Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadi Pooram: 2 லட்சம் வளையல்கள் அலங்காரம்.. அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் கோலாகலம்!

ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் 2 லட்சம் வளையல்களால் அம்மன் அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அலங்காரம் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது. ஆடி மாதம் ஆன்மீக மாதம் என்பதால், பல்வேறு கோயில்களில் ஆடிப்பூரம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Aadi Pooram: 2 லட்சம் வளையல்கள் அலங்காரம்.. அம்மன் கோயில்களில் ஆடிப்பூரம் கோலாகலம்!
ஆடிப்பூரம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 28 Jul 2025 11:53 AM

ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் 2 லட்சம் வளையல்களை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. ஆடி மாதம் என்றாலே ஆன்மிக மாதம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். அப்படியான நிலையில் இம்மாதத்தில் ஏகப்பட்ட விஷேச தினங்கள் வரும். அந்த வகையில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் வரும் நிகழ்வானது ஆடிப்பூரம் என அழைக்கப்படுகிறது. இந்நாளில் பூமா தேவி தோன்றியதாகவும், பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அவதார தினமாகவும் கருதப்படுகிறது. இப்படியான நிலையில் ஆடிப்பூரம் 2025ம் ஆண்டு ஜூலை 28ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு அனைத்து அம்மன் கோயில்களிலும் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

குறிப்பாக ஆடிப்பூரம் திருவிழா பெண்களுக்கு மிகவும் உகந்தது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் நினைத்தது நடக்கும், செல்வ வளம் பெருகும், குழந்தைப் பாக்கியம் கிட்டும், திருமண வரன் அமையும் என நம்பப்படுகிறது. தமிழ்நாட்டில் இன்று அம்மன் கோயில்களில் வளைகாப்பு திருவிழா நடைபெறும். வழிபாட்டில் வைக்கப்படும் கண்ணாடி வளையல்கள் சாமி தரிசனம் செய்ய வரும் பெண்களுக்கு வழங்கப்படும்.

Also Read:Pachaiamman: பிரச்னையே வாழ்க்கையா இருக்கா? – தீர்வு தரும் பச்சையம்மன் கோயில்!

மேல்மலையனூர் அம்மன் கோயில் திருவிழா

இதனிடையே மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் ஆடிப்பூரம் விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பால் தயிர் பன்னீர் சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது அதனைத் தொடர்ந்து பட்டுப் புடவை அணிவிக்கப்பட்டு சுமார் 2.10 லட்சம் கண்ணாடி வளையல்கள் கொண்டு உற்சவர் ஆன அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது பின்னர் பல்வேறு வகையான வண்ண மலர்கள் கொண்டு அர்ச்சனை நடைபெற்றது இந்த வழிபாட்டின்போது அம்மனுக்கு பிடித்த பல்வேறு வகையான பழங்கள் மற்றும் நைவைத்தியமாக சர்க்கரை பொங்கல் சுண்டல் ஆகியவையும் வைத்து வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

Also Read:Aadi Pooram: ஆடிப்பூரம் நாளில் இந்த 5 பொருட்கள் வாங்கினால் செல்வம் கொட்டும்!

இதே போல் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கற்றாம்பட்டி கிராமத்தில் செயல்பாட்டில் இருந்து வரும் பழமை வாய்ந்த ரகுபதி கிருஷ்ணா கொண்டம்மாள் கோயிலில் அம்மனுக்கு ஐம்பதாயிரம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது மேலும் மதுரை மீனாட்சி, நெல்லை காந்திமதியம்மன் என  அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அம்மன் கோயில்களில் வளையல்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகிறது. மேலும்  இந்நாள் ஆண்டாள் அவதார தினம் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோயிலில் வெகு விமரிசையாக திருத்தேரோட்டம் நடைபெற்றது.