AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பாரிஜாத யோகம்.. 3 ராசிக்கு செம லக்!

2025 ஜூன் 22 அன்று, 102 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய பாரிஜாத யோகம் உருவாகிறது. சிம்மம், கும்பம், மகரம் ராசிகளுக்கு இது மிகவும் சாதகமானது. கல்வி, வேலை, நிதி நிலைமை ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் காணலாம். எதிர்பாராத பணவரவு, பதவி உயர்வு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

100 ஆண்டுகளுக்குப் பின் உருவாகும் பாரிஜாத யோகம்.. 3 ராசிக்கு செம லக்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 21 Jun 2025 18:08 PM IST

ஆன்மிகத்தில் நாட்டாம் கொண்ட அனைவருக்கும் ஜோதிடத்தின் மீது அதன் கிரக பலன்கள் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். 9 கிரகங்கள், 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள் என ஜோதிட சாஸ்திரங்கள் தனிமனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இத்தகைய ஜோதிடத்தில் பல யோகங்கள் கிரக சேர்க்கைகள் அல்லது பெயர்ச்சிகள் காரணமாக உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியான பட்சத்தில் அவை 12 ராசிகளையும் வெகுவாக பாதிப்பதாகவும் சொல்லப்படுகிறது. பல யோகங்கள் சில ராசிகளில் நேர்மறையான விளைவையும், மற்றவற்றில் எதிர்மறையான விளைவையும் கொண்டிருக்கிறது. சில சந்தர்ப்பங்களில் இந்த யோகங்களால் நாம் நிதி சிக்கல்கள் உள்ளிட்டவற்றை சந்திக்கலாம். மேலும் சில நேரங்களில் நாம் எதிர்பாராத நன்மைகளையும் பெறலாம். அப்படியாக 102 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு அரிய பாரிஜாத யோகம் உருவாகவுள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி வைகாசி ஏகாதசி திதி வருகிறது. இந்நாளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு பாரிஜாத யோகம் உருவாகிறது. இந்த பாரிஜாத யோகத்தால், 3 ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.அதனைப் பற்றி நாம் விரிவாக காணலாம்.

  1. சிம்மம்: நூற்றாண்டுகளுக்குப் பின் உருவாகும் பாரிஜாத யோகத்தால், சிம்ம ராசிக்காரர்கள் எதிர்பாராத பல பலன்களைப் பெற உள்ளார். குறிப்பாக கல்வி பயிலும் மாணவர்களுக்கு இது பொற்காலமாகும். அவர்களால் பெற்றோர்கள் மிகுந்த செல்வாக்கைப் பெறுவார்கள். மேலும் வேலை, படிப்பு விஷயமாக வெளிநாட்டுப் பயணங்களுக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். அதுமட்டுமின்றி, பணியிடங்களில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு தொடர்பான தகவல்கள் கிடைக்கப் உயர்கல்வி பெற உள்ளவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் இடங்கள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களில் தொழில் செய்பவர்கள் உயர் லாபத்தைப் பெறுவார்கள்.
  2. கும்பம்: கும்ப ராசிக்கு பாரிஜாத யோகம் அதிர்ஷ்டத்தைத் தரும் என சொல்லப்பட்டுள்ளது. பண வரவு தேவைக்கு அதிகமாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரைவில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. விஷ்ணு பகவானின் அருளால், நீங்கள் திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் எந்த தடையும் இல்லாமல் சரியான நேரத்தில் முடிவடையும். வீட்டிலும் வெளியேயும் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். நீங்கள் தொடும் அனைத்தும் தங்கமாக மாறும் சூழல் உருவாகும்.
  3. மகரம்: பாரிஜாத யோகம் உள்ள மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை உண்டாகும். எதிர்பாராத அளவில் தன யோகம் இருக்கும். எதிர்பாராத வழிகளில் பணம் வந்து சேரும். அதைத் தவிர, அவர்கள் எந்த வேலை செய்தாலும் நன்மை கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக பயணம் செய்வீர்கள். இந்தப் பயணங்கள் உங்களுக்கு லாபத்தையும் தரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எடுத்த காரியம் எதிர்பார்த்தபடி முடியும்.

(ஜோதிட சாஸ்திரம் மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் என்றும் பொறுப்பேற்காது)

Follow Us