AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Astrology: இந்த 3 ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் லட்சுமி கடாட்சம் தான்!

தங்கம் அனைவராலும் விரும்பப்படும் ஒரு அலங்காரப் பொருளாகும். ஆனால் ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்களுக்கு தங்கம் அணிவது மிகவும் மங்களகரமானது என சொல்லப்பட்டுள்ளது. மேஷம், சிம்மம், கன்னி ராசிக்காரர்கள் தங்கம் அணிவதால் செல்வம், அதிர்ஷ்டம், நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என ஜோதிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Astrology: இந்த 3 ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் லட்சுமி கடாட்சம் தான்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Jun 2025 12:59 PM IST

தங்கம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. ஆபரணங்களில் மதிப்பு மிக்கதாக கருதப்படும் இந்த தங்கத்தை சிறியவர் முதல் பெரியவர் வரை பல்வேறு விதமான அணிகலன்களாக அணிந்து மகிழ்கின்றனர். கை விரல்களில் மோதிரம் தொடங்கி வளையல், செயின், கம்மல், பிரேஸ்லெட், கொலுசு என பலவிதமாக ஆபரணங்களை அணிந்து மகிழ்கின்றனர். சமீப காலமாக தங்கத்தின் விலை உச்சத்தை எட்டுநிலையில் அதனை வாங்க முடியாமல் நடுத்தர மக்கள் தவித்து வருகின்றனர். எப்போது தங்கம் விலை குறையும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தங்கம் அனைத்து சுப நிகழ்வுகளுடன் தொடர்புடைய ஒன்றாக உள்ளது. சேமிப்புகளில் கை கொடுக்கக் கூடிய பொருளாக தங்கம் உள்ளதால் பலரும் அதனை வாங்கி சேமிக்க விரும்புகிறார்கள்.

என்னதான் நீங்கள் தங்க நகைகளை விதவிதமாக வாங்கி வைத்தாலும் அதனை அணிவதற்கான காலம் கை கூட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் சில ராசிக்காரர்கள் தங்கத்தை அணிந்தால் அதற்கேற்ற பலன்களை பெறுவார்கள் என ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் மூன்று ராசிக்காரர்கள் தங்கத்தை எப்போதும் அணிய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய பலன்களை கொடுக்கும் என கூறப்படும் நிலையில் அதனைப் பற்றி காணலாம்

தங்கம் அணிய வேண்டிய ராசிக்காரர்கள்

  1. மேஷம்: ஜோதிடத்தின்படி, மேஷ ராசிக்காரர்கள் தங்கம் அணிவது மிகவும் மங்களகரமானதாக பார்க்கப்படுகிறது. அவர்கள் தங்கம் அணிவது  மிகப்பெரிய அளவில் செல்வம் ஈட்ட வாய்ப்பளிப்பது மட்டுமல்லாமல், எதிர்பாராத வழிகளில் வருவாய் வரவையும் அளிக்கிறது. மேலும், மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் என்ற நிலையில் அவர் தைரியம் மற்றும் வலிமையின் அதிபதியாவார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அவர் தங்கத்தை மிகவும் விரும்புகிறவர் . எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிவது தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அதிகரித்து செல்வத்தை இரட்டிப்பாக்கும் என சொல்லப்படுகிறது.
  2. சிம்மம்: சிம்ம ராசியில் தங்கம் அணிவது அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனென்றால் இந்த ராசியின் அதிபதி சூரியனாவார். நவக்கிரகங்களில் சூரியன் மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகும். எனவே இந்த ராசிக்காரர்கள் தங்கம் அணிவது எதிர்மறை சக்தியை நீக்கி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ராசியில் தங்கம் அணிவது திடீர் நிதி ஆதாயங்களைத் தரும் என்று ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
  3. கன்னி: கன்னி ராசிக்காரர்கள் தங்கம் அணிந்தால் அவர்களின் முழு வாழ்க்கையும் மாறும் என்று கூறப்படுகிறது. இவர்கள் தங்க நகைகளை அணிந்து வீட்டை மகிழ்ச்சியுடன் சுற்றி வந்தால், லட்சுமி தேவியின் ஆசிர்வாதம் அவர்களுக்குக் கிடைக்கும் என்றும்,  செல்வம் பெருகும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த ராசியின் அதிபதியான புதன் தங்க நகைகளை அணிந்தால், வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் நீங்கி, அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனவும் சொல்லப்படுகிறது.  மேலும் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும் என்று கூறப்படுகிறது.

(ஜோதிட மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us