AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜப்பானியர்களின் 15 நிமிட பழக்கம்… பக்கவாத அபாயத்தை குறைக்குமா?

Japanese Foot Soak Ritual: ஜப்பானில் பரவலாக பின்பற்றப்படும் வெந்நீரில் கால்களை ஊறவைக்கும் பழக்கம் தற்போது ஆரோக்கிய விவாதமாக மாறியுள்ளது. இந்த முறை ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மனஅழுத்தத்தை குறைக்க உதவலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பழக்கம் உடலுக்கு ஓய்வும் நிம்மதியும் தரக்கூடும்.

ஜப்பானியர்களின் 15 நிமிட பழக்கம்… பக்கவாத அபாயத்தை குறைக்குமா?
வெந்நீர் கால்சிகிச்சைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 May 2026 15:15 PM IST

சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஜப்பானியர்களின் ஒரு எளிய ஆரோக்கிய பழக்கம் குறித்து அதிகமாக பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தினமும் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வெந்நீரில் கால்களை ஊறவைத்தால் ரத்த ஓட்டம் சீராகி, பக்கவாத அபாயம் குறையும் என்று சிலர் பரிந்துரைத்துள்ளனர். இந்த பழக்கம் உடலுக்கு ஓய்வூட்டுவதுடன் மனஅழுத்தத்தையும் குறைக்கும் என கூறப்படுகிறது. மேலும் வெந்நீரில் எப்சம் உப்பு சேர்த்து பயன்படுத்தினால் தூக்கத் தரம் மேம்படும் என்ற நம்பிக்கையும் பரவி வருகிறது. பாரம்பரிய ஜப்பானிய மற்றும் சீன மருத்துவ முறைகளில் இதுபோன்ற வெந்நீர் சிகிச்சைகள் உடலின் ஆற்றலை சமநிலைப்படுத்தும் என கருதப்பட்டதால், பலரும் இதனை ஆரோக்கிய ரகசியமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.

மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஆனால் மருத்துவ நிபுணர்கள் இதை முழுமையான பக்கவாத தடுப்பு முறையாக கருதக்கூடாது என்று எச்சரிக்கின்றனர். பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஏற்படும் ஆபத்தான நிலை. இதற்கான முக்கிய காரணிகளில் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், அதிக கொழுப்பு, புகைப்பிடித்தல், உடற்பயிற்சி இல்லாமை மற்றும் மனஅழுத்தம் போன்றவை அடங்கும். வெந்நீரில் கால்களை ஊறவைத்தால் உடலுக்கு தற்காலிக சுகம் கிடைக்கலாம்; ஆனால் அது மூளைக்கு செல்லும் முக்கிய ரத்த நாளங்களில் நேரடி மாற்றத்தை ஏற்படுத்தாது என்று நரம்பியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இதை மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாக எடுத்துக்கொள்வது தவறான அணுகுமுறை எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

மனஅழுத்தம் குறைய உதவும் எளிய வழி

அதே நேரத்தில் இந்த பழக்கம் முழுமையாக பயனற்றது என்றும் சொல்ல முடியாது. வெந்நீரில் கால்களை வைத்திருப்பது உடலின் தசைகள் தளர்வடைய உதவுவதுடன், மன அமைதியையும் தரக்கூடும். வேலைப்பழுத்தம், தூக்கமின்மை மற்றும் தினசரி பதட்டம் அதிகமாக இருக்கும் நவீன வாழ்க்கை முறையில், இதுபோன்ற சிறிய ஓய்வு முறைகள் மனநலத்திற்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம். மனஅழுத்தம் குறைந்தால் ரத்த அழுத்தமும் ஓரளவு கட்டுப்பாட்டில் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் இதய ஆரோக்கியத்துக்கும் மறைமுக பலன் கிடைக்கலாம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இது ஒரு துணை பழக்கமாக மட்டுமே இருக்க வேண்டும்; உண்மையான பாதுகாப்பு ஆரோக்கியமான வாழ்க்கை முறையில்தான் உள்ளது என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பக்கவாதத்தை தவிர்க்க முக்கியமான வாழ்க்கை முறை

பக்கவாத அபாயத்தை குறைக்க மருத்தவர்கள் சில முக்கிய பழக்கங்களை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என கூறுகின்றனர். புகைப்பிடித்தலை முற்றிலும் நிறுத்துதல், எண்ணெய் மற்றும் ஜங்க் உணவுகளை குறைத்தல், தினசரி நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்தல், போதுமான தூக்கம், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை அடிக்கடி பரிசோதித்தல் போன்றவை மிகவும் அவசியமானவை. குறிப்பாக நீண்ட நேரம் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கக்கூடும் என்பதால், தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

வெந்நீர் கால்சிகிச்சை உடலுக்கு சுகம் தரலாம்; ஆனால் ஆரோக்கியமான உணவு, ஒழுங்கையான தூக்கம் மற்றும் உடற்பயிற்சி போன்ற பழக்கங்களே உண்மையான பாதுகாப்பு கவசம் என மருத்துவ உலகம் வலியுறுத்துகிறது.

Follow Us