குப்பையில் வீசப்படும் சோறு: பட்டினியை போக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
Food Waste: உலகளவில் 64.5 கோடி மக்கள் பட்டினியால் வாடும் நிலையில், ஆண்டுதோறும் 105 கோடி டன் உணவு வீணாகிறது. தனிநபர் உணவு வீணடிப்பில் மாலத்தீவு முதலிடத்தில் இருப்பதுடன், வீடுகளிலேயே 60 சதவீதத்திற்கும் அதிகமான உணவு குப்பையில் வீசப்படுகிறது. சரியான உணவுத் திட்டமிடுதல் மற்றும் விழிப்புணர்வு மூலம் வீடுகளில் வீணாகும் உணவை பெருமளவில் சேமிக்க முடியும்.
உலகளவில் ஆண்டுதோறும் 105 கோடி டன் உணவு வீணாக்கப்படுவதாக (Global Food Waste) ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. அதேவேளையில் உலகின் பல்வேறு பகுதிகளில் சுமார் 64.5 கோடி மக்கள் போதிய உணவின்றி பட்டினியால் தவித்து வருகின்றார்கள். உலகளவில் வீணடிக்கப்படும் மொத்த உணவில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு தனிநபர் வீடுகளிலிருந்தே வெளியாகிறது. நபர் ஒருவருக்கு கணக்கிடப்படும் வீட்டு உணவு வீணடிப்பில் மாலத்தீவு உலகளவில் முதலிடத்தில் உள்ளது. இந்த உணவு வீணடிப்பால் உலகப் பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 1 லட்சம் கோடி டாலருக்கும் அதிகமான பெரும் இழப்பு ஏற்படுகிறது. சமையலுக்கு முன் சரியான திட்டமிடுதல் மற்றும் தேவையான அளவை மட்டும் சமைப்பது உணவை சேமிக்க உதவும். மேலும் உணவுகளின் காலாவதி தேதிகளை சரியாக புரிந்து கொண்டு கையாள்வது தேவையில்லாத உணவு வீணடிப்பை பெருமளவில் குறைக்கும்.
Also Read: எப்போதும் சோர்வாகவே இருக்கிறீர்களா? இந்த பழக்கங்கள் காரணமாக இருக்கலாம்!
உலகளாவிய உணவு வீணடிப்பு மற்றும் பட்டினி நிலவரம்
உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 105 கோடி டன் உணவு வீணாக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருபுறம் உலக மக்கள் தொகையில் சுமார் 64.5 கோடி மக்கள் போதிய உணவின்றி பட்டினியால் தவித்து வரும் சூழலில், நுகர்வோருக்கு கிடைக்கும் உணவில் 19 சதவீதம் குப்பையில் வீசப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவு வீணடிப்பால் உலக பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 1 லட்சம் கோடி டாலருக்கும் அதிகமான இழப்பு ஏற்படுவதுடன், பருவநிலை மாற்றத்தை துரிதப்படுத்தும் பசுமை இல்ல வாயுக்களும் பெருமளவில் வெளியாகின்றன.
அதிக அளவில் உணவை வீணாக்கும் நாடுகள்
நபர் ஒருவருக்கு கணக்கிடப்படும் வீட்டு உணவு வீணடிப்பில் மாலத்தீவு உலகளவில் முதலிடத்தில் உள்ளது. அங்கு ஒரு நபர் ஆண்டுக்கு சராசரியாக 260 கிலோ உணவை குப்பையில் வீசுகிறார். இதனைத் தொடர்ந்து சிரியா, மெக்சிகோ, துனிசியா மற்றும் டொமினிகன் குடியரசு ஆகிய நாடுகளில் ஒரு நபருக்கு 210 கிலோவிற்கும் அதிகமான உணவு வீணாகிறது. வெப்பமான காலநிலை மற்றும் போதிய குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகள் இன்மையே இந்த வீணடிப்புக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மாறாக, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இந்த அளவு 39 கிலோவாக மிகக் குறைவாக உள்ளது.
Also Read: எப்போதும் சோர்வாகவே இருக்கிறீர்களா? இந்த பழக்கங்கள் காரணமாக இருக்கலாம்!
வீடுகளில் உணவு வீணாவதைத் தடுக்கும் எளிய வழிகள்
உணவு வீணடிப்பில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு வீடுகளிலேயே நடப்பதால், பொதுமக்கள் சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றுவது அவசியமாகிறது. வாராந்திர உணவுத் திட்டமிடுதலுடன் தேவையான பொருட்களை மட்டும் வாங்குவது, சமைக்கும் அளவை சரியாக கணக்கிடுவது மற்றும் பழைய உணவுகளை முதலில் பயன்படுத்துவது போன்றவை முக்கிய தீர்வுகளாகும். மேலும், உணவுப் பொருட்களின் தரக் காலக்கெடு (Best Before) மற்றும் பாதுகாப்பு காலக்கெடு (Use By) ஆகியவற்றுக்கு இடையேயான வித்தியாசத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் உணவுகள் தேவையின்றி குப்பைக்குச் செல்வதைத் தடுக்க முடியும்.