AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க!

Cockroaches: தீபாவளி விடுமுறைக்காக வீட்டைப் பூட்டிச் செல்வதற்கு முன்பு கரப்பான் பூச்சிகளைத் தடுக்க வீட்டைச் சுத்தமாக வைத்திருப்பது அவசியம். அழுக்கு பாத்திரங்கள், குப்பைகள் மற்றும் திறந்த நிலையில் இருக்கும் உணவுப் பொருட்களை அகற்றி, சமையலறையை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், வடிகால்களை மூடி, சுவர்களில் உள்ள விரிசல்களையும் அடைத்துச் சென்றால் கரப்பான் பூச்சிகள் நடமாட்டத்தைக் குறைக்கலாம்.

Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 01 Nov 2026 07:00 AM IST
வீட்டைப் பூட்டுவதற்கு முன்பு சமையலறை, குளியலறை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். காய்கறிக் கழிவுகள், பழத்தோல்கள் மற்றும் உணவு மிச்சங்கள் கரப்பான் பூச்சிகளை ஈர்க்கும். குப்பைத்தொட்டிகளைச் சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு நன்றாகக் கழுவி உலர வைக்க வேண்டும். குறிப்பாக, குப்பைகளைத் திறந்த நிலையில் வைத்துச் செல்லாமல் மூடியுள்ள தொட்டிகளைப் பயன்படுத்துவது நல்லது.

1 / 5
அரிசி, பருப்பு, கோதுமை மாவு, சர்க்கரை போன்ற மளிகைப் பொருட்களைத் திறந்த நிலையில் வைக்கக்கூடாது. இவற்றின் வாசனை கரப்பான் பூச்சிகளை ஈர்ப்பதுடன் உணவுப் பொருட்களையும் பாதிக்கலாம். எனவே, அனைத்து மளிகைப் பொருட்களையும் காற்றுப் புகாத கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் டப்பாக்களில் சேமிக்க வேண்டும். பிஸ்கட், நொறுக்குத்தீனிகள் மற்றும் பழங்கள், காய்கறிகளையும் பாதுகாப்பாக மூடி வைக்க வேண்டும்.

2 / 5
வெளியூர் செல்வதற்கு முன்பு சமையலறையில் உள்ள அனைத்து பாத்திரங்களையும் நன்றாகக் கழுவ வேண்டும். பாத்திரங்களில் ஒட்டியிருக்கும் உணவுத் துகள்கள் மற்றும் எண்ணெய்ப் பிசுக்குகள் கரப்பான் பூச்சிகளை ஈர்க்கக்கூடும். பாத்திரங்களைக் கழுவிய பிறகு சிங்க் மற்றும் அதன் வடிகட்டியில் உள்ள உணவுக் கழிவுகளையும் அகற்ற வேண்டும். மேலும், ஈரமான ஸ்பாஞ்ச், ஸ்க்ரப்பர் மற்றும் துணிகளைச் சிங்கில் விட்டுச் செல்லாமல் உலர்த்தி வைக்க வேண்டும்.

3 / 5
கரப்பான் பூச்சிகள் உயிர்வாழ்வதற்கு உணவைப் போலவே தண்ணீரும் அவசியமாகும். எனவே, சிங்க், குளியலறை மற்றும் சமையலறைப் பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சொட்டும் குழாய்களைச் சரிசெய்து, வடிகால்களில் பூச்சிகள் நுழைய முடியாத வகையில் மூடிகள் பொருத்த வேண்டும். மேலும், சுவர்களில் உள்ள விரிசல்கள், குழாய்களைச் சுற்றியுள்ள இடைவெளிகள் மற்றும் பழைய அட்டைப்பெட்டிகளை அகற்ற வேண்டும்.

4 / 5
கேஸ் அடுப்பு, சமையல் மேடை மற்றும் சுவர்களில் படிந்திருக்கும் எண்ணெய்ப் பிசுக்குகளை அகற்ற வேண்டும். அடுப்பின் பர்னர்கள் மற்றும் தரையில் சிதறியிருக்கும் உணவுத் துகள்களையும் சுத்தம் செய்ய வேண்டும். பிரிட்ஜ், மைக்ரோவேவ், மிக்ஸி ஆகியவற்றின் அடிப்பகுதிகளில் தேங்கியுள்ள உணவுக் கழிவுகளையும் அகற்ற வேண்டும். சமையலறைத் தரையைப் பெருக்கித் துடைத்து ஈரமின்றி உலர வைப்பது அவசியம்.

5 / 5
Follow Us