Kitchen Hacks: குளிர்காலத்தில் இந்த காய்கறிகளை ப்ரிட்ஜில் வைக்கிறீர்களா..? அதன் தன்மையை குறைக்கும்!
Vegetables Storage: குளிர்காலத்தில் கூட, வானிலை எவ்வளவு குளிராக இருந்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை ப்ரஸாக வைத்திருக்க குளிர்சாதன பெட்டியில் ஸ்டோர் செய்து வைக்கிறோம் . ஆனால் பல சுகாதார நிபுணர்கள் இந்த காய்கறிகளில் சிலவற்றை குளிர்காலத்தில் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது என்று கூறுகின்றனர்.

காய்கறிகள்
நம்மில் பெரும்பாலோர் மார்க்கெட்டிற்கு சென்று வாரம் முழுவதும் நமக்கு தேவையான அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள் வாங்கி வந்து பயன்படுத்துவோம். இது மாதிரியான ஒரே நேரத்தில் கொண்டு வந்து ப்ரிட்ஜில் வைக்கிறார்கள். குளிர்காலத்தில் கூட, வானிலை எவ்வளவு குளிராக இருந்தாலும், பழங்கள் மற்றும் காய்கறிகளை ப்ரஸாக வைத்திருக்க குளிர்சாதன பெட்டியில் (Fridge) ஸ்டோர் செய்து வைக்கிறோம் . ஆனால் பல சுகாதார நிபுணர்கள் இந்த காய்கறிகளில் சிலவற்றை குளிர்காலத்தில் (Winter) குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது என்று கூறுகின்றனர். ஏனெனில், இவற்றின் பண்புகள் உண்மையில் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, எந்த காய்கறிகள் குளிர்சாதன பெட்டியில் சேமிக்க ஏற்றவை அல்ல என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: தக்காளியை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்துகிறீர்களா? அப்போ ஜாக்கிரதை!!
குளிர்காலத்தில் ப்ரிட்ஜில் வைக்கக்கூடாத காய்கறிகள்:
பூண்டு, வெங்காயம்:
பூண்டு மற்றும் வெங்காயத்தை எப்போது மூடி வைப்பது நல்லதல்ல. பொதுவாகவே, சமையலறையில் ஒரு சிறிய கூடையில் வைப்பதுதான். அறை வெப்பநிலையில் கூட அவை நீண்ட நேரம் புதியதாக இருக்கும். நீங்கள் அவற்றை உரித்து அல்லது பேஸ்ட் செய்து ப்ரிட்ஜில் வைத்தால், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு குறையும்.
தக்காளி:
தக்காளி இல்லாமல் கிட்சனில் சமையலே இருக்காது. இருப்பினும், பலரும் தக்காளியை ப்ரிட்ஜில் வைக்கிறார்கள். இருப்பினும், அவற்றை ப்ரிட்ஜில் வைக்கக்கூடாது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். ஏனெனில் அவற்றை ப்ரிட்ஜில் வைத்திருப்பது அவற்றின் சுவை மற்றும் அமைப்பை கெடுத்துவிடும். கூடுதலாக, தக்காளியில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகளும் அழிக்கப்படுகின்றன. குளிர்காலத்தில் வெளியே வைத்திருந்தாலும், தக்காளி ஒரு வாரம் வரை கெட்டுப்போகாது.
கீரைகள்:
கீரைகள் போன்ற பச்சை காய்கறிகளை ப்ரிட்ஜில் 12 மணி நேரம் மட்டுமே வைக்க முடியும். இதை விட அதிக நேரம் சேமித்து வைப்பது அவற்றின் இயற்கையான சுவை, அமைப்பு மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை எதிர்மறையாக பாதிக்கும். மேலும், காலிஃபிளவர் மற்றும் கேரட்டை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கக்கூடாது.
உருளைக்கிழங்கு:
பலர் உருளைக்கிழங்கை ப்ரிட்ஜில் போட்டு வைக்கிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. ப்ரிட்ஜில் உருளைக்கிழங்கை வைத்திருப்பது அவை முளைக்கச் செய்வது மட்டுமல்லாமல், அவற்றில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாகவும் மாறுகிறது. இது சர்க்கரை நோயாளிகளை மட்டுமல்ல, அனைவரின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது.
ALSO READ: வேகவைத்த முட்டைகளை எத்தனை நாட்கள் சாப்பிடலாம்? இவை எப்போது கெட்டுப்போகும்?
இஞ்சி:
குளிர்காலத்தில் ப்ரிட்ஜில் வைக்கக்கூடாத மற்றொரு காய்கறி இஞ்சி. நீங்கள் அதை ப்ரிட்ஜில் வைத்திருந்தால், பூஞ்சைகள் அதில் வளர்ந்து அதைக் கெடுக்கும். இந்த வகை இஞ்சியை உட்கொள்வது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலில் தீங்கு விளைவிக்கும்.