Coriander Storage Hacks: கொத்தமல்லி இலைகளை ப்ரஷாக வைத்திருப்பது எப்படி? எளிய 3 டிப்ஸ் இதோ!
How to Preserve Coriander: கொத்தமல்லி இலைகள் விரைவில் கெட்டுப்போகும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தக் கட்டுரை, கொத்தமல்லியை நீண்ட நாட்கள் புதியதாக வைத்திருக்க மூன்று எளிய மற்றும் பயனுள்ள வழிகளை விளக்குகிறது. உங்கள் கொத்தமல்லியை நீண்ட நாட்கள் புதியதாகவும், சுவையாகவும் வைத்திருக்கலாம்.

கொத்தமல்லி இலை
சமையலறையில் (Kitchen) உள்ள பொருட்களின் நறுமணமே, சமையலுக்கு தேவையான சுவையை கொடுக்கிறது. அதில், முக்கியமான பொருள்தான் கொத்தமல்லி இலைகள். கொதித்த சாம்பாரின் மீது தூவுவதாக இருந்தாலும் சரி, கார குழம்புகளில் அலங்கரிப்பதாக இருந்தாலும் சரி, பிரியாணிக்கு போடுவதாக இருந்தாலும் சரி, கொத்தமல்லி சட்னியாக இருந்தாலும் சரி இவைக்கு கொத்தமல்லி (Coriander) ஆன்மாக இருக்கும். கொத்தமல்லி எவ்வளவு ப்ரஷாக இருக்கிறதோ, அவ்வளவு சுவையை கொடுக்கும். ஆனால், இவை அது விரைவாக வாடிவிடும் போது அல்லது கருப்பாக மாறி கெட்டுப்போகும். சில நேரங்களில் மக்கள் அதை ப்ரஷாக வைத்திருக்க குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். அப்போதும் இது சில நாட்களில் காய்ந்துவிடும். இந்த பிரச்சனையை நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்கொண்டால், இதற்கு கவலைப்பட தேவையில்லை. இந்த 3 டிப்ஸ்களை பயன்படுத்தி கொத்தமல்லி இலைகளை ப்ரஷாக வைத்து கொள்ளலாம்.
காற்று புகாத கொள்கலனில் சேமிப்பது எப்படி..?
கொத்தமல்லி இலைகளை நன்கு கழுவி உலர்த்தி வைத்து கொள்ளுங்கள். கொத்தமல்லி இலைகளை நன்றாக உதறி ஈரப்பதமாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் . இப்போது அவற்றை காற்று புகாத கொள்கலனில் டிஷ்யூ பேப்பர் வைத்து பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். டிஷ்யூ அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதன்மூலம், கொத்தமல்லி ப்ரஷாக இருக்கும் . இந்த வழிகளை பின்பற்றுவதன்மூலம், கொத்தமல்லி இலைகளை சுமார் 10 நாட்கள் புதியதாக வைத்திருக்கலாம்.
ALSO READ: வேலை செய்யும் பெண்களா நீங்கள்..? வேகமான சமையல் குறிப்புகள்..!
ஃப்ரீசரில் ஐஸ் கியூப் தட்டுகளை பயன்படுத்துதல்:
கொத்தமல்லியை பாதுகாக்க இந்த ஹேக் கொஞ்சம் ஆக்கப்பூர்வமானது. மேலும், நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் . கொத்தமல்லி இலைகளை நன்றாக நறுக்கி , ஒரு ஐஸ் கியூப் தட்டில் நிரப்பி , அதில் சிறிது தண்ணீர் சேர்த்து உறைய வைக்கவும். உங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம், ஒரு ஐஸ் கியூப்பை எடுத்து கரையவிட்டபின் கொத்தமல்லியை சமைக்கலாம். இது கொத்தமல்லி இலைகள் கெட்டுப்போவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், பல நாட்களுக்கு பிறகும் கூட கொத்தமல்லியின் சுவையையும் தருகிறது .
ஒரு ஜாடியில் தண்ணீர் ஊற்றி வைத்தல்:
பூக்களைப் போலவே, பச்சை கொத்தமல்லியை தண்ணீரில் வைப்பதன் மூலம் ப்ரஷாக வைத்திருக்க முடியும். இதற்காக, ஒரு சுத்தமான ஜாடி அல்லது கண்ணாடியில் சிறிது தண்ணீரை நிரப்பி, பச்சை கொத்தமல்லி தண்டுகளை அதில் வைக்கவும் . இலைகளை ஒரு பிளாஸ்டிக் கவர் மூலம் லேசாக மூடி வைக்கவும் . இந்த வழியில், கொத்தமல்லி 5 நாட்களுக்கு பச்சை நிறத்துடன் ப்ரஷாக இருக்கும். ஒவ்வொரு 2 நாட்களுக்கும் தண்ணீரை மாற்ற வேண்டும் என்பது முக்கியம்.
ALSO READ: சுவையான டீ எப்படி தயாரிப்பது..? இப்படி ட்ரை செய்தால் ருசி அமோகம்!
நமது உணவின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பச்சை கொத்தமல்லி ஊட்டச்சத்து நிறைந்தது. வயிற்று பிரச்சினைகள், அமிலத்தன்மை, வீக்கம் அல்லது வாயு பிரச்சினைகள் உள்ளவர்கள் கொத்தமல்லியை சாப்பிட வேண்டும். இதில் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது.