Smooth Hair : பளபளப்பான கூந்தல் வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம் ஹேர் மாஸ்க்!

Home Natural Hair Masks : விலையுயர்ந்த முடி பராமரிப்பு இல்லாமல் வீட்டிலேயே எளிதாக முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும் இயற்கை வழிகள் பல உள்ளன. முட்டை, கற்றாழை, தேங்காய் எண்ணெய், வெங்காய சாறு போன்ற பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஹேர் மாஸ்க்குகள் முடிக்கு மிக நல்லது. அவற்றை எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.

Smooth Hair : பளபளப்பான கூந்தல் வேண்டுமா? வீட்டிலேயே செய்யலாம் ஹேர் மாஸ்க்!

முடி பராமரிப்பு

Published: 

23 Jun 2025 20:30 PM

 IST

ஆணோ, பெண்ணோ ஒவ்வொருவரும் மென்மையான மற்றும் பளபளப்பான கூந்தலை விரும்புகிறார்கள். இதற்காக, மக்கள் விலையுயர்ந்த சிகிச்சைகளை நாடுகிறார்கள், அவற்றில் ஒன்று கெரட்டின் சிகிச்சை. இது முடியை மென்மையாகவும், நேராகவும், பளபளப்பாகவும் மாற்ற உதவுகிறது. ஆனால் இதற்கு சற்று அதிக செலவாகும். இதில் பல வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன, இதன் காரணமாக சிலர் அதைச் செய்யத் தயங்குகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், சில வீட்டு டிப்ஸ்களை கொண்டே முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற முடியும்.

முடியை மென்மையாக்க, வீட்டிலேயே கிடைக்கும் இயற்கை பொருட்களைக் கலந்து ஒரு ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம். இது முடியை வலுப்படுத்தவும் உதவும். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இதைப் பயன்படுத்தலாம். இது முடியை வலுவாகவும் மென்மையாகவும் இயற்கையாகவே மாற்ற உதவும்.

முட்டை

முட்டையில் நல்ல அளவு புரதம் உள்ளது. நீங்கள் அதை ஒரு ஹேர் மாஸ்க் செய்து உங்கள் தலைமுடியில் தடவலாம். எனவே 1 முட்டை, வாழைப்பழம், 4 ஸ்பூன் பால் மற்றும் 3 ஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து ஹேர் மாஸ்க் செய்யலாம். அதில் 3 ஸ்பூன் ஆலிவ் எண்ணெயையும் சேர்க்கலாம். இந்த ஹேர் மாஸ்க்கை 20 முதல் 25 நிமிடங்கள் வரை தலைமுடியில் தடவி, பின்னர் ஷாம்பு செய்யுங்கள். இது வறட்சியைக் குறைத்து, முடியை மென்மையாக்க உதவும். வாரத்திற்கு ஒரு முறை இதைப் பயன்படுத்தலாம்.

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய்

கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் இரண்டும் முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவுகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டையும் கலந்து ஒரு ஹேர் மாஸ்க் தயாரிக்கலாம். புதிய கற்றாழை ஜெல்லை எடுத்து அதனுடன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து பேஸ்ட் செய்யவும். அதை உங்கள் தலைமுடியில் 20 முதல் 30 நிமிடங்கள் தடவி, பின்னர் ஷாம்பு செய்யுங்கள். இது முடியை வலுவாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். நீங்கள் வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்தலாம்.

வெங்காய சாறு

வெங்காயச் சாறு முடி வளர்ச்சிக்கும் நன்மை பயக்கும், வெங்காயச் சாற்றில் கற்றாழை ஜெல் அல்லது தேங்காய் எண்ணெயைக் கலந்து முடியில் தடவலாம். 2-3 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை 2-3 ஸ்பூன் வெங்காயச் சாற்றில் கலந்து, உங்கள் தலைமுடியில் 25 முதல் 30 நிமிடங்கள் தடவி, பின்னர் சிகைக்காய் போடுங்கள். இது முடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்ற உதவும். இந்த ஹேர் மாஸ்க்குகளைப் பயன்படுத்துவதற்கு முன், ஒரு பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள். அது உங்களுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே உங்கள் தலைமுடியில் தடவவும்.

Follow Us
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..