Sleeping Tips: இரவில் அடிக்கடி திடீரென முழிப்பு வருகிறதா..? இதற்கு காரணம் என்ன?
Habits For Better Sleep: செல்போன்கள், டிவிகள் அல்லது பல்புகளில் இருந்து வரும் ப்ளூ ரே, தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால்தான் தூங்க செல்வதற்கு முன் அறையில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைப்பது முக்கியம். அதேபோல், மொபைல் மற்றும் டிவி ஆகியவற்றின் திரைகளை பார்ப்பதை தவிர்க்கவும்.
தூக்கம் என்பது எல்லாருக்கும் தேவையான ஒன்றாகும். நீங்கள் ஒருநாள் ஒழுங்காக தூங்கவில்லை என்றாலும் அன்றைய நாள்(Daily Habit) முழுவதும் உங்களுக்கு சோர்வு தொடரும். பலரும் எவ்வளவு சோர்வாக இருந்தாலும், ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் திடீரென முழிப்பு தட்டும். அதன்பிறகு, மீண்டும் ஆழ்ந்த தூக்கத்திற்கு (Sleeping) செல்ல அதிக நேரம் எடுக்கும். இப்படி என்றைக்காவது ஒருநாள் நடந்தால் பரவாயில்லை, தினமும் நடந்தால் இதற்கு காரணம் என்னவென்று யோசித்திருக்கிறீர்களா..? மருத்துவர்கள் இதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளது என்று கூறுகின்றனர். அந்தவகையில், ஆழ்ந்த தூக்கத்தின் போது ஏன் டக்கென்று முழிக்கிறோம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: குழந்தைகளை ஏசி அறையில் தூங்க வைக்கிறீர்களா..? டாக்டர் ஹரிணி ஸ்ரீ சொல்லும் டிப்ஸ்!
தூக்கத்தில் இருந்து திடீரென எழுந்திரிக்காமல் இருக்க செய்ய வேண்டியவை:
- செல்போன்கள், டிவிகள் அல்லது பல்புகளில் இருந்து வரும் ப்ளூ ரே, தூக்கத்திற்கு காரணமான மெலடோனின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதனால்தான் தூங்க செல்வதற்கு முன் அறையில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைப்பது முக்கியம். அதேபோல், மொபைல் மற்றும் டிவி ஆகியவற்றின் திரைகளை பார்ப்பதை தவிர்க்கவும். இது உங்கள் தூக்கத்தின் நடுவில் எழுந்திருப்பதைத் தடுக்கும்.
- சிறந்த தூக்கத்திற்கு சீரான தூக்கம் முக்கியம். ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்க சென்று, அடுத்த நாள் ஒரே நேரத்தில் எழுந்திருக்க முயற்சிக்க வேண்டும். வேலை நாட்களை தவிர, வார இறுதி நாட்களிலும் இதைப் பின்பற்றுவது நல்லது. இது தூக்கப் பிரச்சினைகளைக் குறைக்கும்.
- இரவில் செர்ரி அல்லது செர்ரி ஜூஸ் குடிப்பது உங்களுக்கு நன்றாக தூங்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் இவற்றில் மெலடோனின் உள்ளது. இது சிறந்த தூக்கத்தை தரும். இதுமட்டுமின்றி, பாதாம் மற்றும் வாழைப்பழங்களும் தூக்கத்தை மேம்படுத்த உதவுகின்றன. இதனுடன், இரவு நேரங்களில் சிக்கன் ரைஸ் போன்ற கனமான அல்லது காரமான உணவை சாப்பிடக்கூடாது. இது உங்கள் தூக்கத்தைத் தொந்தரவு செய்யாது.
- இரவு நேரங்களில் தூங்க செல்வதற்கு முன் வைஃபை ரவுட்டர்களை ஆஃப் செய்வது நல்லது. உண்மையில், வைஃபை ரவுட்டர்கள் அல்லது பிற மின்னணு சாதனங்களிலிருந்து வெளிப்படும் மின்காந்த அலைகள் சர்க்காடியன் தாளங்களைப் பாதிக்கலாம்.
- உங்களுக்கு இரவு தூக்கத்தின்போது அடிக்கடி விழிப்பு ஏற்பட்டால், தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். தியானம் மனதை அமைதிப்படுத்தி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இது உடலைத் தளர்த்தி, உங்களுக்கு விரைவாகத் தூங்க உதவி செய்யும்.
ALSO READ: சாப்பிட்ட உடனே தூங்குவது எவ்வளவு ஆபத்தானது? இந்த பக்கவிளைவுகள் ஏற்படும்!
- மேலும், தூக்கமின்மை கார்டிசோல் மற்றும் வளர்ச்சி ஹார்மோன் போன்ற ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். இவை குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கின்றன. அதனால்தான் நிபுணர்கள் சீரான உணவை உண்ண அறிவுறுத்துகிறார்கள்.
- அறை வெப்பநிலையில் சுமார் 18 டிகிரி செல்சியஸில் தூங்குவது சிறந்தது. இதனுடன், நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் கால்களில் சாக்ஸ் அணிவது உங்கள் உடல் வெப்பநிலையை சீராக்க உதவுகிறது. மெலடோனின் வெளியிடப்பட்டு உங்களுக்கு தூங்க உதவி செய்யும்.


