Health Tips: கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பரிசோதனை ஏன் முக்கியம்? எதை சாப்பிடலாம்..?
Pregnancy and Hemoglobin Test: கர்ப்ப காலத்தில், தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் போதுமான ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனை உறுதி செய்வதற்காக ஒரு பெண்ணின் இரத்த அளவு சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த நேரத்தில் ஹீமோகுளோபின் அளவுகள் பெரும்பாலும் குறைய தொடங்கும்.

ஹீமோகுளோபின் (Hemoglobin) என்பது நமது இரத்த சிவப்பணுக்களில் (RBCs) காணப்படும் ஒரு புரதமாகும். இதன் முக்கிய செயல்பாடு நுரையீரலில் இருந்து உடலின் ஒவ்வொரு பகுதிக்கும் ஆக்ஸிஜனைக் கொண்டு சென்று கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுவதாகும். அதேநேரத்தில், இதுதான் நம் உடலில் போதுமான ஹீமோகுளோபின் ஆற்றலைப் பராமரித்தும், சோர்வைக் குறைத்தும், உறுப்புகளை சரியாகச் செயல்பட வைக்க உதவுகிறது. மேலும், ஹீமோகுளோபின் உடலில் இரத்தத்தின் சரியான அளவு மற்றும் தரத்தை பராமரிக்க உதவுகிறது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் குழந்தையின் வளர்ச்சி (Child Development) முற்றிலும் தாயின் இரத்தம் மற்றும் ஊட்டச்சத்தை சார்ந்துள்ளது. எனவே, போதுமான ஹீமோகுளோபின் அளவைப் பராமரிக்க, கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
ஹீமோகுளோபின் குறைபாடு:
ஹீமோகுளோபின் குறைபாடு அல்லது இரத்த சோகை ஏற்படும்போது உடலில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறது. இதனால் சோர்வு, தலைச்சுற்றல், தலைவலி மற்றும் பலவீனம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. மேலும், இது கடுமையான சூழ்நிலையில் இதயம் மற்றும் நுரையீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி, உடலில் முக்கியமாக தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தக்கூடும். நீண்டகாலமாக ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்களுக்கு உடலின் உறுப்புகள் மற்றும் தசைகளுக்கு போதுமான ஆக்ஸிஜனை வழங்குவதை தடை செய்கிறது. இது பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே, ஹீமோகுளோபின் அளவைத் தொடர்ந்து சரிபார்த்து, குறைபாடு கண்டறியப்பட்டால் சரியான நேரத்தில் தீர்வை கண்டறிய முடியும். கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் சோதனை ஏன் முக்கியமானது என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: குழந்தைகள் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா? எவ்வளவு நேரம் அணிய வேண்டும்..?




கர்ப்ப காலத்தில், தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் போதுமான ஊட்டச்சத்து மற்றும் ஆக்ஸிஜனை உறுதி செய்வதற்காக ஒரு பெண்ணின் இரத்த அளவு சோதனை செய்யப்படுகிறது. இருப்பினும், இந்த நேரத்தில் ஹீமோகுளோபின் அளவுகள் பெரும்பாலும் குறைய தொடங்கும். ஏனெனில் இரத்தத்தில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்காது. கர்ப்ப காலத்தில் குறைந்த ஹீமோகுளோபின் அளவுகள் தாய்க்கு சோர்வு, பலவீனம் மற்றும் தலைவலியை ஏற்படுத்தும்.
இந்தக் குறைபாடு அதிகமாகிவிட்டால், இது இதயம் மற்றும் நுரையீரலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும். மேலும், குறைந்த ஹீமோகுளோபின் குழந்தையின் வளர்ச்சியைப் பாதித்து, பிரசவத்தின்போது அதிகப்படியான இரத்தப்போக்கு அல்லது முன்கூட்டிய பிரசவம் போன்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும். வழக்கமான பரிசோதனைகள் மருத்துவர்கள் சரியான உணவுமுறை, சப்ளிமெண்ட்ஸ் மற்றும் சிகிச்சைகளை சரியான முறையை பரிந்துரை செய்வார்கள். இது தாய் மற்றும் குழந்தை இருவரின் ஆரோக்கியத்தையும் உறுதி செய்கிறது.
ALSO READ: குழந்தைகளுக்கு இருமல் சிரப் கொடுக்கிறீர்களா..? கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்!
என்ன விஷயத்தில் கவனம் செலுத்துவது முக்கியம்..?
- உங்கள் ஹீமோகுளோபின் அளவை அவ்வப்போது பரிசோதிக்கவும்.
- இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான கீரை, பச்சை காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ் போன்றவற்றை உண்ணுங்கள்.
- வைட்டமின் சி நிறைந்த பழங்களை உண்ணுங்கள்.
- மருத்துவரை அணுகாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளாதீர்கள்.
- உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்க போதுமான தூக்கம் மற்றும் ஓய்வு கிடைக்கும்.
- நீங்கள் பலவீனமாகவோ, தலைச்சுற்றலாகவோ அல்லது சோர்வாகவோ உணர்ந்தால், உடனடியாக ஒரு மருத்துவரிடம் செல்வது நல்லது.