AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

7 மாத கர்ப்பத்திலும் Hyrox சவால்.. உடற்பயிற்சியில் அசத்திய பெண் யார்?

Hyrox Challenge: 7 மாத கர்ப்பிணியான ஜென்னி Hyrox போட்டியில் பங்கேற்று, தனது உடல்நிலைக்கு ஏற்ப பயிற்சியில் மாற்றங்களைச் செய்து போட்டியை நிறைவு செய்துள்ளார். அதிக எடை மற்றும் அதிக தீவிரமான பயிற்சிகளைத் தவிர்த்து, மருத்துவரின் கண்காணிப்புடன் உடற்பயிற்சியைத் தொடர்ந்துள்ளார். அவரது வீடியோ வைரலான நிலையில், கர்ப்ப கால உடற்பயிற்சியில் தனிப்பட்ட உடல்நிலைக்கு ஏற்ப மருத்துவரின் ஆலோசனை அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

7 மாத கர்ப்பத்திலும் Hyrox சவால்.. உடற்பயிற்சியில் அசத்திய பெண் யார்?
கர்ப்ப கால உடற்பயிற்சிImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 05 Oct 2026 16:00 PM IST

7 மாத கர்ப்பிணியான ஜென்னி Hyrox உடற்பயிற்சி போட்டியில் பங்கேற்று அதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் அவர், கர்ப்ப காலத்திலும் தனது பயிற்சியைத் தொடர்ந்துள்ளார். கர்ப்பம் முன்னேறியதால் பயிற்சியின் தீவிரத்தை குறைத்து, உடல்நிலைக்கு ஏற்ப மாற்றங்களை செய்துள்ளார். அதிக எடை தூக்குதல், வேகமான ஓட்டம் மற்றும் சில கடினமான பயிற்சிகளை அவர் தவிர்த்துள்ளார். அவரது பயிற்சியை மகப்பேறு மருத்துவரும் தொடர்ந்து கண்காணித்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் அவரை பாராட்டியதுடன் சிலர் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பினர். கர்ப்ப கால உடற்பயிற்சியை மேற்கொள்வோர் தங்களது உடல்நிலை மற்றும் மருத்துவரின் ஆலோசனைக்கு ஏற்ப பயிற்சியைத் தேர்வு செய்வது முக்கியம்.

7 மாத கர்ப்பத்திலும் Hyrox போட்டி

மும்பையில் நடைபெற்ற Hyrox உடற்பயிற்சி போட்டியில் 7 மாத கர்ப்பிணியான ஜெனிஃபர் என்ற ஜென்னி பங்கேற்று போட்டியை நிறைவு செய்தது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. 37 வயதான இவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர்; தற்போது சீனாவின் ஷாங்காயில் வசித்து வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் இவர், Hyrox போட்டியில் பயிற்சியாளராகவும் பணியாற்றி வருகிறார்.

கர்ப்ப காலத்திலும் தொடர்ந்த பயிற்சி

கர்ப்பம் உறுதியான பிறகும் உடற்பயிற்சியை முழுமையாக நிறுத்தாமல், தனது உடல்நிலைக்கு ஏற்ப பயிற்சியின் தீவிரத்தை ஜென்னி மாற்றியமைத்துள்ளார். வாரத்தில் 3 முதல் 4 முறை குறைந்த முதல் மிதமான தீவிரத்தில் ஓட்டப் பயிற்சியும், 2 முறை வலிமைப் பயிற்சியும் மேற்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். Hyrox போட்டிக்கான குறிப்பிட்ட பயிற்சிகளையும் தேவைக்கேற்ப தொடர்ந்துள்ளார்.

பயிற்சியில் செய்த மாற்றங்கள்

கர்ப்பம் முன்னேறிய நிலையில் அதிக எடையைத் தூக்குவதையும் வேகமான ஓட்டம் மற்றும் ஸ்பிரிண்ட் பயிற்சிகளையும் தவிர்த்துள்ளார். பர்பீஸ் போன்ற சில பயிற்சிகளை மாற்றியமைத்து செய்ததுடன், அதிகபட்ச எடையில் 70 சதவீதத்துக்கு மேல் தூக்காமல் மிதமான அளவில் பயிற்சி செய்ததாக கூறியுள்ளார்.

மருத்துவ கண்காணிப்பும் முக்கியம்

ஜென்னியின் கர்ப்ப கால உடற்பயிற்சியை அவரது மகப்பேறு மருத்துவரும் தொடர்ந்து கண்காணித்துள்ளார். இதுகுறித்து நிபுணர்கள், கர்ப்பத்திற்கு முன்பே தீவிர உடற்பயிற்சியில் பழக்கம் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையுடன் உடற்பயிற்சியைத் தொடர முடியும் என்றும், கர்ப்பத்தின் நிலைக்கு ஏற்ப பயிற்சியின் அளவு மற்றும் தன்மை மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் கலவையான கருத்துகள்

ஜென்னியின் வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பலர் அவரை பாராட்டிய நிலையில், சிலர் கர்ப்ப காலத்தில் இத்தகைய தீவிர உடற்பயிற்சி குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்துமா என கேள்வி எழுப்பினர். இருப்பினும், சிக்கல்கள் இல்லாத கர்ப்பத்தில் மருத்துவரின் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்படும் பொருத்தமான உடற்பயிற்சி உடல் வலிமை மற்றும் மனநலத்திற்கு உதவக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கர்ப்பிணிகள் தங்களது உடல்நிலையைப் பொறுத்து மட்டுமே உடற்பயிற்சியைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே முக்கிய அறிவுறுத்தலாகும்.

குறிப்பு: கர்ப்ப காலத்தில் அதிக தீவிர உடற்பயிற்சியை தனிப்பட்ட முறையில் பின்பற்றுவதற்கு முன், மகப்பேறு மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

Follow Us