Pigeon Nuisance: வீட்டு பால்கனியில் புறாக்கள் தொல்லையா..? எளிதாக இப்படி விரட்டலாம்!

How to Repel Pigeons: மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தும், பால்கனிகளிலிருந்தும் (Balcony) புறாக்களை விரட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இது சில நேரங்களில் புறாக்களின் உயிர்களுக்கு ஆபத்தானதாக மாறிவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சில குறிப்புகளை பின்பற்றி எளிதாக விரட்டி தொல்லை இல்லாமல் இருக்கலாம்.

Pigeon Nuisance: வீட்டு பால்கனியில் புறாக்கள் தொல்லையா..? எளிதாக இப்படி விரட்டலாம்!

புறா தொல்லை

Published: 

06 Nov 2025 17:18 PM

 IST

இன்றைய நகரப்புற வாழ்க்கையில் பெரும்பாலானோர் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கிறார்கள். இருப்பினும், இதில் பலரும் எதிர்கொள்வது புறா தொல்லைகளைதான். மொட்டைமாடி மற்றும் பால்கனிகளுக்கு வரும் புறாக்களால் (Pigeons) அதிக சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். புறாக்கள் பால்கனிகள், மொட்டைமாடிகள் மற்றும் ஜன்னல் ஓரங்களில் அமர்ந்து எச்சங்களை வெளியேற்றுகிறது. அதிக நாற்றத்தை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, அது காய்ந்தவுடன் சுத்தம் செய்வதும் கடினமாகிவிடுகிறது. இதனால், பல்வேறு நோய்கள் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. இதன் காரணமாக, மக்கள் தங்கள் வீடுகளிலிருந்தும், பால்கனிகளிலிருந்தும் (Balcony) புறாக்களை விரட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இது சில நேரங்களில் புறாக்களின் உயிர்களுக்கு ஆபத்தானதாக மாறிவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், சில குறிப்புகளை பின்பற்றி எளிதாக விரட்டலாம்.

ALSO READ: மழையில் இப்படி பைக்கை ஓட்டினால் விபத்து ஏற்படாது.. பாதுகாப்பு குறிப்புகள் இதோ..!

புறாக்களை எப்படி விரட்டலாம்..?

  • புறாக்களை விரட்ட முதலில் உங்கள் பால்கனி மற்றும் மொட்டை மாடியை சுத்தமாக வைத்திருங்கள். புறாக்கள் பெரும்பாலும் அழுக்கு மற்றும் தூசி நிறைந்த இடங்களை விரும்பும். அதன்படி, சுத்தமாக இருந்தால் வராது.
  • உங்கள் பால்கனியில் வலைகளை பின்னலாம். இது புறாக்கள் உள்ளே நுழைவதை தடுக்கும். கடைகளில் பலவிதமான பறவை எதிர்ப்பு வலைகள் கிடைக்கின்றன. இவற்றை பதிக்கலாம்.
  • உங்கள் பால்கனியில் எலுமிச்சை அல்லது வினிகரை தெளிக்கலாம். புறாக்களுக்கு இந்த வாசனை சுத்தமாக பிடிக்காது. அப்படி இல்லையென்றால், புறாக்களை பயமுறுத்த ஆந்தை மல்லது கழுகு பொம்மைகளை வைக்கலாம். இது புறாக்களை தடுக்க உதவும்.
  • பால்கனி அல்லது மொட்டை மாடிகளில் காக்காவிற்கு சாதம் வைப்பார்கள். இதை புறாக்கள் பெரும்பாலும் சாப்பிட வருகின்றன. எனவே, தானியஙக்ள் அல்லது மீதமுள்ள உணவை பால்கனியிலோ அல்லது மொட்டைமாடிகளிலோ வைக்காதீர்கள்
  • நீங்கள் கடைகளில் இருந்து ஒரு போலி ரப்பர் பாம்பைகளை வாங்கி, ​​புறாக்கள் அதிகமாகக் காணப்படும் ஜன்னல் அல்லது பால்கனியில் இந்தப் போலி பாம்பை வைக்கவும். இந்தப் பாம்பை ஒருமுறை பார்த்தவுடன், புறாக்கள் பின்வாங்கி, மீண்டும் ஒருபோதும் திரும்ப வராது. ஏனென்றால் புறாக்கள் பாம்புகளுக்கு மிகவும் பயப்படுகின்றன.
  • புறாக்கள் பளபளப்பான பொருட்களைப் பார்த்து பயப்படும். ஏனெனில் அவை அவற்றால் அச்சுறுத்தப்படுவதாக உணர்கின்றன. அதன்படி, பழைய சிடிகள், அலுமினியத் தகடு துண்டுகள் அல்லது பளபளப்பான ரிப்பன்களை ஜன்னல்கள் அல்லது பால்கனிகள் போன்ற இடங்களில் தொங்கவிடலாம் . இந்தப் பொருட்கள் அசைந்து காற்றில் மின்னும்போது, ​​புறாக்கள் அவற்றிலிருந்து விலகி இருக்கும்.

ALSO READ: ட்ரெண்டாகும் புது ரெசிபி! காபியில் சர்க்கரைக்கு பதிலாக உப்பு.. ஆரோக்கியமானதா..?

  • புறாக்கள் தண்ணீரை விரும்புவது கிடையாது. குறிப்பாக அவை ஓய்வெடுக்கும்போது. தினமும் புறா உட்காரும் இடங்களில் தண்ணீர் ஊற்றுவதால் மற்றொரு நன்மையும் உண்டு. புறாக்கள் அதே இடத்திற்குத் திரும்பும் ஒரு கெட்ட பழக்கத்தைக் கொண்டுள்ளன. இவை தங்கள் அடையாளத்தை மறக்காது. எனவே, தண்ணீரை ஊற்றுவதன் மூலம், அதன் அடையாளத்தை அழிக்கலாம்.
  • புறாக்களுக்கு வாசனை உணர்வு அதிகம் என்பதால், சில வாசனைகள் அவற்றை விரட்ட உதவும். பூண்டு, கருப்பு மிளகு அல்லது சிவப்பு மிளகாய் தூளை தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். மாற்றாக, நாப்தலீன் பந்துகளை சிறிய துண்டுகளாக உடைத்து சுற்றி வைக்கலாம். புறாக்கள் அவற்றின் கடுமையான வாசனையை விரும்பாததால் விலகி இருக்கும்.