Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: காலையில் எழுந்ததும் கழுத்து, முதுகு பகுதிகளில் வலியா..? இதற்கான காரணங்கள் இதுதான்..!

Back and Neck Pain: காலையில் எழுந்தவுடன் உடல் முழுவதும், கைகள் மற்றும் கால்கள், இடுப்பு அல்லது முதுகில் வலி (Back Pain) ஏற்படுவது அத்தகைய ஒரு பிரச்சனையாகும். இருப்பினும், இந்தப் பிரச்சனை வயதானவர்களிடையே மட்டுமல்ல, இன்றைய இளைய தலைமுறையினரிடையேயும் பொதுவானதாகி வருகிறது.

Health Tips: காலையில் எழுந்ததும் கழுத்து, முதுகு பகுதிகளில் வலியா..? இதற்கான காரணங்கள் இதுதான்..!
கழுத்து வலிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 05 Oct 2025 16:24 PM IST

வயது அதிகரிக்கும் போது வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் உடலில் அதிகரிக்கத் தொடங்குகின்றன. குறிப்பாக பல்வேறு உடல் பிரச்சனைகள் ஏற்படத் தொடங்குகின்றன. காலையில் எழுந்தவுடன் உடல் முழுவதும், கைகள் மற்றும் கால்கள், இடுப்பு அல்லது முதுகில் வலி (Back Pain) ஏற்படுவது அத்தகைய ஒரு பிரச்சனையாகும். இருப்பினும், இந்தப் பிரச்சனை வயதானவர்களிடையே மட்டுமல்ல, இன்றைய இளைய தலைமுறையினரிடையேயும் (Younger Generation) பொதுவானதாகி வருகிறது. ஆனால் அதைப் பற்றி யோசிக்காமல் இந்த விஷயத்தைப் புறக்கணிப்பது நல்லதல்ல. அப்படியானால், நீங்கள் பெரிய சிக்கலில் மாட்டுவீர்கள். அப்படியானால் என்ன செய்வது? இது ஏன் நடக்கிறது? இதோ தீர்வை இங்கே தெரிந்து கொள்வோம்.

தவறான தூக்க நிலை:

தூங்கும் போது முதுகெலும்பு அல்லது கழுத்து சரியான நிலையில் இல்லாவிட்டால், தசைகள் மற்றும் மூட்டுகளில் அழுத்தம் ஏற்படும். அப்படியானால், நீங்கள் காலையில் எழுந்ததும், உங்கள் முதுகு, கழுத்து அல்லது உங்கள் உடலில் வேறு எங்கும் வலியை உணரலாம். தவறான நிலையில் தூங்கும்போது இது அதிக அழுத்தத்தை சந்தித்து வலியை கொடுக்கும்.

மெத்தையின் தரம்:

படுக்கை மெத்தை மிகவும் மென்மையாகவோ அல்லது மிகவும் கடினமாகவோ இருந்தால், உடலுக்கு பெரும்பாலும் சரியான ஆதரவு கிடைக்காது. அந்த நிலையில், முதுகு மற்றும் மூட்டு வலி ஏற்படலாம். மேலும், இவை உங்களுக்கு சரியான தூக்கத்தை பெற உதவி செய்யாது. இதனால், நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணருவீர்கள்.

தூக்கமின்மை:

போதுமான தூக்கம் இல்லாமல், உடலின் செல்கள் மீண்டும் உருவாக்கப்படுவதில்லை, இதன் விளைவாக காலையில் தசைகள் மற்றும் மூட்டுகளில் சோர்வு அல்லது வலி ஏற்படும்.

ALSO READ: மழைக்காலத்தில் பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் தொற்று ஏன் ஏற்படுகிறது..? தடுப்பது எப்படி?

ஃபைப்ரோமியால்ஜியா:

ஃபைப்ரோமியால்ஜியா என்பது ஒரு வகையான நாள்பட்ட வலி கோளாறு பிரச்சனையாகும். இது உடல் முழுவதும் வலியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக காலையில் எழுந்தவுடன். இது சோர்வு, நினைவாற்றல் இழப்பு மற்றும் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

மூட்டுவலி அல்லது கீல்வாதம்:

வயதாகும்போது, ​​எலும்புகள் மோசமடையத் தொடங்குகின்றன. மூட்டுகளில் ஏற்படும் உராய்வு அல்லது குருத்தெலும்பு அரிப்பு காரணமாக காலையில் வலி அதிகமாக உணரப்படுகிறது. இருப்பினும், இந்தப் பிரச்சனை இளைஞர்களிடமும் ஏற்படலாம்.

உடலில் நீர்ச்சத்து இழப்பு அல்லது சமநிலையின்மை:

இரவில் தூங்கும் போது போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உங்கள் தசைகள் சரியாக சுருங்காது, இது வலியை ஏற்படுத்தும். எனவே, உங்கள் தசைகளில் அல்லது வேறு இடங்களில் வலி இருந்தால் அல்லது பிடிப்புகள் இருந்தால் அதிக தண்ணீர் குடிக்க மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அதிகப்படியான மன அழுத்தம்:

மன அழுத்தம் உடலின் தசைகளை இறுக்குகிறது. இதன் விளைவுகள் காலையில் அதிகமாகத் தெரியும். இது உடல் முழுவதும் விறைப்பு அல்லது வலி போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

ALSO READ: மாறிவரும் வானிலை..! இந்த 4 பொருட்களுடன் சுரைக்காயை ஏன் சேர்த்து சாப்பிடக்கூடாது?

இந்த பிரச்சனைகள் வராமல் இருக்க என்ன செய்யலாம்..?

  • இதுபோன்ற பிரச்சனைகள் வராமல் இருக்க முதலில் நீங்கள் இரவு முழுவதும் சரியான நிலையில் தூங்க பழகுங்கள். அதன்படி, மருத்துவர் பரிந்துரைத்த ஆரோக்கியமான மெத்தையைப் பயன்படுத்துங்கள். அதிகப்படியான மென்மையான அல்லது கடினமான மெத்தையைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க முயற்சி செய்யுங்கள்.
  • காலையில் லேசான உடற்பயிற்சி அல்லது யோகா செய்யலாம். இது உடல் விறைப்பைக் குறைக்கிறது.
  • போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், சத்தான உணவை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தவும். தொடர்ந்து நடக்கும் பழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
  • உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை நீண்ட நாட்களாகவோ அல்லது கடுமையானதாகவோ இருந்தால், தாமதமின்றி மருத்துவரை அணுகுவது அவசியம். காலை வலி லேசான அறிகுறியாகத் தோன்றினாலும், புறக்கணிக்கப்பட்டால், இது நாளைடைவில் உங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக வந்து சேரும்.