Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அப்போ திருச்செந்தூர்.. இப்போ திருத்தணி.. ‘ரீல்ஸ்’ மோகத்தால் கோவில்களுக்கு வந்த புது சோதனை!!

Tiruttani temple: ஏற்கெனவே, திருச்செந்தூர் கோவிலில் ரீல்ஸ் எடுக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடாக விளங்கும் திருத்தணியில், சில நாட்களுக்கு முன்பு இரு இளம்பெண்கள் கோவில் ராஜகோபுரம் முன்பு மாடவீதியில் நின்று வீடியோ எடுத்து ‘ரீல்ஸ்’ என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர்.

அப்போ திருச்செந்தூர்.. இப்போ திருத்தணி.. ‘ரீல்ஸ்’ மோகத்தால் கோவில்களுக்கு வந்த புது சோதனை!!
திருத்தணி கோவில்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Dec 2025 11:47 AM IST

திருத்தனி, டிசம்பர் 27: திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோவிலுக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்வது வழக்கம். அப்படிப்பட்ட, இந்த கோவிலில் சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் கோவில் நிர்வாகத்தையே கடுமையாகக் கவலைப்பட வைத்தது. அந்தவகையில், கோவிலின் கோபுரத்தின் முன்பு இளம்பெண்கள் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இச்செயல் பல இந்து அமைப்புகளின் கடுமையான கண்டனத்தையும், பொதுமக்களின் எதிர்ப்பையும் பெற்றதால், கோயில் நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையும் படிக்க: திருப்பதியில் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு.. 3 நாட்களுக்கு ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் ரத்து – தேவஸ்தானம் அறிவிப்பு..

ரீல்ஸ் மோகத்தால் கோவில்களில் ரீல்ஸ்:

சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால், கோவில்கள் மற்றும் புனித தலங்களில் ‘ரீல்ஸ்’ எடுப்பது என்பது புதிய போக்காகிவிட்டது. ஆன்மீக தலங்கள் தரிசனத்திற்கும், தியானத்திற்கும், அமைதிக்குமான இடங்களாக இருந்தாலும், இளம் தலைமுறையின் ‘சோசியல் மீடியா’ ஆசை சில சமயங்களில் இந்த சூழலை மாறுபடுத்துகிறது. இதனால், கோவில் வளாகங்களில் ரீல்ஸ் எடுப்பது சமூக ரீதியிலும், ஆன்மீக ரீதியிலும் கடும் விமர்சனத்தை சந்திக்கிறது. பல கோவில்கள் இதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளன.

திருச்செந்தூர் கோவிலில் ரீல்ஸ் எடுக்க தடை:

சமீபத்தில் திருச்செந்தூர் கோவிலில், ஒரு இளம்பெண் கோவில் வளாகத்திலேயே நடனமாடி எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சை கிளப்பியிருந்தது. இதைத்தொடர்ந்து, கோவில் நிர்வாகம் கோவில் வளாகத்தில் ரீல்ஸ் எடுப்பது, பாடல்களுக்கு நடனமாடுவது போன்ற செயல்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதோடு, இந்தத் தடை வெறும் அறிவிப்பாக மட்டுமல்லாமல், அதனை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் வெளியிட்டது.

திருத்தணி கோயிலில் ரீல்ஸ்:

இந்நிலையில், முருகப்பெருமானின் ஐந்தாம் படைவீடாக விளங்கும் திருத்தணியில், சில நாட்களுக்கு முன்பு இரு இளம்பெண்கள் கோவில் ராஜகோபுரம் முன்பு மாடவீதியில் நின்று வீடியோ எடுத்து ‘ரீல்ஸ்’ என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றினர். அதேபோல், நந்தி ஆற்றங்கரையில் உள்ள கோட்டா ஆறுமுகசாமி கோவில் வளாகத்திலும், ஒரு பெண் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் எடுத்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின.

இதையும் படிக்க: வைகுண்ட ஏகாதசி – விரதம் இருக்கப்போறீங்களா? அப்போ இந்த தவறுகளை செய்யாதீர்கள்

இதையடுத்து, திருத்தணி முருகன் கோவில் நிர்வாகம், புனிதமான கோவில் வளாகத்தில் இவ்வாறு ரீல்ஸ் படம் பிடித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருத்தணி போலீஸில் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.