Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Diwali 2025: தீபாவளிக்கு கூட்டத்திற்கு மத்தியில் சண்டை போட்டு மட்டன் வாங்குகிறீர்களா..? இவை பிரஷானதா என்பதை எப்படி கண்டறிவது?

How To Buy Fresh Mutton: நீங்கள் ஃப்ரஷான மட்டனை வாங்கி ருசிக்க வேண்டுமென்றால், மட்டன் வாங்கும்போது சில விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம். இதன் காரணமாக தரம், நறுமணம் மற்றும் நிறத்தை வைத்து அதன் புத்துணர்ச்சியை அறிந்து கொள்ளலாம்.

Diwali 2025: தீபாவளிக்கு கூட்டத்திற்கு மத்தியில் சண்டை போட்டு மட்டன் வாங்குகிறீர்களா..? இவை பிரஷானதா என்பதை எப்படி கண்டறிவது?
மட்டன்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Oct 2025 14:43 PM IST

தீபாவளி (Diwali) போன்ற நல்ல நாட்களில் கிராமப்புறங்களில் இனிப்பு வாங்கி சாமி கும்பிடுவது போல் மட்டன் எடுத்து சமைப்பது பழக்கம். அசைவத்தில் சிக்கன் பிரியர்கள் இருப்பது போல, மட்டன் பிரியர்களும் இருக்கிறார்கள். இருப்பினும், கடைக்கு சென்று மட்டன் (Mutton) கறிகளை வாங்குவதற்கு முன் சில விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம். இல்லையெனில், இது உங்கள் ஆரோக்கியத்தையும், நல்ல நாளையும் கெடுக்கும். சிலருக்கு மட்டன் எப்படி வாங்குவது என்று தெரியாததால் உள்ளே அழுகியிருக்கும் மட்டனை வாங்குகிறார்கள். இது உணவின் சுவையைக் கெடுப்பது மட்டுமல்லாமல், வயிற்றுப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். நீங்கள் ஃப்ரஷான மட்டனை வாங்கி ருசிக்க வேண்டுமென்றால், மட்டன் வாங்கும்போது சில விஷயங்களை மனதில் கொள்வது மிகவும் முக்கியம். இதன் காரணமாக தரம், நறுமணம் மற்றும் நிறத்தை வைத்து அதன் புத்துணர்ச்சியை அறிந்து கொள்ளலாம். இந்த ஃப்ரஷான மட்டன் சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

மட்டன் வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்:

மட்டனின் நிறம்:

ஃப்ரஷான மட்டன் வெட்டியபிறகு சில மணிநேரத்திற்கு நல்ல மட்டன் எப்போதும் வெளிர் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அது மிகவும் அடர் சிவப்பு அல்லது பழுப்பு நிறமாகத் தெரிந்தால், அது பழையதாகவோ அல்லது நீண்ட காலமாக திறந்த வெளியில் நீண்ட நேரம் வைக்கப்பட்டதாக அர்த்தம். ஃப்ரஷான மட்டன் எப்போதும் கொஞ்சம் பளபளப்பாக இருக்கும், அதே சமயம் பழைய மட்டன் பொதுவாக மந்தமாக இருக்கும்.

ALSO READ: பட்டாசு வெடிக்கிறீர்களா..? வெடிக்கும் முன் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

மட்டனின் வாசனை:

ஃப்ரஷான மட்டன் லேசான மற்றும் புதிய நறுமணத்தைக் கொண்டுள்ளது. அதேநேரத்தில், பழைய மட்டன் கடுமையான அல்லது புளிப்பு வாசனையுடன் இருந்தால், அது கெட்டுப்போனதற்கான அறிகுறியாகும். கெட்டுப்போன மட்டன் கடுமையான மற்றும் இயற்கைக்கு மாறான வாசனையை வெளிப்படுத்தும். எனவே, வாங்குவதற்கு முன் அதன் ஃப்ரஷான வாசனையை நுகருங்கள்.

அழுத்தி பார்த்தல்:

ஃப்ரஷான மட்டனை லேசாக அழுத்தும் போது உடனடியாக அழுந்தி, தொடுவதற்கு மென்மையாக உணர்ந்தால், அது புதியது. இருப்பினும், அது ஒரு கைரேகையை விட்டுவிட்டு, அழுத்தும் போது ஒரு நீர் போன்ற திரவம் வெளியேறினால், அது கெட்டுப்போனதாகக் கருதப்படுகிறது.

கொழுப்பு அடுக்கு:

நல்ல மட்டனில் உள்ள கொழுப்பு வெள்ளையாகவும் மென்மையாகவும் இருக்கும். கொழுப்பு மஞ்சள் நிறமாகவோ அல்லது கடினமாகவோ தெரிந்தால், மட்டன் பழையது என்று அர்த்தம். பிரஷான மட்டனில் உள்ள கொழுப்பு சற்று மென்மையாக இருக்கும்.

அதிகபடியான பளபளப்பு:

மட்டனில் இயற்கைக்கு மாறான பளபளப்பு அல்லது எண்ணெய் பசை இருப்பதை நீங்கள் கவனித்தால், அதை முற்றிலும் தவிர்க்கவும். இவை மட்டன் கெட்டுப்போனதற்கான அர்த்தத்தை தரும்.

சுத்தமான கடைகள்:

எப்போதும் சுத்தமான இடத்திலிருந்து மட்டனை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். கடை ஈக்கள் அல்லது நாற்றங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். வாங்கி வந்த ஃப்ரஷான மட்டனை நீண்ட நேரத்திற்கு பிறகுதான் சமைக்க போகிறீர்கள் என்றால், குளிர்சாதன பெட்டியிலோ அல்லது குளிர்ந்த இடத்திலோ வைக்க வேண்டும்.

ALSO READ: தீபாவளிக்கு கடைகளில் ஸ்வீட்ஸ் வாங்குகிறீர்களா..? கலப்படமானதா..? கண்டறிய உதவும் டிப்ஸ்!

தேவையான அளவு மட்டுமே மட்டன் வாங்கவும்:

தள்ளுபடி என்று சொல்லி அதிக மட்டன் வாங்கும் தவறை செய்யாதீர்கள். அதை தேவைக்கு அதிகமாக வாங்கி குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படும்போது மட்டன் அதன் சுவை மற்றும் ஊட்டச்சத்து இரண்டையும் இழக்கிறது. எனவே, உங்களுக்குத் தேவையான அளவு மட்டுமே வாங்கி ஃப்ரஷாக சமைத்து சாப்பிடவும்.

சமைப்பதற்கு முன் சரியான முறையில் சுத்தம்:

மட்டனை சமைப்பதற்கு முன், குளிர்ந்த நீரில் நன்றாகக் கழுவி, சமைப்பதற்கு முன் வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றில் சிறிது நேரம் ஊற வைக்கவும். இது பாக்டீரியாக்களைக் கொன்று, மட்டனை மிகவும் சுவையாக மாற்றும்.