Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

வீட்டில் இருந்தபடியே 35 கிலோ குறைத்த இளைஞர் – இந்த 6 சாலட்களை டிரை பண்ணுங்க – இது தான் சீக்ரெட்டா?

Best 6 Veg Salads for Weight Loss : உடல் எடை அதிகரிப்பு பிரச்னை தற்போது இளைஞர்களிடையே அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில் இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்தபடியே 6 மாதங்களில் 35 கிலோ எடை குறைந்திருக்கிறார். அதற்கு காரணமான 6 சாலட்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

வீட்டில் இருந்தபடியே 35 கிலோ குறைத்த இளைஞர் – இந்த 6 சாலட்களை டிரை பண்ணுங்க – இது தான் சீக்ரெட்டா?
35 கிலோ எடை குறைத்த ஜிதின்
karthikeyan-s
Karthikeyan S | Updated On: 04 Jun 2025 15:14 PM

 மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கத்தின் காரணமாக பலரும் உடல் எடையினால் (Body Weight) அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடையைக் குறைக்க கடுமையான டயட் (Diet) மேற்கொள்வது, ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்வது என கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இங்கு ஒரு இளைஞர் இயற்கையான முறையில் வீட்டிலேயே எளிமையான உணவு முறைகள் மூலம் 35 கிலோ எடையைக் குறைத்திருக்கிறார்.   ஜிதின் வி சரேஷ் என்ற இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  உடல் எடையைக் குறைப்பதற்கும் பளபளப்பான சருமத்தை பெறுவதற்கும்  சாலட்களை (Salad)  பகிர்ந்திருக்கிறார்.  இவர் கடந்த மே 31, 2025 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீட்டிலேயே செய்யக் கூடிய 6 சாலட்களை பகிர்ந்திருக்கிறார்.  அவர் பகிர்ந்த 6 சாலட்கள் என்னென்ன? அவற்றை எப்படி செய்வது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

1. பீட்ரூட், ஆரஞ்சு மற்றும் புதினா சாலட்

பீட்ரூட் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. ஆரஞ்சு வைட்டமின் சி கொண்டுள்ளதால் அது நம் சருமத்தை பளபளப்பாக்குகிறது.

செய்முறை:

சிறிய பீட்ரூட்டை வேக வைத்து நறுக்கவும். பின்னர் ஒரு ஆரஞ்சை தோலுரித்து துண்டுகளாக எடுத்துக்கொள்ளவும். மேலும் அதில் புதினா இலைகளை சேர்க்கவும். அதன் மேல் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து சிறிது நேரம் வைத்திருந்து சாப்பிடலாம்.

2. மாங்காய், மூங்கிலி பாசிப் பயறு சாலட்

மாங்காயில் உள்ள வைட்டமின் சி, தோலுக்கு கொலாஜன் தருகிறது. பாசிப்பயறு உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.

செய்முறை

அரை கப் நறுக்கிய மாங்காயில்,  அரை கப் பாசிப் பயறு, 2 மேசைக்கரண்டி துருவிய தேங்காய், சிறிது மிளகாய் தூள், உப்பு, சீரகப்பொடி சேர்க்கவும். கடுகு, கருவேப்பிலை கொண்டு தேங்காய் எண்ணெயில் தாளித்து மேலே ஊற்றவும்.

35 கிலோ எடை குறைத்த ஜிதின்

 

 

View this post on Instagram

 

A post shared by Jithin VS (@jithin_vsuresh)

3. காரட், வெள்ளரிக்காய், மாதுளை சாலட்

சருமத்துக்கு தேவையான ஈரப்பதம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்கள் இதிலுள்ளன.

செய்முறை

1 துருவிய காரட், 1 வெள்ளரிக்காய் நறுக்கி, 2 மேசைக்கரண்டி மாதுளை முத்துக்களை அதில் போட வேண்டும்.  பின்னர் எலுமிச்சை சாறு, சிறிது பு உப்பு, கொத்தமல்லி சேர்த்து கலந்து 5 நிமிடம் ஊர வைத்து சாப்பிடலாம்.

4. சுண்டல், தக்காளி, வெங்காயம் சாலட்

இதில் உள்ள ஊட்டச்சத்துகள் உடலுக்கு தேவையான புரதம் மற்றும் ஹார்மோன்கள் சமநிலைப்படுத்த உதவுகிறது.

செய்முறை:

அரை கப் வெந்நீர் வெள்ளை  சுண்டல், 1 நறுக்கிய வெங்காயம், 1 நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி, எலுமிச்சை சாறு,  சீரகப்பொடி, புதினா இலைகள் சேர்த்து கலந்து பரிமாறவும்.

5. அவகாடோ, வெள்ளரிக்காய், ஆளி விதை சாலட்

இவை தோலுக்கு தேவையான ஊட்டசத்துக்களை வழங்குகின்றன.

செய்முறை:

ஒரு அவகாடோ மற்றும் ஒரு வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கவும். 1 ஸ்பூன் வறுத்த ஆளி விதையை சேர்க்கவும். சிறிது ஆலிவ் எண்ணெய், எலுமிச்சை சாறு, உப்பு கலந்து தூவி சாப்பிடலாம்.

6. கீரை, ஆப்பிள், வால்நட் சாலட்

கீரையில் உள்ள இரும்புச்சத்து, ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, வால்நட்டில் உள்ள ஓமேகா-3 ஆகியவை கொழுப்புகள் போன்றவை தோலைப் பாதுகாக்கும்.

செய்முறை:

1 கப் கீரையை வெதுவெதுப்பான நீரில் வேக வைத்துக் கொள்ளவும். அதில் அரை கப் ஆப்பிளை நறுக்கி, 5-6 வால்நட்டுகளை சேர்க்கவும். ஆலிவ் எண்ணெய், தேன், எலுமிச்சை சாறு சேர்த்து சாப்பிடலாம்.