Healthy Skin: 90 சதவீதம் பேர் செய்யும் தவறு இதுதான்.. சரியாக இப்படி முகம் கழுவினால் சரும பிரச்சனை வராது!
How to Wash Your Face Properly: சரியான முறையில் முகம் கழுவுவது ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியம். சுத்தமான கைகளால், ஈரமான முகத்தில் சரும வகைக்கு ஏற்ற ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். ஒரு நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவி, மென்மையாக துடைக்க வேண்டும்.

பலருக்கு அடிக்கடி முகத்தை கழுவும் (Face wash) பழக்கம் உள்ளது. ஏன், எதற்கு என்று தெரியமால் பாத்ரூம் அல்லது குழாய்களை பார்த்தாலே தங்களை அறியாமலே சிலர் முகத்தை கழுவுவார்கள். அதேநேரத்தில், முகத்தை சரியாக கழுவும் முரை தெரியாமல் தங்கள் சருமத்தை தாங்களே கெடுத்து, இயற்கை பளபளப்பை மங்க செய்கிறார்கள். முகத்தை கழுவுவது ஒரு எளிய தினசரி பழக்கம் என்றாலும், அதை சரியாக செய்யாவீட்டால், அது சரும எரிச்சலை கொடுக்கும். எனவே, உங்கள் முகத்தை கழுவுவதற்கான சரியான மற்றும் பயனுள்ள வழியை இங்கே தெரிந்து கொள்வோம். இது உங்கள் சருமத்தை (Healthy skin) புத்துணர்ச்சியுடனும், ஆரோக்கியமாகவும் வைக்கும்.
என்ன செய்யலாம்..?
முதல் விஷயம்:
உங்கள் முகத்தை சரியாக கழுவ முதலில் உங்கள் கைகளை நங்கு சுத்தம் செய்ய வேண்டும். அழுக்கு கைகளால் உங்கள் முகத்தை நேரடியாக தொடும்போது தாக்கத்தை ஏற்படுத்தும். இது சருமத்தில் பக்கவிளைவுகளை கொடுக்க தொடங்கும். அதன்படி, சுத்தமான கைகளால் உங்கள் முகத்தை கழுவுவது உங்கள் சருமத்திற்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான வழியாகும்.
ALSO READ: முகத்தில் பருக்கள் ஏன் தோன்றுகிறது..? இதற்கும் வயிற்றுக்கும் என்ன சம்பந்தம்..?




2வது விஷயம்:
பேஸ் வாஷ், சோப்பு போன்றவற்றை நேரடியாக முகத்தில் போடக்கூடாது. இவற்றை பயன்படுத்துவதற்கு முன்பு, உங்கள் முகத்தை சிறிது நனைக்க வேண்டும். அதாவது, எந்தவொரு பொருளையும் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் முகத்தை நீரில் நனைக்க வேண்டும். நீரானது சருமத்தின் துளைகளை திறந்து முகத்தை ஆழமாக சுத்தம் செய்ய உதவுவதால், இவ்வாறு செய்வது முக்கியம்.
3வது விஷயம்:
உங்கள் சரும வகைக்கு ஏற்ற வகையில் மருத்துவரின் ஆலோசனை பேரில் ஃபேஸ் வாஷை தேர்வு செய்யவும். லேசான மற்றும் ரசாயனம் இல்லாத பேஸ் வாஷை பயன்படுத்துவது முக்கியம். ஏனெனில் ரசாயனங்கள் நிறைந்த பேஸ் வாஷ்கள் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். சரியான பேஸ் வாஷ் சருமத்தை சரியாக பராமரித்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
4வது விஷயம்:
சரியான பேஸ் வாஷை தேர்ந்தெடுத்த பிறகு, அதை உங்கள் விரல்களால் உங்கள் ஈரமான முகத்தில் தடவவும். நெற்றி, மூக்கு மற்றும் கன்னம் என்று தொட்டு, அதன்பிறகு மென்மையாக தடவி கொடுங்கள். இப்படி செய்வதன்மூலம், உங்கள் சருமத்தை சுத்தமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்கலாம்.
ALSO READ: முகம், உதடு பளபளக்கணுமா? பீட்ரூட்டில் இருக்கு சூப்பர் விஷயம்!
5வது விஷயம்:
உங்கள் முகத்தை ஒரு நிமிடம் மசாஜ் செய்த பிறகு, உங்கள் முகத்தை நீரில் மெதுவாக கழுவ வேண்டும். இது உங்கள் சருமத்தின் துளைகளை மெதுவாக மூடும். உங்கள் முகத்தை கழுவிய பின், மென்மையான துண்டு கொண்டு துடைக்கவும். ஆனால், ஒருபோது அழுத்தி தேய்க்க வேண்டாம். ஏனெனில், இது உங்கள் முகத்தில் எரிச்சலை கொடுக்கும்.