செய்யக் கூடாத விஷயங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

போகி அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும் - ஆன்மிக பெரியவர்கள் சொல்வது என்ன?

மாதிரி புகைப்படம்

Published: 

02 Jan 2026 15:59 PM

 IST

2026 ஆம் ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் பொங்கலுக்கு (Pongal) இன்னும் சில நாட்களே உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாக வீடுகளில் பொங்கல் வைத்து கடவுளுக்கு படைத்து வழிபடுவது வழக்கம். போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் நிகழ்வாக பொங்கல் பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இதில் பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகை தினத்தில் வீடுகளை சுத்தம் செய்து, பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் இதனை பலரும் தவறாக கருதி, பிளாஸ்டிக் போன்ற காற்று மாசு (Air Polution) ஏற்படுத்தும் பொருட்களை எரிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். இந்த நிலையில் போகி அன்று செய்ய வேண்டியவை மற்றும் செய்யக் கூடாதவை குறித்து ஆன்மிக பெரியவர்கள் அறிவுறுத்துகின்றனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

போகி அன்று செய்ய வேண்டியதும் செய்யக் கூடாததும்

  • பொங்கலுக்கு முன் வீட்டை சுத்தப்படுத்தி வீட்டுக்கு வெள்ளையடிக்க வேண்டும்.
  • முன்பு வீடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்த பழைய பொருட்கள், துணிகள் ஆகியவற்றை எரிக்கலாம். ஆனால் பிளாஸ்டிக் பொருட்கள், டயர் போன்றவற்றை எரிக்க கூடாது.
  • பழைய பொருட்களை எரிக்க வேண்டும் என்றால் பிரம்ம முகூர்த்தத்தில் 5.30 மணிக்குள் சூரிய உதயத்திற்கு முன் தான் மேற்கொள்ள வேண்டும்.
  • பழைய பொருட்களை எரிப்பது மட்டுமல்ல போகி. மனிதர்களின் மோசமான குணங்களான கோபம், பகைமை, பொறாமை, வஞ்சம் போன்ற தீய குணங்களையும் நீக்குவதும் தான் போகி.

இதையும் படிக்க : சிவபெருமானுக்கு எதிரில் நந்தி இருப்பது ஏன்? காதில் வேண்டுதல்களை சொல்வது ஏன்?

  • நம் வீடுகளை காக்க கூடிய தெய்வமான குலதெய்வத்தை நம் வீடுகளுக்கும் அழைக்கும் நாளாக போகி இருந்திருக்கிறது. அன்றைய தினம் நம் வீடுகளில் குலதெய்வத்திற்கு வாழை இலையில் படையல் போட வேண்டும்.
  • அதில் அரிசி சாதம், வாழைப்பழம் வெத்தளைப் பாக்கு வைத்து, எங்கள் வீட்டில் நிரந்தரமாக இருந்து எங்களுக்கு அருள வேண்டும் என பிரார்த்திக்க வேண்டும்.
  • இந்த வழிபாடு 6 மணி நேரத்துக்கு மேல் தான் செய்ய வேண்டும். 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

இதையும் படிக்க : திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்…5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

பொதுவாக போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பது வழக்கமாக வைத்திருக்கிறோம். ஆனால் சிலர் இந்த சடங்கை தவறாக புரிந்துகொண்டு பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் டயர் போன்றவற்றை எரித்து காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றனர். ஆனால் நம் மனதில் இருந்து பழைய எண்ணங்களை அகற்றுவதும், நம் வீட்டுக்கு நம் குல தெய்வங்களை அழைப்பதும் தான் போகி என்பதை நம் ஆன்மீக பெரியவர்கள் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பதற்கான கடைசி நாள்.. யாருக்கு இது கட்டாயமில்லை?
துரந்தர் 2 இன்னும் பயங்கரமாக இருக்கும்.... - ராம் கோபால் வர்மா சர்ப்ரைஸ் தகவல்
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் ஓய்வு அறிவிப்பில் சந்தேகம் - உத்தப்பாவின் பேச்சால் சர்ச்சை
தோனியின் காரில் இருந்த சிகரெட் பாக்ஸ் - வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி