வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா? ஆராய்ச்சி முடிவுகள் சொல்வது என்ன?
How Music Enhances Productivity : இன்றைய காலகட்டத்தில் வேலைப்பளு காரணமாக அனைவரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். மன அழுத்தத்தில் இருந்து உடனடியாக விடுபட பலரும் டி குடிப்பது, சமூக வலைதளங்களை பார்ப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். இந்த நிலையில் வேலையின் போது பாடல் கேட்பது மன அழுத்ததில் இருந்து விடுபட உதவும் என சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

வேலைப் பளு காரணமாக நம்மில் பலரும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். அப்படி ஏற்படும் மன அழுத்தத்தில் (Stress) இருந்து உடனடியாக விடுபட சிலர் டீ (Tea) குடிப்பது, சமூக வலைதளங்களை பார்ப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். பெரும்பாலானோர் இசையைக் கேட்பதை விரும்புகிறார்கள். பாடல்கள் பெரும்பாலும் மனதை அமைதிப்படுத்தும். பேருந்து, கார் போன்றவற்றில் பயணம் செய்யும் போது உங்கள் ஹெட்ஃபோன்களில் (Headphones) இசை ஒலித்துக் கொண்டிருக்கும்போது அதனை கேட்டு பயணிப்பது அலாதியானது. இசை நமது எண்ணங்களை உடனடியாக மாற்றும் ஆற்றல் படைத்தது. எவ்வளவு பெரிய மன அழுத்தத்தில் இருந்தாலும் இசை மனதை சட்டனெ மாற்றி இயல்பு நிலைக்கு கொண்டுவரக் கூடிய தன்மை அதற்கு இருக்கிறது.
மனதுக்கு ஆறுதல் அளிக்கும் இசை
நீண்ட நேரம் யாரிடமும் பேசாமல், கணினி முன் அமர்ந்து, திரையைப் பார்த்துக் கொண்டு, வேலையில் மூழ்கி இருக்கும்போது எவரும் சில மணி நேரங்களிலேயே சோர்வாகவும் மன அழுத்தமாகவும் உணர்வோம். எனவே நாம் சலிப்பாக உணரும்போது, ஏதாவது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுகிறோம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பலர் பாடல்களைக் கேட்க விரும்புகிறார்கள். வேலை செய்யும் போது நீங்கள் இசை கேட்கிறீர்களா? இது உங்கள் மனதை வெறுமையில் இருந்து ஓரளவுக்குக் காப்பாற்றும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இசையைக் கேட்பது பெரும்பாலும் உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. நீங்கள் எந்த வகையான பாடல்களைக் கேட்கிறீர்கள் என்பதும் மிக முக்கியம். சோகப் பாடல்களைக் கேட்க விரும்புபவர்கள், வேலை நேரத்தில் அத்தகைய பாடல்களைக் கேட்டால் அவர்களின் வேலைக்கு எந்தப் பயனும் இருக்காது. மாறாக, உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் பாடல்களைக் கேட்பது வேலையில் ஏற்படும் சலிப்பைத் தவிர்க்க உதவும்.
மகிழ்ச்சியான பாடலைத் தேர்ந்தெடுங்கள்
வேலை செய்யும் போது இசையைக் கேட்பது நல்லதுதான், ஆனால் மகிழ்ச்சியான பாடல்களைத் தேர்ந்தெடுக்காவிட்டால் அது மேலும் உங்களுக்கு சோர்வை அளிக்கும். மகிழ்ச்சியான இசையைக் கேட்டுக்கொண்டே வேலை செய்யும்போது நாம் சோர்வடைவதில்லை. மேலும், உங்கள் மனதில் உள்ள அனைத்து கவலைகளும் கோபமும் உடனடியாக மறைந்துவிடும். இசை வேலையை விரைவுபடுத்துகிறது. நீங்கள் மகிழ்ச்சியாக வேலை செய்யும்போது, உங்கள் படைப்பாற்றலும் அதிகரிக்கிறது. எனவே, வேலை செய்யும் போது நிறைய மகிழ்ச்சியான பாடல்களைக் கேளுங்கள்.
இசைக் கருவிகளின் இசையை கேளுங்கள்.
வேலை செய்யும் போது பாடல்களுக்கு பதிலாக வயலின், கிடார், போன்ற இசைக் கருவிகளின் இசையை கேளுங்கள். வேலை செய்யும் போது கேட்க இந்த வகையான இசை சிறந்தது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. காரணம், நாம் வாத்திய இசையைக் கேட்கும்போது, நமது கவனம் பாடல் வரிகளின் மீது ஈர்க்கப்படுவதில்லை.
இசையைக் கேட்பது சிறந்தது என்றாலும், நீண்ட நேரம் இயர்போன்களைப் பயன்படுத்துவது பல உடல்நலப் பிரச்னைகளை ஏற்படுத்தும். சில நேரங்களில் நாம் அதிக சத்தத்தில் இசையைக் கேட்போம். இது காதுகளின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். எனவே, வரம்பை மீறும் இயர்போன்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.