AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

போச்சு! வாஷிங் மெஷினில் அதிக டிடர்ஜென்ட் ஊற்றினால் என்ன ஆகும் தெரியுமா?

Washing Machine: வாஷிங் மெஷினில் தேவைக்கு அதிகமாக டிடர்ஜென்ட் பயன்படுத்தினால் சோப்புக் கழிவுகள் மற்றும் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. துணிகளின் அளவு, அழுக்கு மற்றும் தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப, இயந்திரம் மற்றும் டிடர்ஜென்ட் தயாரிப்பாளரின் வழிமுறைகளைப் பின்பற்றி சரியான அளவை பயன்படுத்த வேண்டும். டிடர்ஜென்ட் டிராயர், ரப்பர் சீல், டிரம் போன்ற பகுதிகளைத் தொடர்ந்து சுத்தம் செய்து, சலவை முடிந்ததும் இயந்திரத்தின் கதவை திறந்து வைப்பது பராமரிப்புக்கு உதவும்.

போச்சு! வாஷிங் மெஷினில் அதிக டிடர்ஜென்ட் ஊற்றினால் என்ன ஆகும் தெரியுமா?
வாஷிங் மெஷின்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Oct 2026 17:00 PM IST

வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கும்போது அதிக அளவு டிடர்ஜென்ட் பயன்படுத்துவது துணிகளை கூடுதல் சுத்தமாக்காது. தேவைக்கு அதிகமான டிடர்ஜென்ட் நுரை மற்றும் சோப்புக் கழிவுகளை உருவாக்கி, இயந்திரத்தின் உள்ளே படிய வாய்ப்புள்ளது. இதனால் துர்நாற்றம் ஏற்படுவதுடன், துணிகளிலும் டிடர்ஜென்ட் எச்சங்கள் தங்கலாம். துணிகளின் அளவு, அழுக்கு மற்றும் தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப டிடர்ஜென்ட் அளவை மாற்றிப் பயன்படுத்த வேண்டும். லிக்விட் டிடர்ஜென்ட்டை அதன் பேக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அளவின்படி பயன்படுத்துவது நல்லது. டிடர்ஜென்ட் டிராயர், ரப்பர் சீல் மற்றும் டிரம் உள்ளிட்ட பகுதிகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். சலவை முடிந்த பிறகு கதவை சிறிது நேரம் திறந்து வைப்பது ஈரப்பதம் மற்றும் துர்நாற்றம் ஏற்படுவதை குறைக்க உதவும்.

அளவுக்கு அதிகமான டிடர்ஜென்ட் வேண்டாம்

சலவை இயந்திரத்தில் துணிகளைத் துவைக்கும்போது அதிக அளவு டிடர்ஜென்ட் அல்லது லிக்விட் பயன்படுத்தினால் துணிகள் கூடுதல் சுத்தமாகிவிடும் என்று நினைப்பது தவறானது. தேவைக்கு அதிகமாக டிடர்ஜென்ட் சேர்ப்பதால் அதிக நுரை உருவாகி, இயந்திரத்தின் டிரம் மற்றும் பிற பகுதிகளில் சோப்புக் கழிவுகள் படிய வாய்ப்புள்ளது. இதனால் காலப்போக்கில் துர்நாற்றம் ஏற்படுவதுடன், துணிகளிலும் கழிவுகள் தேங்கலாம்.

துணிகளின் அளவுக்கு ஏற்ப பயன்படுத்துங்கள்

டிடர்ஜென்ட்டின் சரியான அளவு என்பது துணிகளின் எண்ணிக்கை, அவற்றில் உள்ள அழுக்கு, தண்ணீரின் அளவு மற்றும் தண்ணீரின் கடினத்தன்மை போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். எனவே ஒவ்வொரு முறையும் ஒரே அளவு டிடர்ஜென்ட் பயன்படுத்தாமல், இயந்திரத்தின் கையேடு மற்றும் டிடர்ஜென்ட் தயாரிப்பாளரின் வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம். அதிக அழுக்குள்ள துணிகளுக்கு அளவு மாறுபடலாம்.

லிக்விட் பயன்படுத்தும்போதும் கவனம்

லிக்விட் டிடர்ஜென்ட்டை பயன்படுத்தும்போது அதன் பேக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அளவையே முதன்மையாகக் கடைப்பிடிக்க வேண்டும். சில வாஷிங் மெஷின் மாடல்களில் லிக்விட் மற்றும் பவுடர் டிடர்ஜென்ட்டுக்கான தனித்தனி வழிமுறைகள் இருக்கலாம் என்பதால், இயந்திரத்தின் பயன்பாட்டு கையேட்டை பார்த்து அதற்கேற்ற முறையில் பயன்படுத்துவது நல்லது.

Also Read: நள்ளிரவுக்குப் பிறகும் தூங்காமல் இருக்கிறீர்களா? புற்றுநோய் வருமா?

இயந்திரத்தையும் அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்

சலவை முடிந்ததும் இயந்திரத்தின் கதவை சிறிது நேரம் திறந்து வைப்பது உள்ளே ஈரப்பதம் தேங்குவதை குறைக்க உதவும். டிடர்ஜென்ட் டிராயர், ரப்பர் சீல் மற்றும் டிரம் பகுதிகளில் படியும் அழுக்குகளை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். பொதுவாக மாதத்திற்கு ஒருமுறை இயந்திரத்தை சுத்தம் செய்வதும், கடின நீர் பயன்படுத்தப்படும் பகுதிகளில் தேவைக்கேற்ப டெஸ்கேலிங் செய்வதும் இயந்திரத்தின் செயல்திறனை பராமரிக்க உதவும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us