Bra Hygiene: ஒரே பிராவை எத்தனை முறை அணிவது சரி..? எந்த தவறு பிரச்சனையை தரும்..?
Bra Wearing Tips: ஒரு வாரம் அணிந்த பிறகுதான் நீங்கள் பிராவை துவைக்கிறீர்கள் என்றால், அது உங்கள் சருமத்தைப் பாதிக்கும். பிராக்களில் வியர்வை, இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்குகள் குவிந்து, பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஃபோலிகுலிடிஸ் அல்லது கேண்டிடா இன்டர்ட்ரிகோ போன்ற பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று உங்களுக்கு ஏற்படலாம்.
இன்றைய நவீன காலத்தில் பல பெண்கள் பிரா (Bra) அணிவதை விரும்புவது கிடையாது. பல பெண்கள் பிராக்களை மிகவும் டைட்டாக அணிகிறார்கள். பல பெண்கள் (Ladies) பிராவை கடமைக்கு அணிகிறார்கள். பிராக்கள் குறித்து வெவ்வேறு சுகாதார நிபுணர்கள் வெவ்வேறு கருத்துகளை கொண்டுள்ளனர். சிலர் பிரா அணிவது பாதுகாப்பு இல்லை என்றும், சிலர் பிரா அணிவது அவசியம் என்றும் கூறுகிறார்கள். ப்ராவின் ஒரே நோக்கம் மார்பகங்களை தாங்குவதுதான். எனவே, டி-சர்ட்கள் மற்றும் பேன்ட்களைப் போலவே, அவ்வப்போது பிராக்களையும் துவைப்பது முக்கியம். பிரா அணியலாமா வேண்டாமா என்பது தனிப்பட்ட விருப்பம் என்றாலும், சுகாதார நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.
ப்ரா துவைப்பது ஏன் முக்கியம்..?
நீங்கள் எத்தனை நாட்கள் பிரா அணியலாம், எத்தனை நாட்களுக்குப் பிறகு அதைத் துவைக்க வேண்டியிருக்கும். மற்ற எந்த ஆடைகளையும் விட பிராக்கள் உங்கள் சருமத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளன. மற்ற ஆடைகளை காட்டிலும் வியர்வை, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் குவிகின்றன. சுத்தமான பிராவை அடிக்கடி அணிவது உங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாள் முழுவதும் ஆறுதலையும் நம்பிக்கையையும் மேம்படுத்தும்.
ALSO READ: நெய் கொண்டு உள்ளங்காலில் மசாஜ்.. ஓடி ஒளியும் சரும சோர்வு!




பிராவை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை துவைப்பது நல்லது..?
ஒரு வாரம் ஒரே பிராவை அணிவது நல்ல பழக்கம் அல்ல. சுகாதாரம் மற்றும் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க இரண்டு அல்லது மூன்று முறை அணிந்த பிறகு பிராவை துவைக்க வேண்டும். தொடர்ச்சியாக பல நாட்கள் ஒரே பிராவை அணிவது பாக்டீரியா , இறந்த சரும செல்கள், வியர்வை மற்றும் பிற அசுத்தங்களை குவிக்க வழிவகுக்கும், இது உங்களை நோய்வாய்ப்படுத்தும்.
ஒரு வாரம் அணிந்த பிறகுதான் நீங்கள் பிராவை துவைக்கிறீர்கள் என்றால், அது உங்கள் சருமத்தைப் பாதிக்கும். பிராக்களில் வியர்வை, இறந்த சரும செல்கள் மற்றும் அழுக்குகள் குவிந்து, பூஞ்சை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஃபோலிகுலிடிஸ் அல்லது கேண்டிடா இன்டர்ட்ரிகோ போன்ற பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்று உங்களுக்கு ஏற்படலாம்.
ALSO READ: ஐஸ் கட்டி கொண்டு 5 நிமிட மசாஜ்… முகம் இவ்வளவு பொலிவு பெறுமா..?
ப்ராவை சரியான முறையில் எப்படி அணிவது..?
- தவறான பிரா அளவை அணிவது உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மார்பக வலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். இது நாளடைவில் உங்கள் மார்பக தசைகளில் குறிப்பிடத்தக்க பிரச்சனைகளை ஏற்படுத்தும். சரியான அளவிலான பிரா அணிவது உங்களை இலகுவாகவும், சௌகரியமாகவும் உணர வைக்கும்.
- உங்களுக்கு பெரிய மார்பக அளவு இருந்தால், உங்கள் பிரா பட்டைகளின் எடை உங்கள் தோள்களில் அடையாளங்களை பதிக்கும். இந்த அடையாளங்கள் தோள்பட்டை வலியை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் பிராவை சிறிது நேரம் அகற்றுவது உங்கள் முதுகு மற்றும் மார்பகங்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், தோல் எரிச்சலை குறைக்கும். உங்கள் மார்பகஙக்ளில் சரியான இரத்த ஓட்டத்திற்கு, இரவில் தூங்கும்போது பிரா அணிவதை தவிர்ப்பது முக்கியம்.
- சரியான அளவிலான பிரா அணிவது உங்கள் மார்பகங்களுக்கு ஆதரவை வழங்கும். ஒரு நல்ல பிரா உங்கள் மார்பங்களில் தொய்வு ஏற்படுவதை தடுக்கிறது.