Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: துணிகளை பிழியும் போது உங்கள் கை வலிக்கிறதா? அதற்குப் பின்னால் உள்ள காரணம் இதுதான்!

Nerve Damage in Hand: மணிக்கட்டில் உள்ள நரம்புகள் ஏதோ ஒரு வகையில் சேதமடையும் போது இந்த வகையான பிரச்சனை ஏற்படுகிறது. மருத்துவ ரீதியாக, இந்த நிலை புற நரம்பியல் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவு நீண்ட காலமாக கட்டுப்பாடில்லாமல் இருந்தால், நரம்புகள் சேதமடையக்கூடும்.

Health Tips: துணிகளை பிழியும் போது உங்கள் கை வலிக்கிறதா? அதற்குப் பின்னால் உள்ள காரணம் இதுதான்!
கை வலிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Oct 2025 17:51 PM IST

பலர் நாள் முழுவதும் பல்வேறு வீட்டு வேலைகளைச் செய்யும்போது, ​​கை மற்றும் கால்களில் வலிகளை (Hand Pain) உணர்வார்கள். இதை பெரிதாக கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள். சிறிய வேலைகள் முதல் பெரிய வேலைகள் வரை அனைத்திற்கும் ஒவ்வொருவருக்கும் உடல் நிலைகள் ஒரே மாதிரியாக இருப்பது கிடையாது. பலர் வீட்டு வேலைகள் அனைத்தையும் தாங்களாகவே செய்கிறார்கள். பாத்திரங்களைக் கழுவுதல், வீட்டைத் துடைத்தல் (House Cleaning), சமைத்தல், துணிகளைத் துவைத்தல் போன்றவற்றை செய்கிறார்கள். அதேநேரத்தில், ஈரமான துணிகளைப் பிசையும்போது பலர் தங்கள் உள்ளங்கைகளில் வலியை உணர்கிறார்கள். இதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன? மருத்துவர்களின் கூற்றுப்படி, இது நடந்தால், கவனமாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

எதனால் இந்த வலி ஏற்படுகிறது..?

நிபுணர்களின் கூற்றுப்படி, மணிக்கட்டில் உள்ள நரம்புகள் ஏதோ ஒரு வகையில் சேதமடையும் போது இந்த வகையான பிரச்சனை ஏற்படுகிறது. மருத்துவ ரீதியாக, இந்த நிலை புற நரம்பியல் என்று அழைக்கப்படுகிறது. ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவு நீண்ட காலமாக கட்டுப்பாடில்லாமல் இருந்தால், நரம்புகள் சேதமடையக்கூடும். இது அத்தகைய வலியை ஏற்படுத்தும். இது இத்துடன் முடிவதில்லை. தொடர்ந்து, எடையை தூக்கும்போதோ அல்லது அதிக வேலையை செய்யும்போதோ நரம்புகளின் செயல்பாடு குறையக்கூடும்.

ALSO READ: காலையில் எழுந்ததும் கழுத்து, முதுகு பகுதிகளில் வலியா..? இதற்கான காரணங்கள் இதுதான்..!

உங்கள் கையில் உள்ள நரம்புகள் சேதமடைந்துள்ளதா என்பதை எப்படி அறிவது?

  • ஒருவருக்கு நரம்பில் பாதிப்பு ஏற்பட்டால், கையின் பிடியில் வலிமை இருக்காது. இதனுடன், தசைகளும் மிகவும் பலவீனமாகிவிடும்.
  • உங்கள் கைகளில் எடுக்கும் பொருட்கள் தவறி விழுந்தாலோ அல்லது சிறிது நேரத்திலே நடுங்க ஆரம்பித்தோ பலவீனமும் ஒரு காரணம்.
  • உங்கள் கை திடீரென காரணமே இல்லாமல் மரத்துப் போனால், உங்கள் கையில் உள்ள நரம்புகள் சேதமடைந்துள்ளன என்று அர்த்தம்.
  • உங்கள் கைகளில் கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • சில நேரங்களில் கை வலி ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடங்கி படிப்படியாக மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. அப்படியானால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

ALSO READ: மழைக்காலத்தில் புரத உணவுகள் ஏன் முக்கியம்..? என்னென்ன உணவுகளை எடுக்க வேண்டும்?

பல நேரங்களில், கையில் திடீர் வலி ஏற்படும் போது, ​​சிலர் பிசியோதெரபி சிகிச்சையை மேற்கொள்கின்றனர். இதன் விளைவாக, பலருக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கிறது. ஆனால் இந்தப் பிரச்சனை மோசமடைந்தால், அதைப் புறக்கணிக்காமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது முக்கியம்.