Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கால்களுக்கு கீழே தலையணையை வைத்து தூங்குவதால் நடக்கும் மேஜிக் – டிரை பண்ணி பாருங்க!

Relief for Back Pain : இப்போது பலரும் இடுப்பு வலி, முதுகு வலி போன்ற பிரச்னைகளால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் அவர்கள் தூங்கும்போது கால்களுக்கு கீழே தலையணை வைத்து தூங்குவதால் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கால்களுக்கு கீழே தலையணையை வைத்து தூங்குவதால் நடக்கும் மேஜிக் – டிரை பண்ணி பாருங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Jul 2025 22:15 PM

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், பெரும்பாலான மக்கள் முதுகுவலி, (Back Pain)சோர்வு போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறார்கள்.  இதனால் மக்கள் தூக்கமின்மை பிரச்னையும் ஏற்படுகிறது. இதனால் பலர் மருத்துவமனைகளுக்கு அதிகம் செலவு செய்கிறார்கள். ஆனால் தூங்கும் பழக்கத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் இந்த பிரச்னைகளில் இருந்து வெளியே வரமுடியும்.  குறிப்பாக உங்கள் கால்களுக்குக் கீழே தலையணையை வைத்து தூங்குவது போன்ற ஒரு சிறிய பழக்கம் உங்கள் முதுகெலும்புக்கு (Spine) சிறந்த ஆதரவை அளித்து, காலையில் புத்துணர்ச்சியுடன் உணர உதவும். இது உண்மையில் சாத்தியமா என சந்தேகம் ஏற்படலாம். ஆனால் பலருக்கு இந்த பழக்கம் நல்ல தீர்வை அளித்திருக்கிறது.

இந்த முறையில் நாம் தூங்கும் போது நாம் நேராக மேல் நோக்கி பார்த்தபடி படுக்க வேண்டும். பின்னர் முழங்காலுக்கு கீழே தலையணையை வைக்க வேண்டும். இது நம் முதுகெலும்பை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது. முதுகெலும்பு சமநிலைக்கு வரும். இடுப்பில் அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும். இது முதுகெலும்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, முதுகுவலியையும் மெல்ல போக்குகிறது.

இதையும் படிக்க: நீண்ட நேரம் அமர்ந்தபடி வேலை பார்க்கிறீர்களா? முதுகெலும்புக்கு ஆபத்து

வெரிகோஸ், வெயின்ஸ் போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வு

டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் எலும்பியல் துறையைச் சேர்ந்த டாக்டர் அகிலேஷ் யாதவ், கால்களுக்குக் கீழே, குறிப்பாக முழங்கால்களுக்குக் கீழே தலையணையுடன் தூங்குவது நன்மை பயக்கும் என்று கூறுகிறார். உங்கள் கால்களை சற்று உயரமாக வைத்திருக்கும்போது, உடலில் இரத்த ஓட்டம் மேம்படும். குறிப்பாக நாள் முழுவதும் நிற்பதாலும் அல்லது நடப்பதாலும் கால்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் கனத்தன்மை படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. இந்த முறை  நரம்புகளில் ஏற்படும் வலி, கால்களில் சோர்வு மற்றும் எரிச்சல் உணர்வு போன்ற பிரச்னைகளுக்கும் நிவாரணம் அளிக்கிறது.

ஸ்லிப் டிஸ்க், ஸ்பான்டைலிடிஸ் அல்லது பிற முதுகெலும்பு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கால்கள் அல்லது முழங்கால்களுக்குக் கீழே ஒரு தலையணையை வைத்திருக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது முதுகுத்தண்டில் அழுத்தத்தை ஏற்படுத்தாது, மேலும் உடல் தசைகள் இரவு முழுவதும் தளர்வாக இருக்கும். இந்த முறை  பக்கவாட்டில் தூங்குபவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும், ஏனெனில் கால்களுக்கு இடையில் ஒரு தலையணையை வைப்பது இடுப்பு மற்றும் முதுகெலும்பை நேர்கோட்டில் வைத்திருக்க உதவுகிறது.

இதையும் படிக்க : இரவில் தூங்க முடியவில்லையா? அப்போ இத டிரை பண்ணுங்க.. நொடியில் தூக்கம் வரும்!

மென்மையான தலையணையை பயன்படுத்துவது அவசியம்

இந்த பழக்கத்தை மேற்கொள்வதற்கு முன் மனதில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், தலையணை மிக உயரமாகவோ அல்லது கடினமாகவோ இருக்கக்கூடாது. லேசான, மென்மையான தலையணை சிறந்தது. தலையணை முழங்கால்களுக்குக் கீழே இடுப்பு மற்றும் முதுகெலும்புக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உயரமானதாக இருக்க வேண்டும்.

முதுகெலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கால் சோர்வைக் குறைக்கவும், உங்கள் தூக்கத்தை வசதியாக மாற்றவும் விரும்பினால், உங்கள் கால்களுக்குக் கீழே ஒரு தலையணையை வைத்து தூங்க முயற்சிக்கவும். இந்த எளிய பழக்கம் உங்களுக்கு நல்ல தூக்கத்தை வழங்குவதோடும் உடலுக்கும் புதிய நிம்மதியைத் தரும்.