AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Strawberry Moon 2025: வானில் நடக்கும் அதிசயம்! பார்க்க ரெடியா?

June's full strawberry moon: ஆண்டுதோறும் ஒருமுறை தோன்றும் "ஸ்ட்ராபெரி நிலவு", 2025 ஜூன் 11ம் தேதி இந்தியா உட்பட உலகம் முழுவதும் காணப்படும். தமிழ்நாட்டில் ஜூன் 10 இரவு 7.30 மணிக்கு தென்படும். இது தங்க நிறத்தில் பிரகாசிக்கும், வித்தியாசமான பௌர்ணமி நிலவாகும். இந்த நிலவிற்கு "ஸ்ட்ராபெரி" என்ற பெயர் அமெரிக்க பழங்குடியினர் வைத்த பெயராகும்.

Strawberry Moon 2025: வானில் நடக்கும் அதிசயம்! பார்க்க ரெடியா?
ஆண்டுதோறும் ஒருமுறை தோன்றும் "ஸ்ட்ராபெரி நிலவு"Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 11 Jun 2025 10:57 AM IST

சென்னை ஜூன் 11: இந்த ஆண்டின் ஸ்ட்ராபெரி நிலவு (Strawberry Moon ) 2025 ஜூன் 11ம் தேதி தோன்றும் என்றும், தமிழ்நாட்டில் ஜூன் 10ம் தேதி இரவு 7.30 மணிக்கு பார்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் (Scientists) தெரிவித்துள்ளனர். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் பௌர்ணமி நிலவாகும்(It is a full moon.). நிலவு தங்க நிறத்தில் பிரகாசிக்கும் வித்தியாசமான வடிவம் கொண்டதாக இருக்கும். இதற்கு “ஸ்ட்ராபெரி” என்ற பெயர், அமெரிக்க பழங்குடியினர் வசந்தகால இறுதியில் ஸ்ட்ராபெரி பழங்கள் விளையும் காலத்தை குறிக்கும் வகையில் வந்தது. இந்த நிலவு பூமியின் அடிவானத்திலேயே ஒளிர்வது முக்கிய சிறப்பாகும். கடலோரங்களில் அலைகளின் வேகம் அதிகரிக்கலாம் என்றாலும், பொதுமக்கள் தினசரி செயல்களில் எந்த வித தடையும் இல்லை.

ஆண்டுதோறும் ஒருமுறை தோன்றும் “ஸ்ட்ராபெரி நிலவு”

ஆண்டுதோறும் ஒருமுறை தோன்றும் “ஸ்ட்ராபெரி நிலவு” இந்த ஆண்டு 2025 ஜூன் 11ம் தேதி வானில் காணப்படும் என விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இது பொதுவான பௌர்ணமிகளுக்கு மாறாக, மிகவும் வித்தியாசமான பூரண நிலவாகும். இது அடிவானத்திலேயே முழுமையாக பிரகாசிக்கும் தன்மை கொண்டது. இந்தியா உட்பட உலகின் பல பகுதிகளில் இந்த நிலவை காண முடியும். தமிழ்நாட்டில் ஜூன் 10ம் தேதி இரவு 7.30 மணிக்கே இது தென்படத் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

“ஸ்ட்ராபெரி நிலவு” எனப்படும் இந்த பெயர் நிலவு ஸ்ட்ராபெரி பழம் போல் தோன்றும் என்பதற்கல்ல. இந்த நிலவிற்கு இப்பெயர் அமெரிக்க பழங்குடியினரால் வழங்கப்பட்டுள்ளது. காரணம், வசந்தகாலத்தின் கடைசி பௌர்ணமியில்தான் ஸ்ட்ராபெரி பழங்கள் அதிகம் விளைவதாக அங்கு நம்பப்படுவதால் தான். இந்த நிலவு தங்க நிறத்தில் ஒளிரும் தன்மை கொண்டது.

வானில் இன்று தோன்றும் ஸ்ட்ராபெரி நிலவு

Look up tonight for something sweet!

The full Strawberry Moon, named by the Algonquin tribes for the time of year that berries ripen, will take to the night skies on June 10-11. pic.twitter.com/GKr41bGUUV

வானியல் ரீதியாக ஒரு முக்கிய நிகழ்வு

சூரியனை பூமி சுற்றும் பாதை நீள்வட்டமாக இருப்பதால், இந்த பௌர்ணமியின் போது பூமி சூரியனுக்கு மிக நீண்ட தூரத்தில் இருக்கும். இதனால் நிலவும் அந்த அடிவானத்திலேயே பிரகாசமாகத் தோன்றும். இது வானியல் ரீதியாக ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

இந்த நாளில் பொதுமக்கள் ஏதேனும் தீவிரமான நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. கர்ப்பிணிப் பெண்கள் உட்பட யாரும் சாதாரண நாளென இயல்பாக இயங்கலாம். ஆனால் கடலோர பகுதிகளில் அலைகளின் வேகமும், உயரமும் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால் அவதானத்துடன் இருக்க ஆலோசனை வழங்கப்படுகிறது.

இந்த ஸ்ட்ராபெரி நிலவு இரவில் வானத்தில் பளிச்சென ஒளிரும் போது, அதன் மேல் வலது பக்கத்தில் சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும் ஆன்டரஸ் நட்சத்திரத்தையும் காணலாம். வானியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இந்த வான நிகழ்வை தவறாமல் காணும் வாய்ப்பை பயன்படுத்தலாம்.

பெயருக்குப் பின்னால் ஒரு கதை

ஆதிகாலத்தில், வட அமெரிக்கக் காடுகளில் வாழ்ந்த பழங்குடி மக்கள், வானின் ஒவ்வொரு அசைவையும், இயற்கையின் ஒவ்வொரு மாற்றத்தையும் கூர்ந்து கவனித்து தங்கள் வாழ்க்கையுடன் இணைத்துக் கொண்டார்கள். ஜூன் மாதத்தில், அவர்களது நிலங்கள் முழுவதும் ஸ்ட்ராபெரி பழங்கள் பழுத்து, அறுவடைக்குத் தயாராக நிற்கும். அந்த அறுவடை காலத்தைக் குறிக்கும் விதமாக, இந்த முழு நிலவுக்கு அவர்கள் ‘ஸ்ட்ராபெரி மூன்’ என்று பெயரிட்டனர். நிலவின் நிறத்திற்கும், இந்தப் பெயருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை; மாறாக, இது இயற்கையின் வளம் கொழிக்கும் காலத்தைக் குறிக்கும் ஒரு அழகான குறியீடு.

ஐரோப்பியர்கள் இந்த நிலவை ‘ரோஸ் மூன்’ என்றோ, வெப்பமான காலத்தைக் குறிக்கும் விதமாக ‘ஹாட் மூன்’ என்றோ அழைத்தார்கள். சில கலாச்சாரங்களில், திருமணம் புரிந்தவர்கள் இனிப்புப் பயணத்தைத் தொடங்கும் ‘ஹனிமூன்’ மாதத்துடன் இது தொடர்புபடுத்தப்பட்டது. ஒவ்வொரு பெயரும், அந்தந்தப் பகுதியின் வாழ்வியலையும், நம்பிக்கைகளையும் பிரதிபலித்தது.

Follow Us