Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Diwali 2025: என்ன ஆச்சு மக்களுக்கு? – குறையும் தீபாவளி மோகம்!

Diwali Celebrations: 2025 தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் மக்களிடையே பண்டிகையை கொண்டாட வேண்டிய ஆர்வம் குறைந்து வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆன்லைன் ஷாப்பிங், பட்டாசு மீதான இளைஞர்களின் ஆர்வம் குறைவு, சுற்றுச்சூழல் கவலைகள், விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் தீபாவளி ஒரு சாதாரண விடுமுறை நாளாக மாறி வருகிறது.

Diwali 2025: என்ன ஆச்சு மக்களுக்கு? – குறையும் தீபாவளி மோகம்!
தீபாவளி பண்டிகை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 15 Oct 2025 09:27 AM IST

இந்தியாவில் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரம் என பல விஷயங்கள் இருந்தாலும், பண்டிகைகள், திருவிழாக்கள் போன்றவை அனைத்து வேற்றுமைகளையும் மறந்து ஒற்றுமையுடன் கொண்டாட்டத்திற்கு வழிவகுக்கும். அப்படியான ஒரு பண்டிகையாக தீபாவளியை முதன்மையான ஒன்றாக குறிப்பிடலாம். விஷ்ணு பகவான் சத்தியபாமா அவதாரம் எடுத்து நரகாசுரனை கொன்ற நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதேசமயம் நம் வாழ்க்கையில் இருக்கும் இருள் நீங்கி ஒளி பிறக்கும் தீப ஒளி நாளாக தீபாவளி கொண்டாடப்படுகிறது. இத்தகைய தீபாவளி 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய விவாதமே நடைபெற்று வருகிறது. காரணம் மக்களிடையே தீபாவளி மோகம் குறைந்து வருகிறது என சொல்லப்படுகிறது.

ஒருமாதம் முன்னரே கொண்டாட்டம்

இந்து மதத்தில் தீபாவளி பண்டிகை மிக முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இப்பண்டிகை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஆனால் காலங்கள் மாறி வரும் நிலையில் பண்டிகை மீதான மோகமும் மக்களிடையே குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

Also Read:  தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க ஆசையா? வெடிக்கும்போது செய்யக்கூடாத விஷயங்கள்!

தீபாவளி பண்டிகை என்றால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே பட்டாசு சத்தம் கேட்கும். கடைவீதிகளில் கூட்டம் அலைமோதும். அனைத்து வித வியாபாரமும் களைக்கட்டும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்திலும் மாற்றம் கொண்டு வந்துள்ளது. வீடு தேடி வரும் பொருட்கள், ஆடைகள், பட்டாசுகள் என ஆன்லைன் ஷாப்பிங் காரணமாக வழக்கமான கூட்டத்தை காண இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

சாதாரண விடுமுறை நாள்

அதுமட்டுமல்லாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாட்டத்திற்கான நாளாக பார்க்காமல் இன்றைய இளம்  தலைமுறையினர் வழக்கமான விடுமுறை நாட்களாக கருதுகின்றனர். முந்தைய இரண்டு தலைமுறையினர் மட்டுமே அதன் மீதான ஆர்வத்தை துளியும் குறைவில்லாமல் தீபாவளி பண்டிகையை எப்படியெல்லாம் கொண்டாட வேண்டும் என திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் நிலையை காரணம் காட்டி காலை ஒரு மணி நேரமும் , மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Also Read:  தீபாவளி பலகாரம்! பாரம்பரியமிக்க அதிரசம் செய்முறை இதோ!

எனினும், பட்டாசு வெடிக்க இன்றைய இளம் தலைமுறையினர் போதிய ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது. அவர்கள் புத்தாடை அணிந்து நண்பர்களுடன் புகைப்படம், ரீல்ஸ் எடுக்க காட்டும் ஆர்வத்தை கூட அந்த பண்டிகையை கொண்டாட காட்டுவதில்லை என்பது பலரின் மனக்குமுறலாக உள்ளது. இதனைச் சுட்டிக் காட்டி மீம்ஸ்களும் வெளியிடப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினருக்கு கேட்டவை எல்லாம் கேட்ட நேரத்தில் கிடைத்து விடுவதால் ஒரு சுவாரஸ்யமும் எதிர்பார்ப்பும் இல்லாமல் போய்விட்டதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒருநாள் விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு கூட பல செல்ல தயங்குகின்றனர். மேலும் விலைவாசி உயர்வும் நடுத்தர மக்களை தீபாவளி பண்டிகையை ஆடம்பரமாக கொண்டாட வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகின்றன. ஆனால் ஒரு பண்டிகை, திருவிழாக்கள் போன்றவை செலவுகளை தாண்டிலும் மன மகிழ்ச்சியை, புத்துணர்ச்சியை அளிக்கக்கூடிய நேரமாக இருக்கும் என்பதே உண்மையாகும்.