தகிக்கும் வெயில்.. தணிக்கும் புல் குடில்கள்.. மகாபலிபுரத்தில் அசத்தல் ஏற்பாடு!

Mamallapuram Tourist Place : தமிழகத்தில் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வரும் மாகாபலிபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் ஈர்ப்பதற்காகவும், அவர்களின் வசதிக்காகவும் வெயில் புல் குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால், மகாபலிபுரம் பகுதி வேறு மாதிரியாக மாற்றம் அடைந்து வருகின்றது.

தகிக்கும் வெயில்.. தணிக்கும் புல் குடில்கள்.. மகாபலிபுரத்தில் அசத்தல் ஏற்பாடு!

மகாபலிபுரத்தில் வெயில் புல் குடில்கள் அமைக்கும் பணி

Published: 

11 Apr 2026 17:46 PM

 IST

சென்னைக்கு அருகில் தவிர்க்க முடியாத சுற்றுலாத்தலமாக அமைந்துள்ளது மாமல்லபுரம். இங்கு, தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக அளவு சுற்றிப் பார்ப்பதற்காக வருகை தருகின்றனர். இதனால், மாமல்லபுரம் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இங்கு அமைந்திருக்கும் புராதன சின்னங்கள் உள்ளிட்டவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்குளிர சுற்றி பார்த்துவிட்டு அப்படியே கடலில் காக்கா குளியல் போட்டு பொழுதை கழித்து வருகின்றனர். இதற்காக கடற்கரை பகுதிகளில் உள்ள ஹோட்டல்கள், ரெசார்ட்டுகள் ஆகியவற்றில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அறை எடுத்து தங்கி இருந்து மாமல்லபுரத்தின் மயக்க வைக்கும் அழகை கண் குளிர கண்டு ரசித்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

வெயில் புல் குடில்கள் அமைக்கும் பணி

இந்த நிலையில், தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், மாமல்லபுரத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மேலும் கவர்ந்து இழுக்கும் வகையில், அந்தமான், கோவா, கேரளா மாநிலத்தில் உள்ள கோவளம், கொச்சின் ஆகிய சுற்றுலா இடங்களில் இருப்பது போன்று ” வெயில் புல்” குடில்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளின் வெயில் புல் குடில்கள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், வெயில் காலங்களில் மாமல்லபுரத்தில் இயற்கை காற்றுடன் இந்த குடில்களின் கீழ் அமர்ந்தவாறு கடலின் அழகை ரசிப்பதும், விருப்பமான உணவை அருந்துவதும், குளிர்பானங்களை குடிப்பதும் புத்தகங்களை படிப்பது.

மேலும் படிக்க: தென்காசி அருகே மறைந்திருக்கும் சிம்பிலான சுற்றுலா தலம்… குடும்பத்துடன் தங்கி பொழுதை கழிக்க ஏற்ற இடம்!

குளிர்ச்சியான இடங்களை விரும்பும் சுற்றுலாப்பயணிகள்

கேரம் விளையாட்டுகள் விளையாடுவதும் ஒரு வித உற்சாகத்தை சுற்றுலா பணிகளுக்கு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் குடில்கள் உள்ள இடங்களை விரும்பி வருகின்றனர். இதன் காரணமாக ஹோட்டல்கள், ரெசார்ட்டுகள் ஆகிய இடங்களில் “வெயில் புல் குடில்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக, மாமல்லபுரம் பகுதியில் ஹோட்டல்கள் மற்றும் ரெசார்ட்டுகள் நடத்தி வரும் உரிமையாளர்கள் கூறுகையில், தற்போது தமிழகத்தில் கோடை வெயில் தொடங்கியுள்ளது. இதனால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள், ஏசி அறைகளை விரும்பி வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் ஈர்ப்பதற்காக…

அத்துடன் மாலை நேரங்களில் குடும்பத்தினருடன் பொழுதை கழிப்பதற்காக இயற்கை ஓலைகள் மூலமாக செய்யப்பட்ட குடிகள் இருக்கிறதா என கேட்டு வருகின்றனர். இல்லையெனில், அது போன்ற குடில்கள் இருக்கும் ஹோட்டல்களை தேர்வு செய்கின்றனர். எனவே, சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு வகையான “வெயில் புல் குடில்கள்” அமைத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: த்ரில்லிங்கான பைக் ரைடு + படகு சவாரி = அல்டிமேட் காம்போ.. இந்த இடத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

Follow Us
"ஒருமுறை கூட கண் இமைக்கவில்லை" கோலியின் பாராட்டில் நெகிழ்ந்த ஆதித்யா தார்..
ஈரானில் அமெரிக்க விமானி மீட்பு.. மர்மங்கள் நிறைந்த மீட்பு நடவடிக்கை!
toxic மனிதர்களால் ஏற்படும் சிக்கல்.. ஆய்வாளர்கள் கூறுவது என்ன?
தங்கம் வாங்குவதற்கு இது சிறந்த நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?