AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காய்ச்சல் நேரத்தில் மழையில் நனைவது பாதுகாப்பானதா?

காய்ச்சல் உள்ள நேரத்தில் மழையில் நனைவது உடலின் வெப்பநிலையைத் திடீரென மாற்றி, ஏற்கனவே பலவீனமாக இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தியை மேலும் குறைத்துவிடும். இதனால் சளி, இருமல் மற்றும் தலைவலி போன்ற உபாதைகள் அதிகரித்து காய்ச்சலின் வீரியம் தீவிரமடையும். எனவே, காய்ச்சல் முழுமையாகக் குணமாகும் வரை மழையில் நனையாமல் உடலை கதகதப்பாக வைத்துக் கொண்டு ஓய்வெடுப்பதே விரைவான மீட்சிக்கு வழிவகுக்கும்.

Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 05 Oct 2026 17:36 PM IST
காய்ச்சல் இருக்கும்போது உடலில் வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்பதால், அந்த நேரத்தில் மழையில் நனையும்போது உடலின் வெப்பநிலை திடீரெனக் குறைந்து மாறுபடும். இந்தத் திடீர் வெப்பநிலை மாற்றம் உடலுக்குப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி, ஏற்கனவே இருக்கும் காய்ச்சலின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும். எனவே, உடல்நிலை சரியில்லாத போது மழையில் நனைவதைத் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

1 / 5
உடலில் நோய்த்தொற்று ஏற்படும்போது நமது நோய் எதிர்ப்பு மண்டலம் அதை எதிர்த்துப் போராட அதிக ஆற்றலைச் செலவிட்டு உடலை பலவீனமாக வைத்திருக்கும். இந்நிலையில் குளிர்ச்சியான மழைநீரில் நனையும்போது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி மேலும் குறைந்து காய்ச்சலை உண்டாக்கிய கிருமிகள் வேகமாகப் பெருக வழிவகுக்கும். இது உடலின் இயல்பான குணமடைதல் செயல்பாட்டைத் தாமதப்படுத்தி நோயை நீடிக்கச் செய்யும்.

2 / 5
மழையில் நனைவதால் தலைபாரம், சளி, இருமல் மற்றும் மூ அடைப்பு போன்ற சுவாசம் தொடர்பான நோய்த்தொற்றுகள் உடனடியாக அதிமாக வாய்ப்புள்ளது. காய்ச்சலோடு சேர்ந்து இந்த உபாதைகளும் சேரும்போது அது சைனஸ் அல்லது நுரையீரல் சார்ந்த பாதிப்புகளாக மாறக்கூடும். இதனால் லேசான காய்ச்சலாக இருப்பது கூடக் தீவிரமான உடல்நலப் பிரச்சனையாக உருவெடுக்கக் கூடும்.

3 / 5
காய்ச்சல் அடிக்கும் போது உடலில் நடுக்கமும் குளிரும் இயல்பாகவே ஏற்படும் என்பதால், மழையில் நனைவது உடலை மேலும் குளிரவைத்து நடுக்கத்தை அதிகரிக்கும். இதன் காரணமாக உடலின் தசைநாண்கள் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலியும் சோர்வும் உண்டாகும். நோயின் போது உடலுக்குத் தேவையான ஓய்வு கிடைக்காமல் போவதுடன், உடல் அசதி இரட்டிப்பாகும்.

4 / 5
எனவே காய்ச்சல் குணமாகும் வரை மழையில் நனையாமல் உடலை எப்போதும் கதகதப்பாகவும் உலர்வாகவும் வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். வெதுவெதுப்பான நீரைக் குடித்து, சத்துள்ள சூடான உணவுகளை உட்கொண்டு போதிய ஓய்வு எடுப்பதே விரைவில் குணமடைய உதவும். மீறி மழையில் நனைந்தால் மருத்துவச் செலவுகளும் உடல் உபாதைகளும் தேவையில்லாமல் அதிகரிக்கும்.

5 / 5
Follow Us