Pongal 2026: பொங்கல் பண்டிகைக்கு தயாரா..? எளிதாக வீட்டை அலங்கரிக்கும் குறிப்புகள்..!
Pongal Home Cleaning: பொங்கல் பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்வதற்கு முன், வீட்டில் தேவையற்ற அனைத்து பொருட்களையும் அகற்றி வெளியேற்றவும். மேலும், அலமாரிகளில் உள்ள பொருட்களை கீழே எடுத்து வைத்து, அந்த இடத்தில் உள்ள தூசிகளை சுத்தம் செய்யவும். வீட்டில் உள்ள அனைத்து அறைகளின் மூலைகளில் உள்ள தூசியைத் துடைப்பதன் மூலம் தொடங்குவதற்கு மற்றொரு நல்ல இடம்.
பொங்கல் பண்டிகைக்கு (Pongal Festival 2026) தயாராக உங்களுக்கு உதவ, எளிதான மற்றும் சிறந்த முறையில் வீட்டை சுத்தம் செய்யும் முறைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம். பெரும் பொங்கல் வருகின்ற 2026 ஜனவரி 15ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இன்னும் வீட்டை சுத்தம் (Home Cleaning) செய்ய ஒருநாளே உள்ள நிலையில், சமையலறையில் தொடங்கி வீட்டின் மற்ற பகுதிகளும் சுத்தம் செய்யாமல் இருந்தால் உடனே இந்த குறிப்புகளை தெரிந்து கொள்வோம். அதன்படி, சுத்தம் செய்யும் செயல்முறையை எளிதாக்க சமையலறையில் இருந்து தொடங்கலாம்.
வீட்டை சுத்தம் செய்ய முதலில் என்ன செய்ய வேண்டும்..?
பொங்கல் பண்டிகைக்கு வீட்டை சுத்தம் செய்வதற்கு முன், வீட்டில் தேவையற்ற அனைத்து பொருட்களையும் அகற்றி வெளியேற்றவும். மேலும், அலமாரிகளில் உள்ள பொருட்களை கீழே எடுத்து வைத்து, அந்த இடத்தில் உள்ள தூசிகளை சுத்தம் செய்யவும். வீட்டில் உள்ள அனைத்து அறைகளின் மூலைகளில் உள்ள தூசியைத் துடைப்பதன் மூலம் தொடங்குவதற்கு மற்றொரு நல்ல இடம். ஏனெனில், இங்குதான் அதிகபடியான தூசிகள் மற்றும் ஒட்டடை அடைந்திருக்கும். மேலும், இதுபோன்ற இடங்களை நாம் அதிகமாகவும் பயன்படுத்தி இருக்க மாட்டோம்.
ALSO READ: பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது..? முக்கியத்துவம், வழிபாட்டு முறை விவரம் இதோ!




பொங்கல் பண்டிகைக்குத் தயாராகுவது எப்படி..?
சமையலறையை சுத்தம் செய்தல்:
வெள்ளி, பித்தளை மற்றும் செம்பு பாத்திரங்களை சுத்தம் செய்ய இயற்கை முறைகளைப் பயன்படுத்துங்கள். எலுமிச்சை சாறு அல்லது சோப்பு அழுத்தி துடைப்பதன்மூலம் இந்த சமையலறை பொருட்களை சுத்தம் செய்யலாம். இது பாதுகாப்பானது. அதனை தொடர்ந்து எண்ணெய் பசையுள்ள அடுப்பு மற்றும் டைல்ஸ்களை தண்ணீர் தெளித்து, வெள்ளை வினிகர் மற்றும் சமையல் சோடாவை கலந்து தேய்த்து எளிதாக சுத்தம் செய்யலாம்.
படுக்கை அறை சுத்தம்:
உங்கள் வீட்டில் படுக்கை அறையில் உள்ள கட்டில், துணிகளை எடுத்து ஓரமாக வைத்தும், மெதுவாக நகர்த்தி, எல்லா பக்கங்களையும் சுத்தம் செய்யலாம். குப்பைகள் அதிகமாக உள்ள இடத்தை சுத்தம் செய்து, உடனடியாக அள்ளிவிடுங்கள். இல்லையெனில், இது வீடு முழுவதும் பரவி மீண்டும் குப்பையாக்கும்.
பெயிண்ட் அடித்தல்:
வீட்டை முழுமையாக சுத்தம் செய்தபின் வீட்டை முழுமையாக வண்ணமயமாக மாற்ற வீட்டிற்குள்ளேயும், வெளியேயும் வண்ணம் பூசலாம். இதுமட்டுமின்றி, மெத்தையில் மெத்தை விரிப்பான், கதவு மற்றும் ஜன்னல்களில் ஸ்கீரின் ஆகியவற்றை பயன்படுத்தலாம். இது வீட்டிற்கு இன்னும் அழகை கூட்டும்.
ALSO READ: நெருங்கும் பொங்கல்! கைகளை அழுக்காக்காமல் வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!
பூக்களால் அலங்கரித்தல்:
உங்கள் வீட்டை இன்னும் அழகாக மாற்ற ப்ரஸான பூக்களை பயன்படுத்தலாம். இது வீட்டிற்கு அழகையும் மற்றும் வாசனையையும் மேம்படுத்த உதவும். கதவுகள் மற்றும் ஜன்னல்களில் பூக்களை வைப்பதற்கு முன், அந்தப் பகுதி சுத்தமாகவும், தூசி இல்லாததாகவும் மாற்றி தோரணமாக தொங்கவிடலாம்.
இருப்பினும், பூக்கள் கொசுக்களை ஈர்க்கும் என்பதால், தொல்லை தரும் பூச்சிகளைத் தடுக்க சில ஊத்துப்பத்திகளை கொளுத்தலாம். பொங்கலுக்காக உங்கள் முழு வீட்டையும் சுத்தம் செய்து முடித்ததும், பொங்கல் பண்டிகையை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.