AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Astrology: சனி மற்றும் செவ்வாயின் தாக்கம்.. இந்த 4 ராசிக்கு அடிக்கும் லக்!

ஜூலை மாதத்தில் செவ்வாய் கன்னி ராசியிலும், சனி மீன ராசியிலும் சஞ்சரிக்க உள்ளது. இது 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், கன்னி, துலாம், மகரம், மீனம் ஆகிய 4 ராசிகளுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும். நிதி, தொழில், கல்வி, திருமணம் போன்ற அம்சங்களில் நல்ல பலன்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Astrology: சனி மற்றும் செவ்வாயின் தாக்கம்.. இந்த 4 ராசிக்கு அடிக்கும் லக்!
ஜோதிடப்பலன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 14 Jun 2025 16:00 PM IST

ஜோதிட சாஸ்திரத்தைப் பொறுத்தவரை கிரகங்களின் செயல்பாடுகள் மிகவும் முக்கியமானவையாக பார்க்கப்படுகிறது. இவை தனி மனித வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என நம்பப்படுகிறது. அத்தகைய நவக்கிரகங்களில் சனி கிரகம் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் சனியின் செல்வாக்கு நேர்மறையாகவும், சில நேரங்களில் எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது தீராத நம்பிக்கையாக உள்ளது. இப்படியான நிலையில் ஜூலை மாதத்தில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் மீன மற்றும் கன்னி ராசிகளில் சஞ்சரிக்க உள்ளார்கள். இது 12 ராசிகளையும் பாதிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக 4 ராசிகளுக்கு மிகப்பெரிய மாற்றம் இருக்கும் என நம்பப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களான செவ்வாய் மற்றும் சனி ஆகியவற்றியில் சனி வக்கிரம் வழியாக மீன ராசிக்குள் நுழைகிறது. அதே நேரத்தில் செவ்வாய் கன்னி ராசிக்குள் செல்வார், இதன் மூலம், நான்கு ராசிகளுக்கும் நடக்கும் அனைத்தும் சுபமாகவே இருக்கும். இது நிதி, ஆரோக்கியம், கல்வி ரீதியாக நல்ல பலன்களை தரும் என நம்பப்படுகிறது.

  1. கன்னி: செவ்வாய் சஞ்சாரத்தால், கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் காலம் வந்து விட்டது. அவர்கள் லாபத்தின் அடையாளமாக பார்க்கப்படும் நரியின் வாலை மிதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். ஏனென்றால் மிகப்பெரிய வாய்ப்புகள் வந்து போகும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கடன்களிலிருந்து பெருமளவு விடுபடுவார்கள். கடந்த காலத்தில் செய்த முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும் நேரமாக அமையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  2. துலாம்: துலாம் ராசிக்காரர்கள் நிதி ரீதியாக இந்த கிரகங்களின் செயல்பாடுகளால் வெற்றி பெறுவார்கள். எதிர்பாராத வழிகளில் பணம் வரும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டில் சுப நிகழ்ச்சிகள் அமையப்பெற்று கொண்டாட்டமான சூழல் உருவாகும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியுடன் பயணம் செய்வீர்கள். மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் இது அற்புதமான காலமாக இருக்கும்.
  3. மகரம்: சனியின் வக்ர பெயர்ச்சி மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய ஒளியைக் கொண்டுவரும் காலமாக மாறும். மாணவர்களுக்கு இது மிகவும் அற்புதமாக பலன்களை கொடுக்கும். உயர்கல்விக்கு நீங்கள் விரும்பும் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நிதி ரீதியாக நன்றாக இருப்பீர்கள். வருமான ஆதாரங்கள் பெருகும்.நீண்ட நாட்களாக இழுவையில் உள்ள கடன்கள் வசூலாகும். உங்கள் குடும்பத்துடனான நேரத்தை மகிழ்ச்சியுடன் செலவிடுவீர்கள். வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு விரைவில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பயணங்கள் லாபகரமாக இருக்கும்.
  4. மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தியாகி தங்கள் ராசியில் நுழைவதால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். அவர்கள் என்ன செய்தாலும் அது ஒன்றாக வரும். நிதி ரீதியாக, அற்புதமான வளர்ச்சியைப் பெறுபவர்களாக இருப்பீர்கள். நீதிமன்ற விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். தொழிலதிபர்கள் மற்றும் சேவைத் துறையில் உள்ளவர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கும். நீங்கள் நிதி சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

(ஜோதிட அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ள இக்கட்டுரை தகவல்களுக்கு அறிவியல் பூர்வமாக விளக்கம் இல்லை. இதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)

Follow Us